இன்னல்மிகு இல்லத்தரசிகள்!!
கருணாநிதி இரண்டாவது மனைவி தயாளுஅம்மாளுக்கு கலைஞர் டிவியில் 60% பங்கு உள்ளது. எப்படி வந்தது என்றால் மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மண்வெட்டி சம்பாதித்த பணம்..
அவருக்கு இப்போது அல்சீமர் நோய் தாக்கியுள்ளது..அந்த நோயானது கடந்த காலங்களில் திருடிய பணம், கொள்ளை அடித்த பணம், மிரட்டி வாங்கப்பட்ட இடம் என்று எதுவுமே ஞாபகம் இருக்காது..
ராஜாத்தி.. நான் சொல்லிதெரியவேண்டியதில்லை..
நீராராடியா முதல் வோல்டாஸ் வரை தன் சாதுர்த்தியதால் ஸ்டாலின் மற்றும் அழகிரி குடும்பத்திடம் செல்லமல் கருணாநிதியிடம் இருந்து பறித்தது...
“பிராட்வே டைம்ஸ்“ என்பது ஒரு ஆங்கில வார இதழ். பொதுவாழ்வில், தந்தையும் மகனும் தங்களுக்கென விதியை உருவாக்கிக் கொள்கிறார்கள், என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. வர்கீஸ் என்ற ஐசிஎஸ் அதிகாரி, தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு, அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் ஆணையராகவும் பணியாற்றி வந்தார். அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவில் இறக்குமதி செய்வதில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தான் பிராட்வே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தியை அடுத்து ஐசிஎஸ் அதிகாரி வர்கீஸ் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில், கார் இறக்குமதி செய்வது தொடர்பாக சரியான நடைமுறைகள் பின்பற்றப் பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால், அந்தப் பத்திரிகை மீது, அரசு அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்.
இந்தக் கடிதம் கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப் பட்டது. அந்தப் பத்திரிக்கையாளர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப் படுகிறது. ‘அப்போது நானே ஒரு பத்திரிக்கையாளர்’ என்பது மறந்து மறந்து விட்டதா என்பது தெரியவில்லை.
வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம், பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கைக்கு சம்மன் அனுப்பியதும், பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. முதலமைச்சரின் செயலாளர், அந்தப் பத்திரிகையின் அதிபரை தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி முறையீடு செய்யப் பட்டதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று தகவல் தெரிவிக்கப் படுகிறது.
அந்த பத்திரிக்கையின் அதிபரும் ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல், “பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிக்கைக்கும் முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதால் வழக்கை வாபஸ் பெற்றக் கொள்கிறேன்” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப் படுகிறது. இக்கடிதத்தை படித்த கருணாநிதி, அக்கடிதத்தின் மீதே, “வழக்கு வாபஸ் பெறப்படலாம்” என்று உத்தரவிடுகிறார்.
ஆனால் பிராட்வே பத்திரிக்கை அதிபர் செரியன் வழங்கிய கடிதத்தில் மன்னிப்பு கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.
மேலும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்கு தொடருவதற்கு முன்பு விரிவாக நடந்த ஆலோசனை, சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை எதுவுமே, வாபஸ் பெறும் போது கவனிக்கப் படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்ட அதே வேகத்திலேயே, அந்நிறுவனம், கருப்புப் பட்டியலில் இருந்தும் எடுக்கப் பட்டிருந்தது.
இந்த வழக்கின் மூலமாக ஏற்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி, மற்றோரு காரியத்தைச் சாதித்துக் கொண்டதுதான் விசித்திரமான விஷயம். பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கையை அச்சிடுவது, அந்த பத்திரிக்கை நிறுவனத்துக்குச் சொந்தமான, தாம்சன் அன் கம்பெனி. பிராட்வே டைம்ஸ் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்வதற்கு முன்பாகவே, தாம்சன் அன் கம்பேனி அரசுடன் எவ்விதமான கான்ட்ராக்டுகளிலும் ஈடுபடக் கூடாது என்று கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது. அந்தக் கம்பேனி அரசு பாடப்புத்தகங்களை தயாரிப்பதில், கவனக்குறைவாக இருந்த காரணத்தால் இந்நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது. அந்த உத்தரவையும் இந்நிறுவனம் தந்திரமாக வாபஸ் பெற வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக, வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்பு காட்டினார் என்ற கேள்வி எழும். அங்கேதான் முரசொலி மாறன் வருகிறார். பிராட்வே டைம்ஸின் அதிபர், மேத்யூ செரியனும், முரசொலி மாறனும், நெருங்கிய நண்பர்கள். மாறன் இந்த வழக்கை வாபஸ் பெற்று, கருப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டி, தன்னிடம் வலியுறுத்தினார் என்பதை கருணாநிதியே தனது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார்.
இவ்வாறு மாறன், கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்தது, வெறும் நட்பா என்றால் இல்லை. இந்த நட்பின் அடிப்படையில், மாறனுக்கு பல்வேறு உதவிகளை பிராட்வே டைம்ஸ் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய காரை வழங்கி உதவி செய்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு தனியார் நிறுவனம், அரசின் கான்ட்ராக்டை பெற்று, பாடநூல் தயாரிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது. அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்கு பரிந்துரை செய்து, அவ்வாறே அந்நிறுவனத்தை கரும்பட்டியலில் வைக்கிறார். அந்த அதிகாரியை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, அந்த பத்திரிக்கை அவரைப் பற்றிய அவதூறான செய்திகளை வெளியிடுகிறது. அப்பத்திரிக்கை மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று அதனால் பாதிக்கப் பட்ட அதிகாரி, அரசுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப் படுகிறது.
வழக்கு தொடுக்கப் பட்ட பின், முதலமைச்சரின் மருமகன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு, ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இருந்தும் நீக்க உதவுகிறார்.
கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி சர்க்காரியா “இவ்வழக்கில் வரக்கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல், குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத் தனமாக ஒதுக்கி விட்டு செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை தர மறுக்கவும், திரு மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக திரு.கருணாநிதி திரு.செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார் என்பதேயாகும்”.
1970ம் ஆண்டு முதல், கருணாநிதி அரசைம் ஆட்சி அதிகாரத்தையும் தன் குடும்பத்தின் நலனுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுகிறது. கருணாநிதியும், திமுகவும் எழுபதுகளிலேயே தமிழ்நாட்டை விட்டு ஒழிக்கப் பட்டிருந்தால், இந்தியாவுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியும், மேலும் பல ஆயிரக்கணக்கான கோடிகளும் சேமிக்கப்பட்டிருக்கும்.
அன்று இந்திரா காந்தி, கருணாநிதிக்கு அளித்த மடி பிச்சையால், இந்தியாவையே சூறையாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இந்திரா காந்தியும் சிபிஐ மூலமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்து, கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால் இந்நேரம் கருணாநிதி தண்டிக்கப்பட்ட குற்றவாளியாகி யிருந்திருப்பார். மாறாக, இந்திரா காந்தி விசாரணை ஆணைம் அமைத்ததன் விளைவு, இன்று கருணாநிதி தமிழர்களே.. தமிழர்களே என்று கதையடித்துக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment