Friday, December 31, 2021

அனுமன் ஜெயந்தி.....(02/01/2022).

 நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்டு வடைமாலை அலங்காரம் செய்யப்பட உள்ளது.

அதற்காக வடைகளை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில், 18 அடி உயரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்ட மாலை சுவாமிக்கு சாத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அன்னதான மண்டபத்தில் தொடங்கியது. கோயில் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் அய்யர் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் தொடர்ந்து 7-ஆம் ஆண்டாக நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வடை மாலையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2,050 கிலோ உளுந்த பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டர் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வடைகளை தயாரித்து வருவதாகவும் கூறினர்.
இதுகுறித்து ஆஞ்சனேயர் கோயில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:-
வடைகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். 1-ஆம் தேதி (சனிக்கிழமை) வடையை மாலையாக கோர்க்கும் பணி நடைபெறும். அன்று நள்ளிரவு முதல் நாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு வடை மாலை சாத்தப்படும். வருகிற 2-ஆம் தேதி 1 லட்சத்து 8 வடை மாலையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அன்று தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்படும் என்றார்.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்.
May be an image of 4 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...