அப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி ???
அப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி ???
கடந்த மாதம் 27ஆம் தேதி, மேகாலயாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொ ண்டிருந்த நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்
போதே மேடையில் மாரடைப்பு ஏற்பட்டு, நம்மை விட்டு பிரிந்துசென்றார். கடந்த 30 ஆம்தேதி கலாம் அவர்களுக் காக நடைபெற்ற கடையடைப்பு அன்று நானும் எனது அலுவலத்திற்கு விடுமு றை அறிவித்து விட்டு வீட்டில் அமர்ந்து அப்துல் கலாம் அவர்களது நல்லடக்க நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் கனத்த இதயத்தோடும் கண்ணீர் சிந்தும் கண்களோடும் பார் த்திருந்தேன். அவரது நல்லடக்கம் முடிந்தது. பாரத பிரதமர் நரேந்தர மோடி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து பல பிரபலங்களும் மக்களும் மாணவர்களும் இறுதி அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர்.
திடீரென்று நானிருக்கும் தெருவில் பெரு த்த இரைச்சலும், மகிழ்ச்சி ஆரவாரமும் கேட்டது. என்ன ஏதென்று அறிவதற்கு வெ ளியில் வந்து பார்த் தேன். அங்கே பேண்டு வாத்தியங்களும் நாதஸ்வரம் தவில் முழக்கத் தோடும் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களை தடுத்தி நிறு த்தி என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள். அப்துல் கலாம் எங்கள் முதல் எதிரி அவர்இறந்துவிட்டார் அதனால்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அணிவகுப்பை நடத்தி, கொண்டாடிவருகிறோ ம் என்றார்கள். இதனை கேட்ட எனக்கு அதிர்ச்சி யில் எனது இதயத்தின் இயக்கமே சில விநாடி கள் நின்றுபோனதுபோல் உணர்ந்தேன். பின்பு சுதாரித்துக் கொண்டு ஏன் இப்படி சொல்கிறீர்க ள். உலகமே போற்றும் உன்னதமனிதர் மறைந்து விட்டார் என்ற துக்கத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவ ரும் துக்கத்தில் சோகத்தில் மூழ்கி இருக்கும் இந்த நிலையில் அப்துல் கலாம் தான் உங்கள் முதல் எதிரி என்று சொல்கிறீரே நீங்கள் யார் என்று கேட்டேன்.
அந்த சிறு கூட்டத்தில் இருந்த எட்டு பேர் ஒரு குழுவாக வந்து என்முன் வரிசையாக நின்று என்னிடம் ஒவ்வொருவரும் அதற்கான காரண த்தை தெரிவித்தனர்.
1.ஆணும் பெண்ணுமாய்வந்த இரட்டையர்களில் ஒருவர். நான் கல்லாமை, இவள் அறியாமை, கலாம் எங்களை அவரிடம் நெருங்க விடவே இல்லை அதனால் தான் நாங்கள் அவரை எங்கள் எதிரி என்கிறோம் என்றார்கள்.
2. என் பெயர் சோம்பல்: என்னோடு அவர் ஒரு விநாடி கூட செலவழித்தது கிடையாது அதனால்தான்…
3. கோவம் (சினம்): நான் அவரது கண்களிலும் உதடுகளிலும் அவ்வப் போது வெளிப்பட்டு ஆதிக்கம் செய்ய முற்பட்டாலும் என்னை அவர் என் தலையில் தட்டி அடக்கிவிடுவார். அதனால்தான்…
4.அகங்காரம்: நான் அவரது மூளையை சர்வாதிகாரம் செய்ய நினை த்தேன் அதற்கு அவர் என்னை அனுமதிக்க வில்லை அதனால்தான்…
5. அதிகாரம்: நான் ஏழைகளையும் எளியவர்களை ஆட்டிப் படைத்திருக் கிறேன்.ஆனால் கலாம் என்னை ஆட்டிப்படைத்து அதிகாரம் செய்து விட்டார் அதனால்தான் …
6. பணம்: நான் பல தலைகளில் கிரீடங்களாக அலங்கரித்திருக்கிறேன். ஆனால் அவரோ என்னை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண் டார்.அதனால் தான் ..

7. பதவி: சுக போகங்களையும் சலுகைகளையும் அனுபவிக்கச் சொன்ன போதும் எனது பேச்சை துளியும் மதிக்காமல் எளிமைக்கு உற்ற நண்பனா க இருந்துவிட்டார் அதனால்தான் ..
8. ஓய்வு: அவருக்கு என்னை யாரென்றே தெரியாது? மேலும் என்னை தெரிந்து கொள்ள எந்த முயற்சி எடுக்க வில்லை அதனால்தான்…
இந்த எட்டுபேரது கருத்துக்களையும் நான் கேட்ட பிறகு, அப்துல் கலாம் அவர்களைப் புரிதலை இவர் களிடம் ஏற்படுத்தும்பொருட்டு, கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள், அவரை பற்றிய புத்தகங்கள், அவர்பேசிய ஒலித் தட்டுக்கள் போன்றவற்றை அவ ர்களிடம் கொடுத்து, இதைப்படித்து கேட்டு நாளை இதே நேரம்என்னை வந்து சந்தியுங்கள். அப்போது சொல்லுங்கள் அப்துல் கலாம் உங்களுக்கு எதிரியா என்று சொன்னேன். அவர்களும் அவற்றை வாங்கிக் கொண்டு சென்றார்க ள்
அடுத்தநாள் நான் குறிப்பிட்ட அதே நேரத்தில் சரியாக வந்தார்கள். வந்தவர்கள் என்னிடம் சொன்னவாசகங்கள் இவைகள்
1.கல்லாமை-அறியாமை: ஐயா கலாம் அவர்களது பேச்சைக் கேட்டோம். இனி நாங்களும் கல்வி கற்போம், விஷயங்க ளை அறிந்துகொள்வோம் என்றார்கள்.
2. சோம்பல்: உழைப்புக்கு தோள்கோடுத்து கடின உழைப்பாக நான் பாடு படுவேன் என்றது
3. கோவம்:அநீதி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் நான் வெளிப்பட்டு நீதியை நிலைநாட்டுவேன் என்றது
4. அகங்காரம்: அன்புக்கு நான் அடிபணிந்து அமை தியாக இருந்து அலங்காரம் செய்வேன் என்றது
5. அதிகாரம்: இனி நான் எளியவரை ஆட்டிப்படைக்க மாட் டேன். எளியோரை காக்கவே நான் பயன்படுவேன் என்றது
6. பணம்:எல்லா மனிதர்களது அடிப்படை தேவைகளையு ம் நான் பூர்த்தி செய்ய முயற்சிப்பேன் என்றது
7. பதவி: பண்புடன் இணைந்து இன்முகத்தோ டு இனி பணிவாக பழகு வேன் என்றது.
8. ஓய்வு: என்னை நினைப்போருக்கு, ஆலோசனை கொடு த்து வேறொரு நல்லபணிக்கு அவர்களை திசை திருப்பு வேன்.

மேற்படி எட்டு பேரும் ஒரே குரலில் ஐயா நாங்கள் உங்களிடம் இதைச்சொல்லிவிட்டு புறப்படுகிறோம் என்றார்கள் நான் எங்கே என்று கேட்ட தற்கு, நாங்கள் எடுத்த இந்த உறுதிமொழியை இராமேஸ்வரம் சென்று அப்துல் கலாம் அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத் திற்கு சென்று உறுதிமொழி ஏற்போம் என்றார்கள்.
எனது கண்களில் நீர் வழிந்தோடியது. அவர் களிடம் நான் அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவு விரைவில் நனவாகும் நாள் வெகு தூர த்தில் இல்லை என்றுசொல்லி. அவர்களுக்கு ம் நல்வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தேன்.
No comments:
Post a Comment