Tuesday, January 19, 2016

என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது? -புலமைப்பித்தன்

காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி” என்று தாஜ்மகா லை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை `காலக் கடலில் மிதக்கும் ஒரு ரத்தத்துளி” என்றுதான் வர்ணி க்க வேண்டு ம். சும்மா இருந்த கச்சத் தீவை இலங் கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போ ய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களி ன் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலி யாகும் தமிழக மீனவர்களின் எண் ணிக்கை கூடிக்கொண்டே போ கிறது.
1983ஆகஸ்ட் 13-ம்தேதிதொடங்கி ய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற் படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இது வரை பலியான தமிழக மீனவ ர்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண் டும். ஊனமானவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டும். கடத்த ப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல்.
இந்த இழிநிலை தீர கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வே று கட்சிகளும் பதாகை தூக்கி வரும் சூழலில், `கச்சத் தீவு கைவிட்டுப் போன தேன்?’ என்று தொடர்ந்து எழுதி, பேசி வரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவரான புலவர் புலமைப் பித்தனை நாம் சந்தித்தோம்.
`கச்சத்தீவு பூர்வீகமாகவும், பூகோள ரீதியாகவும் எங்களுக்குத் தான் சொந்தம்’ என்று இலங்கை பேசி வருகிறதே?
“அப்படி ஒரு பிரசாரம் இப்போது அதிகமாகவே கேட்கத் தொடங்கியி ருக்கிறது. 1822-ம் ஆண்டு கிழக்கிந் திய கம்பெனி, கச்சத்தீவை குத்தகை க்குக் கேட்டு ஒப்பந்தம் செய்து கொ ண்டது ராமநாதபுரம் சமஸ்தானத்தோடுதான். இலங்கையோடு அல்ல. பேரரசி விக்டோரியா மகாராணி காலத்தில் இலங்கையின் அமைச்சகச் செயலாளராக இருந்த பி.வி.பியர்ஸ் என்பவர் அவர்தயாரித்த வரைபடத்தில், `கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொ ந்தமானது. இலங்கைக்குச் சொந்தமானது அல்ல’ என்று விரிவாக வே குறிப்பிட்டிருக்கி றார்.
1968-ல் கச்சத்தீவில் சிங்கள ராணுவம் முகாமி ட்டுப் போர்ப்பயிற்சி நடத்தியபோது, அதைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் கண் டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீகச் சொ த்து. தனுஷ்கோடி எப்படி கடற்கோளால் மூழ் கியதோ, அதுபோல ஒரு கடற்கோளால் கச்சத் தீவு நம் மண்ணில் இருந்து பிரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை .”
என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது?
“காலத்தின் கட்டாயம் அது. இந்தியாவி ன் பூகோள அமைப்பு இயற் கையாகவே தமிழனுக்கு எதிரியாக அமைந்து விட்ட து. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவானது. அதை விரும்பாத `உலக போலீஸ்’ அமெ ரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த எண்டர்பி ரைஸ் என்ற அணுஆயுதம் தாங்கிய கப்ப லை அனுப்பியது. கொல்கத்தாவைத் தாக்குவது அவர்களது திட்டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியி ருக்கும். அச்சமயத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இரு ந்த சோவியத் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமிறங்கியதா ல் அமெரிக்கா பின்வாங்கி யது.
அதன்பின் ஐ.நா.வில் உலகநா டுகள், `இந்துமாக் கடலில் நின்று கொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடு ம் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றின. இந்தநிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கிய து. இந்தியாவின் வடக்கே தரைப்பகு தி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். வங்கதே சப் போருக்குப் பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம்கேட்டு க் கொண்டிருந்தது பாகிஸ்தான். அ தைத்தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். `கச்சத் தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்’ என்று பண் டார நாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடியவில்லை.
எனவே, இந்தியாவைப் பாதுகாக் க வேண்டும் என்பதற்காக தமிழ னின் நிலத்தை, உணர்வை பலி கொடுத்தாலும் பரவாயில்லை எ ன்று நம்மை பலிகடாவாக்கி, கச் சத்தீவு 1974-ல் இலங்கைக்குத் தா ரை வார்த்துத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். `தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒரு முறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழா வில் பங்கேற்கலாம்’ என்பது அந்த ஒப்பந்த த்தின் சாரம். ஆனால் ஏற்கெனவே இரு ந்த உரிமைகளும், சலுகைகளும் சுத்த மாகப் பறிபோயின என்பதே நிஜம்!”
இயற்கையின் சாபம், பூகோள அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
“வேறு வழி? ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தபோது, கொழும்பு நகரில் ஆஸ்திரேலிய நாட்டவர்கள் மூன்றுபேர் காணாம ல் போனதாகப் பேச்சு. ஆஸ் திரேலிய அரசு கடுமையாக அச்சுறுத்தி யதால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள்மூவரையும் கண்டு பிடித்து உச்சகட்ட பாதுகாப்போடு தனிவிமா னத்தில் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு.
இங்கே கடந்த வாரம் கூட அறுநூறு படகுக ளில் மீன்பிடிக்கச் சென்ற 1500 தமிழக மீனவ ர்களை சிங்கள கடற்படை கடத்திச் சென்று அரைநிர்வாணப்படுத்தி, ஏதோ கிரிமினல்க ளை விசாரிப்பதைப்போல சித்திரவதை செய்து அனுப்பி வைத்திரு க்கிறது. அது இந்தியாவுக்கு அவமானமாகப் படவில்லையா? இந் தியா கொதித்தெழ வேண்டாமா? ஏன் அடக்கியே வாசிக்கிறார்கள்?
சுண்டைக்காய் நாடான இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்துவிடும். எனவே தமிழினம் எப்படிப் போனால் என்ன? `தேச த்தைக் காக்க வேண்டும்’ என்ற முடிவில் நிலையாய் இருக்கிறது மைய அரசு.
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தபோது, பாகிஸ்தானுக்குகட்டுநாயகா விமானதளத்தைத்தர சிறீ மாவோ பண்டாரநாயகா சம் மதித்தார். பதறித் துடித்த லால் பகதூர் சாஸ்திரி, இலங்கையுடன் பேசினார். `பாகிஸ்தானு க்கு விமானதளத்தைத் தராமல் இருப்பத ற்கு ஈடாக ஐந்து லட்சம் மலையகத் தமி ழர்களை இந்தியாவுக்கு கப்பலேற்றச் சம்மதா?’ என இலங்கை கேட்டது. சாஸ் திரி தலையசைத்தார். விளைவு? ஐந்து லட்சம் தமிழர்கள் இங்கே அகதிகளாக வந்து சேர்ந்தார்கள்.
து மட்டுமா? `திரிகோணமலையில் அமெ ரிக்கா படைத்தளம் அமைக்க அனுமதி கேட் டபோது, அப்படி நடந்து விடக் கூடாது என்ப தற்காகத்தான் 1987-ல் இந்திய அமைதிப்ப டையை ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப் பினார்’ என அந்தப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற இந்திய ராணுவத் தளபதி ஒருவரே அவரது புத்தகத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆக, இந்தியாவின் பாது காப்புக்காக தெற்கிலுள்ள தமிழினத்தின் உடைமைகள் பறிபோனாலும் பரவாயில் லை  என்று இந்திய அரசு கருதுகிறது. நாதிய ற்றதா தமிழ்ச் சமூகம்?”


“காலத்தின் கட்டாயம் அது. இந்தியா வின் பூகோள அமைப்பு இயற்கையாக வே தமிழனுக்கு எதிரியாக அமைந்து விட்டது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகி ஸ்தான் போரின்போது வங்கதேசம் உரு வானது. அதை விரும்பாத `உலக போலீ ஸ்’ அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத் த எண்டர்பிரைஸ் என்ற அணு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்க த்தாவைத் தாக்குவது அவர்களது திட் டம். அப்படித் தாக்கியிருந்தால்இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சோவிய த் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமி ற ங்கியதால் அமெரிக்கா பின் வாங் கியது.
அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், `இந்துமாக் கடலில் நின்று கொண் டோ அல்லது பறந்து கொண்டோ எந் த நாடும் கடலோரப் பகுதி நாடுக ளை அச்சுறுத்தக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றின. இந்த நிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வட க்கே தரைப்பகுதி. அங்கே பாகி ஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத் தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப் பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப்பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொ ண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமா வோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். `கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்’ என்று பண்டார நாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடிய வில்லை.
எனவே, இந்தியாவைப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழனின் நிலத்தை, உணர் வை பலிகொடுத்தாலும் பரவாயில் லை எ ன்று நம்மை பலிகடாவாக்கி, கச்சத்தீவு 1974 -ல் இலங்கைக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். `தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெ டுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒரு முறை அங்கே நடக்கு ம் அந்தோணியார் கோயில் திருவிழா வில் பங்கேற்கலாம்’ என்பது அந்த ஒப் பந்தத்தின் சாரம். ஆனால் ஏற்கெனவே இருந்த உரிமைகளும், சலுகைகளும் சுத்தமாகப் பறிபோயின என் பதே நிஜம்!”
இதற்குத் தீர்வுதான் என்ன? காலம் முழுக்க இலங்கைக்கு இந்தியா தலையாட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?
“ஆம். தலையாட்டத்தான் வேண்டும். அண்மையில் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோ து, அந்த நாட்டுக்கு நூறு கோடி டாலரைக் கொடுத்திருக்கிறது இந்தியா. அதாவது, நா லாயிரத்து இருநூறு கோடி ரூபாய். அந்தப் பணத்தில் பாகிஸ்தானிடமிரு ந்து இலங்கை ஆயுதம் வாங்கப் போகிறது. அதாவது இந்தி யா தந்த பணத்தில் பாகிஸ்தானிடம் ஆயுதம்! தமிழக பி.ஜே.பி.  இல. கணேசன் கூட இதைக்கண்டித்திருக்கிறார். புலிகள் மீது குண்டு வீசப் போவதாகக் கூறி பாகிஸ் தானிடம் இருந்து ஆயுதம் வாங்கி தமிழர்க ளை அழிக்கப் போகிறார்கள். இதுபோன்ற பேரவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத் தடுக் க ஒரேவழி கச்சத் தீவை மீட்பதுதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...