34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! – இன்று முதல்…
34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! – இன்று முதல்…
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கும் இன்றைய
பெண்களை, திரையரங்கம் பக்கம் வரவை ழைக்கும் ஒரு புதிய முயற்சிதான் இம் முயற்சி
34வருடங்களுக்குமுன்பு அதாவது 1982 ஆம் ஆண்டு, எஸ்வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, விசு, கிஷ்மு மற்றும் பலர் நடித்து, இயக்குநர் விசு இயக்கத்தில் வெளிவந்து பெரு ம் வரவேற்பைப் பெற்ற படம் ‘மணல் கயிறு’.
ஒரு அருமையான குடும்பப் படமாக நகைச்சுவை கலந்து வெளிவந்த இப் படம் விசு இயக்கிய படங்களில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த து. 1980களில் குடும்பப் படங்களை இயக்கிய தாய்மார்களிடம் பெரும் வரவேற்புப் பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் விசு என்பது குறிப்பிட த்தக்கது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. ‘யாருடா மகேஷ்’ படத்தை இயக்கிய மதன் குமார் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். விசு, எஸ்.வி. சேகர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கி றார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத் தைத் தயாரிக்கி றது.
34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் இத்தனை ஆண்டுகள் கழித்து உருவாக இருப் பதே பெரிய விஷயம்தான். கடந்த சில வருடங்களா கவே திரைப்படங்களில் நடிப்பதை மிகவும் குறைத் துக் கொண்ட விசு இப்படத்தில் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்கி றார்.
தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகள் காணாமல்போய், அப்படிப்பட்ட கதைகள்டிவி சீரியல்களா க மாறிவிட்ட சூழ்நிலையில் மீண்டும் குடும்பப்பாங்கான படங்கள் வர ஆரம்பித்தால் டிவி முன்னால் இருக்கும் தாய் மார்கள் தியேட்டர்கள்பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கை யில் இந்தப் படம் உருவாகிறது.
No comments:
Post a Comment