Tuesday, December 28, 2021

தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது....

 #பாவம்

பங்காளிக்கு
ஆடி கார் போல
பி ஆர்.பாண்டியன்
பென்ஸ் காருக்கு
ஆசைப்படுறாரோ?
"கண்ணுல கோளாருனா
கண் டாக்டர்ட்ட போங்கய்யா....
மூட்டுவலி டாக்டர்கிட்ட
வந்து முட்டிகிட்டு கிடக்காய்ங்க"....
இது நான் சொல்லவில்லை
ப்பீ ஆர் பாண்டியனின்
பப்ளிகுட்டி வெறியைப்பார்த்து
பொது ஜனம் ஒருவர் புழுங்கிச் சொன்ன
கருத்து!
மத்தியில ஆளுறது
பீஜேபீ கர்நாடகாவுல
ஆட்சி செய்றதும் பீஜேபீ
ஆனா பாண்டியன் அணைக்கட்டுக்கு
எதிரா போராட்டம் நடத்த
டோக்கன் அமௌன்ட்
அட்வான்ஸா வாங்குறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிய எதிர்த்து போராட!
"ஒம்போது மாசம் ஜந்தர்மந்தர்ல
ஜட்டி தெரிய. போராடிட்டு
பத்தாவதுமாசம் அமித்ஸாவுக்கு நன்றி சொன்ன ஆளு
லம்ப்பா அடிச்சுட்டாராமே
நீயும் இருக்கியே தெண்டமா" என வீட்டம்மா கத்திய காட்டுக்கத்தலுக்கு
பயந்து காசு பார்க்கும் ஆசையோடு காங்கிரஸை
வம்பிழுத்துப்பார்க்கிறார்...
அதுசரி
டிமான்ட் இருக்கும் சரக்க வச்சாத்தானே மார்க்கெட்டிங் பண்ணமுடியும்?
ச்சீமானில் ஆரம்பிச்சு
மே 17 போனியல்காந்தி
இன்னமும் பரோல்வாழ்
பாவிகளுக்காக பல்லைக்காட்டி துள்ளிக்குதிக்கும்
ஈயம்பித்தளை ஓட்டை உடைசல்கள் எல்லோருமே
கட்சி கட்ட கடை விரிக்க
காட்சிப்பொருளாக அவர்களுக்கு உதவுவது
காங்கிரஸ்மட்டும்தானே....
ஊருக்கு இளைச்சவன்
பிள்ளையார் கோவில் ஆண்டி...
ஐம்பது வருஷமா காங்கிரஸுக்காக உழைச்சவன் ரோட்டில் நிற்க அஞ்சாறு மாசமா காங்கிரஸ திட்றவன்கூட
குபேரனாகும் கூத்து தமிழ்நாட்டில் மட்டும்தான்
நடக்கிறது....
இது மோடி நத்தும் தம்போலா சூதாட்டம்!
இன்று குரைக்கும்
இந்த இழி மனிதர்
கோட்டூர் யூனியன் சேர்மனாக இருக்கும்போது செய்த லீலைகள்
அடித்த கொள்ளைகள்
கையும் களவுமாய் பிடிபட்டு கம்யூனிஸ்ட் கட்சி
கழுத்தைபிடித்து வெளியே தள்ளிய விவகாரங்கள் என எல்லாமே இப்போதுதான்
ஒவ்வொன்றாய் வெளிவருகிறது!
சொல்வதெல்லாம் உண்மை புகழ் "ஆத்தா அண்ணபூரணி"க்கு
ஆம்பள வேசம் போட்டா
அண்ணன் பாண்டியன்தான் பளிச்சுனு ஞாபகத்துக்கு
வராறாரு....
பலர் புழங்கினா
இரும்பா இருந்தாலும்
ஒடுக்கு இருக்கத்தானே
செய்யும்....
பாவம் பச்சத்துண்டு
பாண்டியன்!
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...