Thursday, December 30, 2021

திமுகவின்_மாபெரும்_கொள்ளை!

 நீண்ட அரசியல் பதிவு !

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்தியா முழுமையான சட்ட மறுசீர்அமைப்பு செய்யாத வரை 3 அடி முன்னேறினா 2 அடி சறுக்கவே செய்யும்.
இப்போது இருக்கும் சட்டங்கள் காலவதியாகி வெகு காலம் ஆகிவிட்டது. முன்னேறிய நாடுகள் எதிலும் இத்தனை பழமையான துருபிடித்த சட்டங்கள் இல்லை !
சமீபத்திய உதாரணம். நகை கடன் தள்ளுபடி !
"5 பவுன் - 40 கிராம் தங்க நகைகளை அடகு வையுங்கள். அடுத்த ஆட்சி நம் ஆட்சிதான். தலைவர் நிச்சயமா தள்ளுபடி செய்துவிடுவார். சீக்கிரம் போய் கூட்டுறவு வங்கியில் அடகு வையுங்கள்” என்று இன்றைய முதல்வரின் மகனே பகிங்கரமாக ஊக்கு வித்தார். 48 லட்சம் பேர் அப்படி அடகு வைத்தனர் என்று அரசே ஒத்துக் கொள்கிறது.
இப்போது வெறும் 13 லட்சம் பேர் கடன்கள் மட்டுமே தள்ளுபடி என்கிறது அரசு. இந்த கதைக்கு பிறகு வருவோம்.
முதலில் இந்த அயோக்கியதானமான பேச்சில் இருக்கும் பித்தலாட்டத்தை பிரித்து பார்போம்.
1.முதலில் இது போன்று உதயநிதி (முதல்வரின் மகன்) சொல்ல லாமா? தள்ளுபடி என்று சொன்னாலும் இந்த வாக்குறுதி விவசாயிகளுக்கு மட்டுமானது என்று விளக்கம் உண்டா? தள்ளுபடி என்று சொன்னாலும் இது கிட்டதட்ட ஒரு லஞ்சம் தானே ! ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சத்தி 20,000 ரூ தருகிறோம் என்பதை போன்ற லஞ்சம் தானே !
(ஒரு கிராம 4500 ரூபாய் என்றாலும் வெறும் 3000 ரூபாய் மட்டுமே கடன் தருவதாக கணக்கில் எடுத்தாலே 40 X 3000 = 1,20,000 ரூபாய்)
2. சரி.. இவர்கள் தள்ளுபடி என்றாலும் அந்த பணம் நம் வரிப்பணத்தில் இருந்து வந்ததுதானே?? ! இப்போது அதை யார் தலையில் காட்டுவது?
3. சரி.. இந்த ஒரு பிராடுத்தனத்தின் மூலம் எத்தனை கோடிகள் நம் தலையில் மிளகாய் அரைக்கப் படும் என்று தெரியுமா? வெறும் 5 பவுன் நகை கடன் எனும் போது அந்த கொள்ளையின் முழு பரிமாணம் தெரிவதில்லை ! பணமாக கணக்கு போட்டு பாருங்கள. தலையை சுற்றும்.
ஒரு கடன் மனுவுக்கு ::- 1,20,000
13,00,000 கடன் மனுவுக்கு :- 15,600 கோடிகள்.
இந்த அக்கிரமத்தை நாம் ஏன் சகிக்க வேண்டும்? இந்த பணம் பெரும் ஒரு குடும்பத்தில் கூட எந்த விதத்திலும் நியாயமான காரணிகளுக்காக செலவழிக்கப் பட போவதில்லை.
சும்மா வந்த காசு தானே! என்று ஆழும் பாழுமாகவே போகும். பல வீட்டில் சாராய கடையிலும் பிரியாணி கடையிலும் செலவழிந்து கடைசியில் தனியார் மருத்துவ மனையில் போய் முடியும்.
இந்த நகைகடன் தள்ளுபடிகள் எல்லாம் நகரத்தில் இருக்கும் ஒருவருக்கும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இந்த பணத்தை எடுக்க போடப்படும் வரிகள் என்னவோ நகர மக்களும் சேர்ந்துதான் அழ வேண்டும்.
எவனோ பிரியாணி திங்க நான் ஏண்டா வரி கட்ட வேண்டும் என்று ஒருவரும் கேட்பதில்லை. காரணம் தமிழக/இந்திய மக்களுக்கு பணம் எப்படி வருகிறது அது எப்படி போகிறது என்று ஒரு எழவும் தெரியாது. அதை பற்றி கவலை படுவதும் இல்லை !
சரி.. இப்போ நாளைய முதல்வர் உதயண்ணா சொல்லிட்டார் என்று 48 லட்சம் பேர் நகைகடன் வாங்குனார்கள். இப்போ அதற்கு 15 வரைமுறைகளை வைத்து வடிகட்டி 13 லட்சம் பேர்களை மட்டும் பயனாளிகளாக அறிவிக்கின்றனர். அப்ப மிச்சம் இருக்கும் 35 லட்சம் பேர் என்ன தொக்கா?
எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று ஏன் வழக்கு தொடர கூடாது? அவர் பேசியது சரி என்றால் வழக்கை அனுமதிக்க வேண்டும். பேசியது செல்லாது என்றால் அவருக்கு தண்டனை தர வேண்டும்.
செய்யுமா இந்த நாட்டின் நீதி மன்றங்கள். செய்யாது.
காரணம் ஊசி போன சட்டங்களின் பக்கம் கையை காட்டி நகரும்.
இதே மேலை நாடுகள் என்றால் இந்நேரம் உதயநிதி கைது செய்யப் பாடுவார். (இப்படி வாக்குறுதி கொடுத்தால் ஜெயிக்கவே மாட்டார் என்பது வேறு விஷயம்.)
இப்போது 24% வட்டி தரேன் என்று சொல்லி மொத்ததையும் சுருட்டும் சீட்டு கம்பெனிக்கும் உதயநிதிக்கும் என்ன வித்தியாசம்.?
இதெல்லாம் தாண்டி இதில் இருக்கும் மிகப் பெரிய உச்சபட்ச காமெடி !
வழக்கமாக தேர்தலில் நிற்கும் போது சொந்த பணத்தை செலவு செய்துவிட்டு பின் ஜெயித்து வந்த பின் கொள்ளை அடிப்பது பழைய டெக்னிக்.
திமுகவின் லேட்டஸ்ட் டெக்னிக் .. உங்க வங்கி பணத்தை உங்களை விட்டே கொள்ளையடிக்க வைத்து அதை தாங்கள் தந்ததாக நம்ப வைத்து
பதவிக்கு வருவது!! பதவிக்கு வந்தபின் வரி என்று போட்டு அதே பணத்தை திரும்ப உங்களிடம் இருந்து வசூலிப்பது. எப்பூடி !1
இது புதுசு !! நல்லாயிருக்கில்ல!!
ரவி சுந்தரம்
30/12/2021
பி. கு:- இந்த நவீன கொள்ளை பற்றி ஏன் எந்த வல்லுனரும் பேசுவதில்லை ! அது சரி.. இவிங்க எதுக்குதான் பேசியிருக்கிறார்கள்?
மோடியை திட்ட சொல்லு ! கிளம்பி வருவானுங்க !
2. வழக்கப் படி பகிர தடையில்லை !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...