Wednesday, December 22, 2021

டிசம்பர் 22.

 கடலின் கோரத்தாண்டவத்தில் ஒரு ஊரே ஜலசமாதி அடைந்த தினம்.

1964 ல் நள்ளிரவு 12:10 மணிக்கு புயல் மற்றும் கடலின் கோரத்தாண்டவத்தால் அழிந்து மண்ணோடு மண்ணாக போன அந்த ஊர் தனுஷ்கோடி.
ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி.
இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி.
என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு.
வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் 1964 ம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான். இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டிடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை.
அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது.
இதில் 1,800க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
May be an image of train and railroad

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...