Tuesday, December 28, 2021

அரசுசெய்தால்நல்லது. வணக்கம்.

 நாள் : 29 - 12 - 2021. புன் கிழமை .

மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ,திருச்சி சுவாமி நாதனின் அன்பு வணக்கம்.
மனித இனம் என்ற ஒன்று ,மனித வாழ்க்கையில் , பிறக்கும்போது , மகிழ்ச்சியும் இறக்கும்போது துக்கமும் கலந்தவைகளாக அமைந்துவிடுகின்றது.
மனித இனம் மகிழ்ச்சியாகவும்,நிம்மதியாகவும் வாழ ,தனி மனிதர்கள் ,அவர்தம் குடும்பத்து மகளிர் என குடும்ப உறவுகள் அனைவரும் ஏதாவது ஒரு முறையான வழியில் ,வருமானத் தைத் தேடிடும் கட்டாய நிலைக்கு ஆளாகின்றார்கள் .
அதற்குக் காரணம் , விலைவாசி உயர்வு , குடும்பத்தில் இருப்பவர் களுக்கு ,அவர்தம் உறவுகளுக்கு, மகிழ்வான விஷேஷங் கள், தினமும் சாப்பிட வேண்டிய மாத்திரை மருந்து மருத்துவ செலவுகள் வருத்தமான ,காரியங்கள் இவைகளை எல்லாம் தட்டிக் கழிக்க முடியாமல் ஆங்காங்கு கடன் வாங்கி அவ் வைபவங்களை நடத்தியே ஆக வேண்டிய கட்டாய கால கட்டத்தில் இருக்கின்றனர்.
மாநில அரசு ,மற்றும் மத்திய அரசு என இரண்டு அரசுகள் ,ஆட்சி செய்து வருகின்றனர்.
மத்திய ,மாநில அரசுகள் ,எவ்வளவோ சலுகைகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் செய்து கொண்டுதான் இருக்கின்றது. .அதனை மறுப்பதற்கோ மறப்ப தற்கோ இல்லை என்பதுதான் ஒவ்வொருவரின் அனுபவம் கண்ட உண்மை.
ஒரு சிறு விண்ணப்பம்.
எவ்வளவோ வகையில் , உதவி செய்து வருகின்ற மத்திய மாநில அரசுகள் , மனித இனத்தில் ,ஒருவர் இறந்து விட்டால், அவர் சமுதாய வழக்கப்படி அவருடைய இறுதிச் சடங்கினை , எவ்வித கட்டணமுமின்றி, ,அது ,தகனமாக இருந்தாலும், புதைப்பதாக இருந்தாலும் , அதனை இலவசமாக செய்து கொடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வரலாமே !
ஒரு மனிதன் வாழும்போது , எவ்வளவோ வகையான , வரி இனங்களை மத்திய மாநில அரசுகளுக்கு செலுத்தி யிருப்பார்.அரசு பணியாளர்களாக இரவு பகல் பாராது ,குடும்பத்தைவிட்டு ,மனைவி குழந்தைகளை விட்டு, பல ஆண்டுகள் வெளியூரில் மிகச் சிறப்பாக ,பணி ஓய்வு பெரும் வரையில் பணி புரிந்து இருப்பார்கள்.
அப்படிப்பட்ட , மனித இனத்தில் ஒருவர் இறந்து விடுகின்ற சமயத்தில் , இறந்தவருக்கு , அரசு மரியாதை செய்யும் வகையில், மத்திய மாநில அரசுகள் , ஒரு குடும்பத்தில் ஒருவரின் மரணத்தால் பாதிக்கப்படுகின்ற வர்களுக்கு ஆறுதலாக ,கட்டணமில்லா இலவச பிரேத தகனம் அல்லது பிரேதம் புதைப்பு ஏற்படுத்தப் படுமானால் ஒவ்வொரு குடும்பத்திலும் மிக்க மன நிம்மதியை கொடுக்கும்.
இவ் விண்ணப்பம் , நல்லதொரு வழிகாட்டுதலைக் கொடுப்பதற்கு உரிய வழி வகை பிறக்கு மென நம்பி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நன்றி ஐயா,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...