சீதை கடத்தப்பட்ட இன்னொரு சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல்
சீதை கடத்தப்பட்ட இன்னொரு சம்பவம்! – இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல்
இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராத ன் எனும் கொடிய அரக்கன் எதிரே
வருகிறான். இவ்வரக்கன் பல யானைகள், அதைவிட இருமடங்கு சிங்கங் கள், பதினாறு யாளிகள் இவற்றின் பலங்கொண்டவன். அவன் கையில்
கொடிய மும்முனை சூலம் ஏந்தியிரு ந்தான். அவன் ஐம்பெரும் பூதங்களு ம் ஒன்று சேர்ந்ததைப்போன்ற உருவத்தையுடையவன். இடிபோன்ற உரத்த குரலை யுடையவன். பிரமதேவன் அளித்த வரத்தால் இருபத் தை யாயிரம் யானைபலம் கொண்டவன். இத்தகைய விராதன், இராம லக்ஷ்மணரின் எதிரில் வந்து நிற்கி றான்.

வந்தவன் ஒரே கணத்தில் சீதா பிராட்டியைத் தன் ஒரு கையால் அள்ளிக் கொண்டு ஆகாய மார்க்கத்தி ல் செல்லத் தொடங்குகிறான். திடீரென்று வந்து ஓர் அரக்கன் தேவியை தூக்கிச் சென்றதும், இராமனும் இலக்குவனும் திகைத்தனர். கோபம் மேலிட தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட் டி, விராதனைக் கூவி அழைத்து “அடே! அற்பனே! இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்? திரும்பு” என்றார்க ள் .
விராதன் சொல்லுகிறான், “மனிதப் பதர்களே! பிரமதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம்இல்லை. உலகத்தில்உள்ளோர் அனைவரை யும் ஆயுதம் இல்லாமலே அழித்துவிடவல்ல ஆற்றல் படைத்தவன் நான். போனால்போகிறது, உங்களுக்கு உயிர்பிச்சை அளிக்கிறேன். இந்த பெண் ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர்பிழைத்து ஓடிவிடுங்கள்” என்கிறான்.
இராமன் சிறிய புன்னகை புரிந்தான். இவன் அறியாமையை எண்ணி, தன் வில்லின் நாணை இழுத்து ஒருபேரொலியை எழுப்பினான். அவ்வொலி 7 உலகங்களும் அஞ்சும்வண்ணம் போர் முழக்கமாகக்கேட்டது. ஒருகொடி ய பூனையின் வாயில் சிக்கித்தவிக்கும் கூண்டுக்கிளிபோல அன்னை அவ்வரக்கன் பிடியில் அஞ்சிக் கதறிக்கொண்டிருந்தாள். பிராட்டியைக் கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய மும்முனை சூலத்தை இராமன் மீது வீசினான்.

காயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய ஆச்சாமரத்தைப் பிடுங்கி இராமன்மீது வீசுகிறா ன். இராமன் நன்கு அம்புகளை ஏவி, அந்த மரத்தைத் துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பல பாகங்களி லும் உட்புகுமாறு செலுத்த, அவன் அலறி மேலும் கோபத்துடன் காட்டுப் பன்றிபோலத் தன் உடலை உதறுகிறான்.
அவன் உடலில் அம்பு துளைத்த பகுதிகளில் இரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது. உடல் சோர்வுறுகிறது. இவன் சாகா வரம் பெற்றவன் அதனால் எந்த ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. மலைபோல கிடக்கும் இவன் கரங்களை வெட்டிவிடுவோம் என்று இராமனும் இலக்குவனும் முடிவு செய்து கொண்டு தங்கள் உடைவாளை எடுத்துக் கொண்டு அவன் தோள் மீது ஏறிவிடுகிறார்கள்.
மகா கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித் துக் கொண்டு வானத்தில் எழுந்து செல்ல முயல்கிறான். இராம லக்ஷ்ம ணர்களைத் தூக்கிக் கொண்டு அரக்கன் வானத்தில் பறப்பதைக் கண்டு தரையிலிருந்த சீதை மனம் பதைத்தாள். “அரக்கனே! அவர்களை விட்டு விடு. என்னை உண்டு கொள்” என்றாள், வாய் குழறி அழுதாள்.


இந்த விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரன் இட்ட சாபத்தால்
கொடிய அரக்க பிறவி எடுத்தான். இராமன் காலால் உதைபட்டதும் அ சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் கிடைக்கப்பெற்றான். மண்ணில் புதை யுண்ட அந்த உடலினின்றும் ஹிரண்ய கர்ப்பம் எனும் முட்டையிலிருந்து பிரம்மன் எழுந்ததைப்போல அந்த கந்தர்வன் எழுந்தான்.

அந்த கந்தர்வன் இராமபிரான் கால்களில் வீழ்ந்து பணிந்துபோற்றுகிறா ன். “இராமா! உனது திருவடி என்மீது பட்டதால், என் இருவினைகளும் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்” என்றான்.
No comments:
Post a Comment