Friday, December 31, 2021

நள்ளிரவு கோயில்களுக்கு செல்ல வேண்டாம்.

 ஒரு நாளைக்கு அதிகபட்சம், ஆறு கால பூஜைகள் மட்டுமே கோயிலில்களில் நடத்தப்பட வேண்டும்.

ஆறாவது பூஜையானது, இரவு ஒன்பது மணிக்கு நடத்தப்பட்டு, வில்வ இலையில் இறைவனின் சக்தியை மாற்றி, அவரை பள்ளியறைக்கு கொண்டு சென்று மூடிவைத்துவிட்டு, மீண்டும் விடியற்காலை நான்கு மணிக்கே முதல் பூஜையை துவங்க வேண்டும்.
இதற்கேற்றார் போல் தான், அன்றைக்கு தானங்களும் வழங்கப்பட்டுள்ளன. கிரஹண நாட்கள், சிவராத்திரி தவிர்த்து கோயில்கள் நள்ளிரவில் திறக்கக் கூடாது.
நமக்கு, நாளின் துவக்கம் என்பது, சூரிய உதயம் சார்ந்த அதிகாலை தானே தவிர, நள்ளிரவு பனிரெண்டு மணி அல்ல.
ஆகையால் தயவுசெய்து, நள்ளிரவு கோயில்களுக்கு செல்ல வேண்டாம். ஆங்கிலப் புத்தாண்டுக்கு தெய்வதரிசனம் செய்ய நினைப்பவர்கள், விடிந்ததும் காலை நேரத்தில் கோயில்களுக்கு செல்லுங்கள்.
சிறப்பு தரிசனம் என்ற பெயரில் ரூ.300, 500 என்று திருடர்களுக்கு தீனி போட நினைக்கும் பணத்தை, உங்கள் ஊர்களில் ஒருகால-பூஜைக்குக் கூட வழி இல்லாமல் இருக்கும் கோயில்களுக்கு, எண்ணெய் வாங்கிக் கொடுத்து, விளக்கேற்ற வழிவகை செய்யுங்கள்.
அந்த கோயில்கள் புத்தொளி பெறுவது போன்றே உங்கள் வாழ்வும் புத்தொளி பெறும்.
வரும் ஆங்கில புத்தாண்டு 2022 உங்கள் அனைவருக்கும் சிறப்பாய் அமைந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...