Wednesday, December 22, 2021

*'குழந்தைகளைத் திட்டுங்கள்'*

 இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்..
தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் கண்டித்துத் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை கண்டிப்புகளுக்குப் பழக்குங்கள்..
அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.
ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் கண்டித்துத்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?
பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.
இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.
அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நாம் வேண்டுவதா?
சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள்.
பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.
தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.
ஆம்..
*ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது..*
*அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..*
*தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது..*
*மற்றவர்களை மன்னிப்பது..*
*தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது..*
என இளஞ்செடியாக இருக்கும்போது கற்பித்து வேலி போடுதை விடுத்து, மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.
எனவே, 'அம்மா கண்டிப்பாங்க; அப்பா கண்டிப்பாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குவோம்
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...