மழை வந்தது! – (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்)
மழை வந்தது!
(ஜனவரி 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)
மாமழை போற்றுதும்… மாமரை போற்றுதம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்ற மழை… இன்று தமிழக மக்களால் மாமழைத் தூற்றுதும் என்று வாங்கிக்
கட்டிக்கொள்ளுமளவிற்கு பெய்துள்ளது. மழை யே மழையே போ போ (Rain Rain Go Away) என்று குழந்தைகளோடு பெரியவர்களும் வேண்டிக் கொண்டது பரிதாபக் காட்சி
தீபாவளிக்குப்பிறகு தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை தொடர் மழையாகி… அடர் மழை யாகி… பெருமழையாய் பெயர் மாறி… பேரிட ராய் பெய்து ஓய்ந்தது. இந்த பேய் மழையில் (பேய் படங்களை வருண பகவான் பார்த்திருப்பாரோ) கடலூரின் பகுதிகள் காணாமல்போயின• கரையோர மக்களின் வாழ்க்கை கரைந்து போனது. கூவம் தெளிந்து வழிந்தது. ஆனால் மக்கள் குழம்பித் தவித்தனர். செருக்குடன் இருந்த சென்னையின் வாழ்க்கை… செல்ல வழித் தெரியாத வெள்ளத்தால் சீர்க்கெட்டு போனது.
இத்தனை இழப்புகள், இடர்பாடுகள் உயிர்சேத ங்கள், பொருட்சேதங்கள் ஏற்பட்டாலும் கூட இந்த மழை நல்லது தான்.
இயற்கையை சுரண்டி இருப்பிடமாக்கிக் கொ ண்டவர்களையும், விளை நிலங்களை வீடாக் கியவர்களையும், நீர்வழித்தடங்களை வழி மறித்தவர் களையும் அடையாளங் காட்டியி ருப்பதால் இந்த மழை நல்லது. வருமுன்காப்போம் என்பதற் கு பதிலாக வந்த பின்பு பார்ப்போம் என்று மெத்தனமாக இருந்த அரசையும் அரசு அதிகா ரிகளையும் உறக்கத்திலிருந்து உதைத்து உட்கார வைத்திருப்பதால் மழை நல்லது.
தார் மேல் தார்போட்டு… சாலைமேல் சாலை யமைத்து.. கால்வாய்களை மூடி… கான்கிரீட் சாலையமைத்து தொலைநோக்கு பார்வையை த்தொலைத்த பொதுப் பணித்துறையின் பொறு ப்பற்றத்தனத்தை புரிந்துகொள்ள வைத்தமழை நல்லது தான்.
பசியில் தவிப்பவனுக்கு தரும் ஒரு அங்குல ரொட்டியில்கூட படம்வருவதற்கு ஆசைப்பட்ட விளம்பர.. அரசியல்.. வியாபாரிகளைவெளிச்ச ம் போட்டுக் காட்டிய மழை நிச்சயமாய் நல்லது தான்.
பசியில் தவிப்பவனுக்கு தரும் ஒரு அங்குல ரொட்டியில்கூட படம்வருவதற்கு ஆசைப்பட்ட விளம்பர.. அரசியல்.. வியாபாரிகளைவெளிச்ச ம் போட்டுக் காட்டிய மழை நிச்சயமாய் நல்லது தான்.
பணத்திற்காக உறவுகளை உதறியவர்க ளை ஒன்று சேர்த்த இந்த மழை… பூட்டிய வீட்டுக்குள்ளேயே இருந்த பக்கத்து வீட்டு க்கதவை திறக்க வைத்த மழை… எதை வேண்டுமானாலும் இழக்கலாம். உறுதி யையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்பதை உணர்த்திய மழை நல் லதுதான். இந்தமழையால் இளைய சமுதாயத்தின் சமூக பொறுப்புணர்வு வெளிப்பட்டது. சகிப்புத்தன்மை இல்லை என்ப வர்களின் முகத்தில் சாணி அடிக்கிற அளவிற் கு ஜாதிமத இனபேதம் தொலைந்து மனிதம் வெளிப் பட்டது.
மூழ்கியது நகரம், எழுந்தது மனிதநேயம், என்கிற உரத்த சிந்தனையை உலகிற்கு ஒரே நாளில் வெளிப்படுத்திய மழை நல்லதுதான்.
No comments:
Post a Comment