Wednesday, December 29, 2021

தி.மு.க.,வின் பெயரை த.மு.க. என்று மாற்றுவீர்களா.???

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக மாற்ற, தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தி.மு.க., அரசு பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும், திராவிடத்தை முன்னிலைப்படுத்த கட்சி முயற்சிக்கிறது என்றால், அதன் உள்நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை.
தமிழர்கள், தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, கனடா போன்ற நாடுகளிலும் அதிகமாக வசிக்கின்றனர்.
தமிழக அரசின் ஆணை, அவர்களை கட்டுப்படுத்த போவதில்லை.
தமிழகத்தில் உள்ள தி.மு.க., தொண்டர்கள் மட்டும் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவர்;
ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும், சித்திரை முதல் நாளை தான் கொண்டாடுவர் அது, தி.மு.க., அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.
தமிழ் புத்தாண்டு என்பது, தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்தது. அசுவினி முதல் ரேவதி வரை, 27 நட்சத்திரங்களையும்; மேஷ ராசி துவங்கி மீனம் வரையுள்ள, 12 ராசிகளுக்குள் வரையறுத்து வைத்தான் தமிழன்.
12 மாதங்களுக்கும் முறையே ஒவ்வொரு ராசி என, கணக்கிட்டு வைத்தான்.தமிழர் பண்பாட்டை சிதைக்க முற்பட்டால், வாழ்வியலில் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டி வரும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, தமிழ் நிலப்பரப்பை ஐந்தாக பிரித்து, அவற்றிற்கு முறையாக முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை போன்ற இறை வடிவங்களை வழிபடுகிறான்,
தமிழன்.நாளையே, 'கருணாநிதியின் வம்சாவளியினரை, ஐவகை நிலங்களின் தலைவர்களாக நியமித்து புதிய அரசாணை வெளியிடுவோம்' என, தி.மு.க., அரசு முயற்சி செய்தால்,
அதற்கு முன்னால், தமிழ் இலக்கண நுால்களில் மாறுதல் செய்ய வேண்டும்.'மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்கிறது, தொல்காப்பியம்!
முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு தெரியுமா?
உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ் மீது பற்று இருந்தால், திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை, 'தமிழர் முன்னேற்ற கழகம்'என்று மாற்றட்டும்.
அதற்கு பின், தமிழ் புத்தாண்டை மாற்றுவது குறித்து யோசிக்கலாம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...