Wednesday, December 29, 2021

அண்ணா மலையிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும் சசிகலா?..

  அதிமுகவிற்குள் எப்படியாவது மீண்டும் அடியெடுத்து வைத்துவிட வேண்டும் என்பதில் இலவு காத்த கிளியாக இருக்கும் சசிகலா.. முக்கியமான சில தலைவர்களை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வருகிறாராம்...

அதிமுக கட்சிக்குள் கடந்த 2 மாதமாகவே ஏகப்பட்ட மாற்றங்கள், அதிரடிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அதிமுகவில் ஒரு தரப்பு சசிகலாவிற்கு ஆதரவாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது..
அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூட சமீபத்தில் பேசி இருந்தார்.
ஆனால் அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பும், அவரின் ஆதரவாளர்களும் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வரவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அன்வர் ராஜா போன்றவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கும் கூட இதுவே காரணமாக இருந்தது.
இனி சசிகலா அதிமுகவிற்குள் வர வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில்தான் தற்போது சசிகலா கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவினர் மத்தியில் கவனம் பெற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். முக்கியமாக ஓபிஎஸ்ஸின் சமீபத்திய ஸ்டேட்மெண்டுகள் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கும் திட்டத்தில் சசிகலா இருக்கிறாராம்.
அரசியல் ரீதியாக வாய்ஸ் உள்ளவர்களை சந்தித்து சசிகலா ஆதரவு திரட்டி வருகிறாராம். அதை முன்னிட்டுதான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்தார். இதில் டெல்லி மேலிடத்திற்கு தன்னை குறித்து 'குட் - பீட்பேக்' அனுப்பும் வகையில் சசிகலா ரஜினி தரப்பிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வந்தன. 17 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதற்கு ரஜினிகாந்த் சம்மதிக்க வில்லை என்று கூறுகின்றனர்.
இதை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களை சந்திக்க விரும்பினார் சசிகலா. இதற்கான தகவலும் சசிகலா தரப்பில் பாஸ் செய்யப்பட்டது.
ஆனால் பலர் சசிகலாவை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. தேவையில்லாத பிரச்சனை ஏன் என்று சிலர் ஒதுங்கிவிட்டனர். சிலர் பின்னர் சந்திக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம். இதனால் ஒரு வாரமாகியும் தலைவர்களிடம் இருந்து பாசிட்டிவ்வான பதில் எதுவும் வராததில் அப் செட்டாகியிருக்கிறாராம்
சசிகலா.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரஜினியை சந்தித்து விட்டு வந்திருக்கும் நிலையில், அண்ணாமலையை சந்திக்க யோசித்து வருகிறாராம் சசிகலா. அவரிடம் இருந்து ஆதரவு வந்தால் தனக்கு அது வலிமை சேர்க்கும் என்று சசிகலா கருதுகிறாராம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அண்ணாமலை, சசிகலா செய்தது சரி தவறு என்றெல்லாம் தனியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதிமுக வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு நன்றாக இருக்கும். கட்சியின் நல்ல, மூத்த தலைவர்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். இதில் அவர் அதிமுகவிற்கு சசிகலா வரவேண்டும் என்று கூறவில்லை என்றாலும் அண்ணாமலையின் இந்த கருத்து சசிகலாவிற்கு ஆதரவானதாக பரப்பப்பட்டது.
ஆனால் அண்ணாமலை எங்கும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று கூறவே இல்லை. இதையடுத்து சசிகலா விவகாரத்தில் எங்களுக்கு அண்ணாமலை என்ன அட்வைசரா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலையை சந்திக்கும் யோசனையில் சசிகலா இருக்கிறாராம்.
அண்ணாமலையை வெளிப்படையாக சந்தித்தால் சரியாக இருக்குமா? தனிப்பட்ட முறையில் சந்தித்தால் சரியாக இருக்குமா? என்பதில் சசிகலாவுக்கு குழப்பம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை இந்த மீட்டிங் நடந்தால் தமிழ்நாடு அரசியலில் அது முக்கியமான ஒன்றாக இருக்கலாம் என்று சசிகலா ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள்...
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...