எழுத்துக்கு மரியாதை எப்போது?
– விரல்கள் எனும் உளிகளால் செதுக்கப்பட்டது..
பாரதி விருது, கம்பர் விருது, பாரதிதாசன் விருது, அவ்வை விருது, மொழிபெயர்ப்பு எழுத்தாளருக்கு
விருது, பெண் படைப்பாளிக்கு விருது, பத்திரிகை யாளருக்கு உதவித் தொகை, பாரதிதாசன் பிறந்த நாளை அரசு விழாவாக்கியது… இப்படி எழுத்தாளர் களை சிறப்பிக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்
பேசும் மொழியில் தமிழில்லை, தமிழ்வழிக்கல்விக்கு வரவேற்பில்லை. தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை, சின்னத்திரைகளிலும், வெள்ளித்திரைகளிலும் வியாபாரநோக்கோடு லட்சக்கணக்கில் வெளியாகும் வார, மாத இதழ் களிலும் தமிழ்மொழி சிதைந்து வருவதை அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆட்சிக்குவரத்துடிக்கும் எந்தவொரு தமிழ்க் கட்சியும் கவலைக் கொள்ளவில்லை.
பெருமைக்குரிய தமிழ்மொழியை இன்றும் உலகளவில் காப்பாற்றி அதற்கு பெருமை சேர்த்து வருவது பல நல்ல எழுத்தாளர்களும், கவிஞர்க ளும் ஆங்காங்கே தமிழ்ப்பற்றோடு மிகுந்த சிரமத் துடன் வெளியாகும் சிற்றிதழ்களும் சின்னச்சின்ன இலக்கிய அமைப்புகளும் ஒரு சில தமிழ் ஆர்வலர்களும் தான்.

தமிழுக்காக தன்னையே தந்துவரும் எழுத்தா ளர்களின் இன்றையநிலை என்ன? 6 கோடி தமி ழர்களின் வாழும் நாட்டில் ஒரு எழுத்தாளரின் நூல் 2000பிரதிகள் மட்டுமே வாங்கப்படுகிறது என்பதும் அதற்கான ஆணைக்கூட கடந்த சில ஆண்டுகளாய் வழங்கப்படவில்லை என்பதும் வேதனைக்குரியது. வெட்கத்திற்குரியது. தன் ஓய்வூதியப் பணத்திலோ, கடன் வாங்கியோ அல்லது நகை நட்டுகளை விற்றோ ஆயிரக்கணக்கில் நூல்களை அச்சடித்து விற்கமுடியாமல் தவி த்து எழுதுவது வீணோ என்று நொந்துபோயிருக்கும் எழுத்தாளர்கள் ஏராளம் ஏராளம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற பொன்மொழி பொய்யாகா மல் இருக்க• . . மெல்லத் தமிழ் இனி அழியாமல் இருக்க எழுத்துக்கு மரியாதை கிடைக்க என்ன செய்வது?
அந்தந்த மாவட்டங்களிலேயே அரசு சாராத அறிஞர் குழுவினரால் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்வுப் பெற்ற நூல்கள் எவருடையதா யினும் குறைந்தபட்சம் 5000 பிரதிகள் வாங்கிக்கொள்ள அரசு ஆணை பிறப்பிப்பதோடு அத்தொகையை ஒரே தவனையில் வழங்கிட வழி காண வேண்டும்.
உழவர் சந்தை போன்று அரசாங்கமே புத்தகச் சந்தை யை அந்தந்தமாவட்ட நூலகங்களில் மாதந்தோறும் ஏற்பாடு செய்து வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். அரசு மற்றும் பள்ளி விழாக்களில் நூல்க ளையே பரிசாக வழங்க சட்டம் இயற்ற வேண்டும்

மதிக்கெடுக்கும் மது விற்பனைக்கு முக்கியத்துவம் தரும் அரசின் கவனத்தை மதிவளர்க்கும் எழுத்தாளர் களின் பக்கம் திருப்ப… இந்த உரத்த சிந்தனையை எல்லோரும் இணைந்து உணரத்த வேண்டும்.
No comments:
Post a Comment