உங்கள் தினசரி வாழ்க்கை தொடர்பான விவரங்களை இணைய வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட் டரும், பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது.
எங்கு பார்த்தாலும் வரிகள், வரிகள் என்று வெறுப்பும் உண் டாகலாம். ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவரங்களை இ ன்னும் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள புதிய சேவை mycro.media.mit.edu ஒன்று அறிமுகமாகியுள்ளது.
அதே போல இணையவாசிகளும் தங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்களை வரைபடமாக பகிர்ந்து கொள்ள மைக்ரோசோம் வழி செய்கிறது.
உதாரணமாக ஒருவர் படித்த புத்தகம் பற்றி தகவல் தெரிவி க்க விரும்பினால் ஒரு வட்டத்தில் புத்தகத்தை படிக்க செல விட்ட நேரத்தை தனி வண்னத்தில் சுட்டிக்காட்டலாம். அதே போல ஒரு நாள் செய்த வேலைகளை தனி தனியாக பிரித்து காட்டலாம்.
இன்பர்மேஷன் ஓவர்லோடு என்று சொல்வது போல எல்லா வற்றையும் வரிகளாக படித்து பார்ப்பதில் ஒருவித சுமையை உணர்ந்தால் இந்த தளம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
No comments:
Post a Comment