தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம்உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில்
அமர்ந்து கொண்டோ தியானம் மேற் கொள்ளலாம். நமக்கு எந்த இடத் தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியா உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலா ம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கண்களை மெதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாரு ங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்கா க்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம்.
மந்திரங்களை ஒதும்பொழுதோ அல்ல து முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.
ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டு ம்.
நம்முடைய உடல் முறறி லும் சகஜநிலையில் இரு க்கும் பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மற்றும் அறிவு நிலைக்கு…
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ண மே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற் றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்ல வேண் டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம் .
இதனால், நாம் நம் மூச்சுக் காற் றை கவனிக்கத் துவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் செய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெ ளியே விடுவதும் நமக்குத் தெரிந் து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும், வெளியனுப்புவதும் தண்னிச்சை யாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக்கவனித்தல் மட்டு மே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறா மல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப்பின்ஓடாதீர்க ள் .
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக் கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங் கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலை களின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிக வும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில் . . .
ஒருவருக்கு சுவாசமும் இருக்கா து, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமை யான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவ த்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்
No comments:
Post a Comment