எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு இந்த தேசம் ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும், அரசியல் காழ்ப் புணர்விலும், சிக்கிச் சின்னா பின்னமா கியிருக்கிறது.
அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத் தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வரம்பு மீறியிருக்கிறார் என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக த் தெரிவித்திருககிறது. உள்துறை, பிரதமர் அலுவலகத்தில் சம்ம தமில்லாமல், இப்படி ஒரு வரம்பு மீறல் நடந்திருக்குமா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.
வீட்டு வசதி ஊழல் கார்கில் தியாகிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் விளை யாட்டில் ஊழல் இவற்றைத் தொடர்ந்து இந்திய வானியல் ஆராயச்சி மையம் (ISRO) அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் தவறுகள் நடந்திருப்பதாக சொல்லி அதன் முன்னாள் தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் மீது புகார்கள் எழுந்துள்ளன•
இராணுவத் தளபதியின் வயது விவ காரம் நம்முடைய அரசு நிர்வாகம் எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்ப தைக் காட்டுவதுடன் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளா கியுள்ளது.
ஊழல் செய்தவர்களைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு, ஊழலுக்கு இடமில்லை என்கிறார் ராகுல் காந்தி,
பொது வாழ்வில் நேர்மை முக் கியம் என்கிறார் எல்லா ஊழ லுக்கும் தெரிந்தோ தெரியாம லோ. . . அறிந்தோ அறியாம லோ துணை போயிருக்கும் நமது பிரதமர் (ஹி. . . ஹி. . .)
வியர்வையை உப்பாக்கி அதையே உணவாகக் கொள்ளும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் வரிப்பணம்தான் தேசத்தின் பொருளாதாரம், அதைத் தவறாகப் பங்குபோட நினைப்பது கேவலம் என் றால், அந்தத் தவறுகளை (ஊழல்) அப்ப டியே மூடி மறைத்துத் தவறுகளுக்குத் துணை போவது குடிமக்களுக்கு இழை க்கின்ற நம்மிக்கை துரோகம். சொல் லப்போனால் தேசக்குற்றம். இந்த குற்றங்களுக்கு என்ன தண்டனை? எப் போது தண்டனை?
அண்மைக்காலங்களில் இந்திய அரசியல், ஆட்சியமைப்பு எல்லாமே சூதாட்டமாக மாறிவருகிறது. இந்த அரசியல் சூதாட்டத்தில் எப்போதும் அரசியல் சகுனிகளும் சில அதிகாரி களும், பல அரசியல்வாதிகளுமே ஜெயிக்கிறார்கள். தோற்பதென் னவோ நமது சராசரிக் குடிமக்கள்தான்.
இந்த அரசியல் மங்காத்தாவை அடியோடு நிறுத்தவும், சூதாட்டக் காரர்களை ஒட்டுமொத்தமாய் அப்புறப்படுத்தவும், என்ன வழி. . . உரத்து சிந்திப்போமா? செயல்படுத்துவோமா?
No comments:
Post a Comment