கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு! மருத்துவர்கள் தெரிவிக்கும் ஆச்சரியத் தகவல்!
சின்னச் சின்ன விஷய த்துக்கு எல்லாம் எனக்குக் கோபம் வருது டாக்டர். கையி ல கிடைச்ச தைத் தூக்கி வீசறே ன். பிள் ளைங்களை அடிச் சுட்டு, அப்புற ம் நானே அழறேன். இது தப்புன் னு புரியுது. ஆனால், என்னால கோபத்தை கன்ட் ரோல் பண்ண முடியலை” – பெரும்பா லானவர்கள் புலம்பும் வார்த்தைகள் இவை.
”கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு. தேவையான ஒரு எமோஷன ல் ஃபீலிங்” என்கிறார், சென்னையின்
மூத்த மன நல மருத்துவ நிபுணரான எம். திருநாவுக்கரசு.
‘கோபத்தால் ஏற்படும் விளைவு, நல்லதாக மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாததாக இருந்தால், அது ஆரோக்கியமானகோபம். உதாரணத்துக்கு, ‘மகன் சரியாகப் படிக்கவில் லை; வேலையைச் செய்யவி ல்லை; நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை; என்றால், அப் போது வரும் கோபத்தின் வி ளைவுகள் யார்மேல் கோபப் படுகிறோமோ அவர்களுக்கு ஆதாயமாகத்தான் இருக்குமே தவிர, பாதிப்பை ஏற்படுத்தாது.
அடுத்தவர் பற்றி கவலையின்றி, எதற்கெடுத்தாலும் கத்துவது, ஆரோக்கியமில்லாத கோபம். உதாரணத்துக்கு, ‘எனக்கு நல்லதேநடக்கலை, எந்த லாபமும் கிடைக்கலை என்பதற்காக பிற ரிடம் கோபம் கொள்வது’ அறி யாமை, இயலாமை, பதற்றம், செய்தத் தவறை மறைக்க கோபப்படுவது மோசமானது. தன் தவறை மறைக்கக் கோபப் படுவது அருவருக்கத்தக்கது. எ ல்லோருமே ஆத்திரத்தை ‘கோ பம்’ என்று எடுத்துக்கொள்கிறா ர்கள்.
கோபிப்பதற்கே வசதி வாய்ப்பு தேவைப்படுகிறது. ஒருவர், தன் னுடைய அலுவலகத்தின் மேலாளரிடமோ, உரிமையாளரிடமோஅல்லது மாநிலத்தை ஆளும் முதல்வரிடமோ கோபத்தைக் காட்ட முடியுமா? வசதி வாய்ப் பை பொறுத்து, எங்கு வெளிப்ப டுத்த முடியுமோ அங்குதான் கோபத்தைக் காட்டமுடியும்.
‘இனி உங்கள் தயவு தேவை இல்லை’ என்றால் அவரிடத்தில் கோபப்படுவது பிரச்னையைத் தராது. ஒருவரின் தயவு தேவையாக இருக்கும்போது, அந்த நபரி டம் கோபப்படுவது பெரும் பாதிப்பைத்தான் தரும். அதை மீறியும்கோவித்துக்கொள்கிறவனுக்கு, அறி வு கம்மியாக இருக்கும்; அல்லது அவ ன் குழந்தையாக இருக்க வேண்டும்; அல்லது மனநலம் குன்றியவனாக இருக்கவேண்டும்.
கோபத்தைக் குறைப்பது எப்படி? கோ பம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதெல்லாம் சாத்தியப் படாத ஒன்று. கோபத்தை எப்படி வழி நடத்தவேண்டும் என்று அறிந்துகொ ள்வது அவசியம்.
* கோபத்தை உறவு முறைகளிடம் வெ ளிப்படுத்துதல்:
தவிர்க்கக்கூடிய உறவுகளிடம் கோபத்தை வெளிப்படுத்தும்போது பெரிய பாதிப்பு வராது. ஆனால், நெருங்கிய உறவுகள் எனில், நிச்சயம் பாதிப்பு ஏற்படும். உறவே முறிந்தும் விடலா ம்.
* உரிமை உள்ள இடத்தில் வெளிப்படுத்துதல்:
குடும்பத்துக்குள் ஒருவர் கோ பப்படும்போது, ‘உரி மை இருப்பதால்தானே கோ விக்கிறார்!’ என்று எடு த்துக் கொள்வதில்லை. குடும்பத்தில் கணவனோ, மனைவியோ, ‘நம்மிடம்தானே கத்த முடியும்?’ என்று ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு சமாளிக்கும் வழிமுறைகளை மேற்கொள் ளவேண்டும். ஒரே சமயத்தில் கணவன் – மனைவி இருவ ரும் கோபத்தை வெளிப்படுத் தக் கூடாது. ஒருவரை ஒருவ ர் புரிந்துகொண்டு அதை ஏற் றுக்கொள்ளப் பழகவேண்டு ம். இதனால், அந்த இடத்தில் உடனடியாக கோபம் தனிந்து சுமூகமான மனநிலை நிலவும்.” என்றார்.
– ரேவதி
சேலம் நியூரோ ஃபவுண்டேஷ னைச் சேர்ந்த மனநல மருத்து வர் சி.பாஸ்கர், கோபத்துக்கான சிலகாரணங்களை பகிர்ந்து கொண்டார்.
”மகிழ்ச்சி, துக்கம், பயம் போன் று கோபமும் மூளையின் ஒரு வெளிப்பாடுதான். மூளையிலு ள்ள ‘அமைக்தலா’(Amygdala) எனும் பகுதியில் ஏற்படும் ரசா யனங்களின் மாற்றத்தால் கோ பம் உண்டாகிறது. கோப உணர் ச்சி, அளவுக்கு மீறும்போதும் பிரச்னையாகிறது.
‘ஈ.க்யூ’ (Emotional Quotient) என்பது, உணர்ச்சிகளைச் சரி யான இடத்தில் பயன்படுத்தும் விகிதத்தைக் குறிக்கும். இந்த ‘ஈ.க்யூ’ அதிகமாக இருப்பவர்கள், எப்போதும் கூலாக இருப்பார்க ள். அவர்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாக இருக்கும்.
கட்டுப்படுத்த முடியாத அள வுக்கு அடிக்கடி கோபம் வந் தால், அதை ஒரு நோயாகக் கருதி மருத்துவரிடம் ஆலோ சனை பெறுவது அவசியம்.
ஒரு நாளைக்கு அதிகபட்ச மாக 12 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் மற் றும் யோகா, இதமான இசை யைக் கேட்பது, புத்தகம் படி ப்பது எனப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். இப்படி நம் அன் றாட வாழ்வில் ஆரோக்கியதை க் கடைப்பிடித்தால், கோபத்தா ல் வரும் மனஅழுத்தம், உயர் ரத் த அழுத்தம், சர்க்கரை நோய், ம ன வருத்த நோய், மனப் பதற்ற நோய், மனச் சிதைவு நோய் போ ன்ற பலநோய், கிட்ட நெருங்கா து.’ என்றார்.
No comments:
Post a Comment