நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நான் ராஜா. இது தான் தாரை தப்பட்டை பாடல்கள் கேட்ட ஒவ்வொருவரின் மனதில் ஓடும் வார்த்தை. நான் கடவுள் என்ற தரமான படைப்பை கொடுத்த பாலா அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கமிட் செய்தார்.
அப்போது அவரிடம் ஏன் இசையமைப்பாளரை மாற்றினீர்கள் என்று கேட்க, ‘அதற்கு என்ன, எல்லோரும் அவருடைய இசையை தானே, போடுகிறார்கள்’ என்று ஒரே பதிலால் அனைவரின் வாயையும் அடைத்தார்.
இந்த மெகா கூட்டணி மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் இணைந்தனர். இப்படம் இளையராஜா அவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம். இது இவரின் 1000மவது படமும் கூட.
பாடல்கள் நேற்றும் வர, சமூக வலைத்தளத்தில் உள்ளோர் பலரும் நிறைகளும், குறைகளும் சொல்ல தங்கள் காத்திருந்தனர். ஆனால், குறை சொல்ல வந்தவர்களை கூட, நிறை மட்டும் பேச வைத்தது தாரை தப்பட்டை பாடல்கள்.
ஹீரோ இண்ட்ரோ என தீம் மியூஸிக்குடன் இந்த ஆல்பம் தொடங்க, தன் பழைய தப்பு, தவில்களை எல்லாம் எடுத்து கலக்கிவிட்டார் ராஜா. அனைவரையும் எழுந்து நடனமாட வைக்கும் ஒரு தீம் மியூஸிக். இது இப்படி என்றால் தாரை தப்பட்டை தீம் மியூஸிக் எப்படி இருக்கும் என கடைசி பாடலை க்ளிக் செய்தால், ‘தாரை தப்பட்டை கிழிய போவுது’ என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் புரியும். நான் கடவுள் படத்தில் வரும் ஓப்பனிங் சாங் போல, மிரட்டியுள்ளார்.
மோகன்ராஜ் எழுதிய வதன வதன வடிவேலன், கூத்து பாடல் போல் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தால் வரிகள் அப்படியிருக்க, இசையில் வேறு ஒரு தளத்தை ராஜா எட்டியுள்ளார். இனி அவர் செல்ல எந்த தளமும் இல்லை என்றாலும் எங்களுக்கு சொல்ல வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
தாரை தப்பட்டை டைட்டில் பார்த்தாலே வெறும் குத்து பாடல்கள் மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு முதல் பதிலடியாக பாருருவாயா என்ற திருவாசகப்பாடல். மெல்லிசையில் அர்த்தத்தை கூறுகின்றது. இதை விட இடறினும் என்ற பாடல் தான் இந்த ஆல்பத்தில் ஹைலைட் என்று கூட சொல்லலாம்.
நான் கடவுள் படத்தின் பிச்சை பாத்திரம் பாடலுக்கு பிறகு மனதை நெகிழ வைக்கும் ஒரு பாடல் இது என்றால் மிகையல்ல. இதேபோல் ஆட்டகாரி மாமன் பொண்ணு ராஜாவின் ஃபோக் டச்.
மொத்தத்தில் தாரை தப்பட்டை மீண்டும் இந்த பகுதியின் முதல் வரியை படித்துக்கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment