
சிறுபிள்ளை தனத்தின் உச்சம் எது தெரியுமா?

எட்டிப் பார்த்தாலும் சரி மண்ணைத்
தோண்டிப் பார்த்தாலும் சரி யாரையும்
காண முடியாது.

இந்த காலத்தில்
இந்த ஜென்மாவில்
சந்தித்ததும்
பழகியதும்
உறவாடியதோடும்
சரி இனி எந்த காலத்திலும்
இதே உருவத்திலோ
இதே உறவிலோ
மீண்டும் பார்ப்பது என்பது இயலாதது.

தேக்கி வைத்து
வருங்காலத்தில்
உறவாடலாம் என்பது
சிறுபிள்ளைத் தனமே.

இந்த காலத்தில்
இந்த ஜென்மாவில்
வாழ்ந்தது மட்டுமே
வழங்கப்பட்டது.

எப்படி வைத்துக் கொள்ள
விரும்புகிறாயோ
அப்படியே அமையும்.

பாசமும் உருக்கமுமா
தீர்மானிக்கவேண்டிய ஆள் நீயே.

வருவார் என்று
ஏங்கி தவிப்பதும்
ஏன் இன்னும் அவர்களுக்கு
பசிக்கு உணவும்
உடுக்க உடையும்
படைப்பது அன்பின் மிகுதிதானே தவிர
எந்த பயனும் விளையாது.

அவர் கர்மாபடி உடனே
மாறிவிடுகிறது.
இதற்கு முன்னும் அவர் நமக்கு
எந்த தொடர்பும்
அற்று இருந்தார்.

மனிதனாகவா
விலங்காகவா
மாற்று புள்ளினமா
எதுவோ ஒன்று.
நிச்சயம்
மனிதனாக மட்டும்
இல்லை.

இப்போதும் இறந்ததும்
மனித நிலை மீண்டும்
அமைவதில்லை.
இதை உணராததையே
சிறுபிள்ளை தனம் .
உண்மை ஒருபுறம்
ஒதுங்கி இருக்கிறது.

ஓடிக்கொண்டு இருக்கிறாய்.
உன் பாசம் அன்பு கருணை அனைத்தையும்
இந்த ஜென்மாவிலே
காட்டி விடு.

பொறுத்துக் கொள்.
இனி இந்த உருவம்
எப்போதும் தொடர்புக்கு வராது
மறையப் போகிறது
என்கிற போது
எவ்வளவு சிரத்தை வேண்டும்.

மருத்துவ மனைகளில்
காசை இறைத்து
காப்பாற்றிவிட துடிக்கிற துடிப்பு இருக்கிறதே
அனுபவித்தால் தெரியும். இழந்து விடக்கூடாது என்ற வேகம் பதைபதைப்பு
அதேமாதிரி
வாழும் ஒவ்வொரு நொடியும் வேண்டும்.

உண்மை உறைக்க வேண்டும். தாய் தந்தை மனைவி குழந்தை நெருங்கிய நட்பும் உறவும் நம்மை ஆக்கரிஷித்திருந்ததை திருப்பிப் பார்க்கும் போது ஒரு தடவை வாழ்க்கை ஆம் ஒரே தடவை வாழ்க்கை இதை விட்டு விடலாமா?

உணர்ந்து உணர்ந்து
ஸ்ரீ கிருஷ்ணனை நினைந்து, நினைந்து
நிறைவைத் தரும்படி
வாழ்ந்துவிடு.
இது ஒன்றே
இதற்கு தீர்வு.
அந்த வாழ்க்கை தான்
அறவாழ்வு.

தன்னை உணர்ந்தும்,ஸ்ரீ கிருஷ்ணனை நினைந்தும்
தன்னோடு இருப்பவரை
அனுசரித்தும்
வாழும் வாழ்வை
இன்றே கடைபிடிப்போம்.
கிடைத்தப் பிறப்பிற்கு
நன்றி செய்வோம்.


இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.
No comments:
Post a Comment