ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் என்பதை
இந்த பதிவில் காணலாம்.
ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்!
என்ன இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முத லில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம்.
குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும்
குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும்
நெய் எறியும் அகல் – சிவனையும்
திரி – தியாகம்
தீபம் – திருமகளையும்
சுடர் – கலைமகளையும் குறிக்கிறது
குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண் டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும்.
அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் மூலமாக வீடுமுழுக்க ஒளிபரவச் செய்கின்றனர்.
No comments:
Post a Comment