Thursday, January 28, 2016

பெரியவா சரணம் !!!


நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்?
”விழுப்புரத்தில் சிறுவயதில் மகாபெரியவாளுடன் படித்த முஸ்லிம் நண்பர் ஒருவர், தன்னுடன் படித்தவரே இப்போதைய சங்கராச்சார்யார் என்று தெரிந்துகொண்டதும், அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தேனம்பாக்கம் வந்தார். ‘பெரியவா பாலாற்றங்கரையில் இருக்கிறார்’ என்றதும் நேராக ஓரிக்கை- பாலாற்றங்கரைக்கே வந்துவிட்டார். வெகுநேரம் பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். புறப்படும்போது அந்தமுஸ்லிம் நண்பர், ‘நீங்க இப்போ பெரிய மகான். ஜனங்கள் எல்லோரும் உங்களை வந்து பார்த்து வாழ்த்து வாங்கிட்டுப் போறாங்க. உங்களைப் பார்த்ததன் ஞாபகமாக எனக்கும் நீங்கள் ஏதாவது தர வேண்டும். அதை நான் பத்திரமா வெச்சுக்குவேன்’ என்றார்.
பெரியவா சிரிச்சுட்டார். ‘என்னைப் பார்த்தாய் அல்லவா? நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்? இந்தக் காஷாய வஸ்திரம் ஒண்ணுதான் எங்கிட்டே இப்போ இருக்கு!’ என்றார். உடனே அந்த நண்பர், ‘சரி, அதில் ஒரு சிறு துண்டைத் தாருங்கள். போதும்’ என்றார். சட்டென்று தம்முடைய காவி வஸ்திரத்திலிருந்து ஒரு சின்ன துண்டைக் கிழித்து, தன் பால்யகால சிநேகிதனுக்குக் கொடுத்தார் மகாபெரியவா.
அதைப் பெற்றுக்கொண்டபோது… அந்த முஸ்லிம் நண்பர் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது!
உண்மைதானே!
---------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...