அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம் அமைப்பு ஒன்று ரூ.15லட்சம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் செயல்படும் `ஹுசேனி டைசர்ஸ்’ என்னும் ஷியா முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் ஷமின் ஷாம்சி இது குறித்து கூறியதாவது:-
நீண்ட கால அயோத்தி பிரச்சினைக்கு இப்போதுதான் தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட இதுதான் சரியான நேரம்.எனவே அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி வக்புபோர்டிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது சம்பந்தமாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்திடமும் பேச இருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்காக ரூ.15 லட்சம் நன் கொடை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment