Saturday, April 30, 2016

அவசர உதவிக்கு அழைக்கவேண்டிய‌ தொடர்பு எண்களின் பட்டியல்

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போ துமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலை பேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.911
அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————-9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ————————————9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-98400 00103
போலீஸ் : —————————————––100
தீயணைப்புத்துறை :—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————––100, 103
ஆம்புலன்ஸ் : ———————————––102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ——–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :—–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 22354959 – 044 22300666


கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.






தட்டெழுத்து பயின்றவனுக்கு அவனுடைய இயல்பான கையெழுத்து மறந்துவிடும்.
கால்குலேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தால் அடிப்படைக் கணக்கே மறந்துவிடும்.
படிக்காத கிராமத்தாரிடம் மென்மையான ஆழமான புத்திசாலித்தனம் இருக்கிறது.
இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்மை எப்போதும்
அடிமைத் தனத்திலும், பேராசையிலும்
திருப்தியற்ற நிலையிலும்,
போட்டியிடும் நிலையிலும்,
அன்பற்றும்,
எப்போதும் கோபத்துடனும்,
வெறுப்போடும்,
ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ நினைக்கும் நிலையிலும் வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது.
நம்முடைய அறிவுக் கூர்மை அழிக்கப் படுகின்றது.
அதிகம் படித்தவர்களால் இந்த உலகம் அபாயத்தில் இருக்கிறது.
நம்மைச்சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனித்தால் நாம் நன்கு அறியமுடியும்.
ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும், அலுப்பாகவும்,
இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?
ஏன் இந்த மரங்களைப் போல
புத்துணர்வுடன் வாழக் கூடாது?அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான்,
முயற்சிக்கிறான்...
அதனால்தான்
இவ்வளவு சோகம்,
சோர்வு,
துன்பம் எல்லாம்!!
ஒரு புத்தி கூர்மையுள்ளவன் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.
அடுத்தவன் வாழ்க்கைமுறையை பற்றியும் கவலைப்பட மாட்டான்.
ஏன்? கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.
அவன் இங்கே.. இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்.
அதைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.
கடவுள்,
ஆத்மா,
சொர்க்கம் எல்லாம் தானே அவனை வந்தடையும்.

மேட்டுர் அணை வரலாறு நமக்கு தெறிந்ததும் தெறியாததும் :



மேட்டுர் அணை வரலாறு நமக்கு
தெறிந்ததும் தெறியாததும் :
............................................................
நமக்கும் நம்தலைமுறைக்கும்
சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர்தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்
ராயல்என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி
ரூபாய்கொட்டினால் கூட கட்டமுடியாத
பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த
அணையை அன்றைக்கு 4 கோடியே 80லட்சம் ரூபாய் திட்டத்தில்
கட்டி முடித்துள்ளனர்.மலைக்க வைக்கும்
மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.
மேட்டூர் அணையைஇதுவரை இரண்டு முறை மின்னல்தாக்கியது.
இருப்பினும் அணைக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில் காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக்கூடிய ஆட்களும் இருந்தும் போதியநீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை.
இதைஉணர்ந்த ஆங்கிலேயே அரசு
காவிரியின் குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை தேடியது.
15 ஆண்டுகள் கழித்து அன்றைய
ஆங்கிலேய அரசின் சென்னை மாகாணகவர்னர் ஸ்டான்லி காவிரியின்குறுக்கே அணைக் கட்ட
உத்தரவிட்டார்.
இந்த உத்திரவை போட்ட கவர்னர்
ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.
இந்தஅணையில் கடல் போல காட்சியளிக்கும்அளவுக்குதண்ணீர் தேக்கப்பட்டது.அணையை கட்டிய
பொறியாளர்டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை
மேட்டூர்அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார்.
இனி என்றும்புகழப்படுவார்.
இந்திய அளவிலான
பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்சநீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத்தேக்கலாம்.
அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும்அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும்அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ
ஒருக்காலும் ஊறுவிளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்:
21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80
கோடி.
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின்அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு
உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு
பரப்பளவு 59.25 சசதுர மைல் 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம்,நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை,திருவாரூர்,
நாகப்பட்டனம் என மொத்தம்11 காவிரிப்
பாசனப் பகுதிமாவட்டங்களுக்கு மேட்டூர்
தண்ணீர் போகிறது.
மொத்தம் 16 லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அது மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர்அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
இதன் கிளை நதிகளாக கொள்ளிடம்,
பொன்னியாறு,கல்லணை கால்வாய்,
வெட்டாறு,வெண்ணாறு, குடமுருட்டி என்ற
பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர்தூரம் செல்கிறது.
இதை தாண்டி, 1904
கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால்
மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.
இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும்
,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண்,மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை
என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்
லீசை, அணையும் நம் மனசும்
நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு
கூர்வோம்.

தள்ளுபடி : (சிறுகதை)




ருக்குமணியின் ஒப்பாரி சத்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஏனோ வீட்டிற்குள் இருக்கவே பிடிக்கவில்லை வெள்ளைச்சாமிக்கு.
மழையை நம்பி, விதைப்பாட்டிற்காக தன் மனைவி ருக்குமணியியிடமிருந்த ஓரே நகை, அந்த அஞ்சு பவுன் சங்கிலியை கூட்டுறது வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றது.
அடகு வைத்து, நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. முதல் இரண்டு வருடம் வட்டிப் பணம் மட்டும் செலுத்தி நகை காப்பாற்றப்பட்டது.
இந்த ரெண்டு வருசத்தில், விவசாயத்தில பெருசா ஒன்னும் இல்லை. ஏதோ உசிரை காப்பாத்தி வைச்சிருக்குது, அவ்வளவுதான்.
இப்போது, அடகு வைச்ச நகை ஏலத்திற்கே வந்து விட்டது. ஏல அறிவிப்பு கடிதத்தை, தபால்காரர், போன வாரம்தான் கொடுத்துட்டு போனார்.
எப்படியாவது திருப்பிடனும்கிற தவிப்பு, வெள்ளச்சாமியிடம் தெரிந்தது.
தனக்காக இல்லாட்டியும் ருக்குமணிக்காகவாவது செஞ்சாகனும்.
பொறந்த வீட்ல போட்ட ஒத்த நகை,
அதுவும் ஏலத்துல போயிருச்சுன்னா, பொறந்த வீட்டு சாதி சனத்தோட மூஞ்சில எப்படி முழிக்கறதுன்னு சொல்லி சொல்லி பொலம்பித் தீர்த்த்து விட்டாள்.
கணவனை பார்த்து தீர்மானமாக சொன்னாள் ருக்குமணி 'இந்தா பாருங்க ஒன்னு நகைய மீட்டிட்டு வீட்டுக்குள்ள வாங்க...., இல்லாட்டி என்னைய உசிரோட
பாக்க முடியாது பாத்துக்கங்க'
'ருக்குமணி கேட்பதிலும் நியாயம் இருக்கு, ஆனால் கையாலாகாத நிலைமைல தானே, நான் இருக்கேன்' என்று மனசுக்குள் பேசிக் கொண்டான் வெள்ளச்சாமி.
ஏலம் வேண்டாம், எப்படியும் ரெண்டு மாசத்துல திருப்பிடரேன்னு சொல்லி, வங்கி மேலாளரிடம் மன்றாடிப் பார்த்தான். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
ஏல அறிவிப்பு கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு சொந்தம் பந்தம், தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தாச்சு.
ஆறுதல் சொல்ல ஆளிருந்ததே தவிர உதவி செஞ்சு, அரவணைக்க ஒருவருமில்லை.
நகையில்லாமல் ருக்குமணியின் மூஞ்சியில் எப்படி விழிப்பது? ஒரு முடிவுக்கு வந்தவனாக, நேரே வயலுக்குச் சென்றான் வெள்ளைச்சாமி.
நெல்லு நாத்துக்கு அடித்தது போக மீதமிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து, கடகடவென்று குடித்துவிட்டு, நெற்பயிர்களை ஒரு ஏக்கப் பார்வை பார்த்தபடியே உட்கார்ந்து விட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம், வயிற்றுக்குள்
எழுந்த சிறு உறுத்தல், தாங்க முடியாத வலியாக மாறியது,
வலியால் துடித்த உடம்பு தூக்கி தூக்கி போட்டது. நினைவு மெல்ல மெல்ல தவற, வாய் கோணி நுரை தள்ளியது.
கை கால்கள் இழுத்துக் கொண்டிருக்கவே, சன்னமாக பிரிந்தது கடைசி மூச்சு.
கண்கள் பாதி மூடியும், பாதி திறந்தும் வானத்தை நோக்கி ஏதோ நியாயம் கேட்பதைப் போல் வெறித்திருந்தது.
அடுத்த நாள் செய்தித்தாளில், கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை என்ற செய்தி, ஒரு பெட்டி செய்தியாக ஆறாவது பக்கத்தில் பிரசுரமானது.
அதே பத்திரிக்கையின் முதல் பக்கத்தில், ஒரு பெரிய நிறுவனத்திற்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடனை, தள்ளுபடி செய்வதாக..., ஒரு தேசிய வங்கி அறிவித்திருந்தது.

“எது உண்மையான தியானம்?” – வீரத்துறவி

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன்.
ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மன ம் எங்கெல்லாமோ அலை பாய்கிறது. தாங்கள்தான் எனக் கொரு நல்வழி கா ட்டவேண்டும் என் றான்.
அவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வ தற்கு முன் ஒரு சிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகை யில், மூன்று ஞானிகள் நெடு நாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந் தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப்பதிலும் இல் லை.
மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இர ண்டாவது ஞானி, அது கறுப்பு நிறக்குதிரை யாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதி ரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ் சம் சும்மா இருக்க மாட்டீங்களா? இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக் கொண்டு இருந்தால் , நான் வேறு எங்காவது போய் என் தியான த்தை தொடர்கிறேன் என்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி. இந்த மூன்று ஞானிகளும் கண்களை மூடி தியானிப்பதற்கு பதில் மனதை மூடி தியானி த்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும். அதுவே உண்மையா ன தியானம்.
பிறகு விவேகானந்தர் இளைஞனின் கேள்வி க்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநல மற்ற பொதுசேவையில் ஈடுப டுவதுதான் என்கிறார். உன் வீட்டைசுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந் த உதவிகளை செய். கவனிப்பி ன்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்! பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையானமன திருப்தி இருக்கிறது. மனதில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடி கொ ள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னா ல் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு தான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித் தார் விவேகானந்தர்.

Friday, April 29, 2016

ஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் …

ஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் …
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப் படுகிறது. இந்த ஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால்…
இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குண மாகும். மேலும் இந்த ஆடா தோடா (ஆடா தோடை ) இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத் து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இரும ல், இரைப்பு நீங்கும். இதுமட்டுமா, நீண்ட நாட்களாக இருந்து வந்த நெஞ் சுச் சளியைப்போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச் சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்துஇருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகா து

இந்திய பெருஞ்சுவர்! – அதிசய அரியதோர் அதிசய தகவல்

இந்திய பெருஞ்சுவர்! – அதிசய அரியதோர் அதிசய தகவல்

இந்திய பெருஞ்சுவர்! – – அரியதோர் அதிசய தகவல்
உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. செயற்கைக்கோள் வரைபடத்திலும்,
சீனப்பெருஞ்சுவர் துல்லியமாகத் தெரிந்தது. சீனப் பெருஞ்சுவர்,உலகிலேயே பெரிய முதல் “பெருஞ்சுவர்’ ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய “பெருஞ்சுவர்’ ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ளது. இந்தச் சுவரின் அகலம் 6 மீட்டர் ஆகும். மகாராணா கும்பா என்பவர், தமது ஆட்சி க்கு உட்பட்ட பகுதிகளைக் காப்பதற்காக, 36 கி.மீ., தூரமுள்ள மிகப் பிரமாண்டமான இந்த சுவரை கட்டினார்.
அடிப்படையில் மகாராணா கும்பா கட்டடக்கலை நிபுணர் ஆவார். மேவார் பகுதியில் உள்ள 84 கோட்டைகளில், 32 கோட்டைகள் மகா ராணா கும்பாவால் கட்டப்பட்டதாகும். ராஜஸ்தான் மாநில த்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த இந்தியப்பெருஞ்சுவரைப் பார்வை யிட்டுச் செல்கின்றனர். ஆரவல்லி மலையின் மீது ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பெருஞ்சுவர், இந்திய அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

'God Vs Science'

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.
ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.
ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.
ஆசிரியர் அனுமதிக்கிறார்.
மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?
ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?
மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.
இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.
உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல.
அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.
அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..


ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.
கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே... என்று பாய....
அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க...
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!



இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும். இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்.... இதோ அப்படி இந்தியாவில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்
இந்தியாவின் இரண்டாம் பிரதம மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966 ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அரை நூற்றாண்டை கடந்த போதிலும்இன்று வரை அவர் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற பத்திரிகையாளர்சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவரின் மரணத்தின் போது,அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுபின் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும்அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம்
இந்திய சுதந்திரத்துகாக வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நேதாஜியைப் பற்றி அறியாதவரே இருக்க முடியாது. ஃபோர்மோசா (தைவான்) என்ற இடத்தில் அவர் சென்ற ஜப்பானிய விமானம் வெடித்ததால்ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டில் அவர் தீயில் கருகி இறந்து போனார் என தகவல்கள் கூறுகிறது. ஆனால் அவரின் ஆதரவாளர்களோகுறிப்பாக வங்காளத்தில்அவர் இறந்து விட்டார் என்பதை அவர்கள் நம்பவில்லை. அவரின் மரணத்தை கேள்விப்பட்ட காந்திஜி இப்படி கூறியுள்ளார் "சுபாஷ் இறக்கவில்லை. சுபாஷால் இப்படி இறக்க வாய்ப்பில்லை"
ரூப்குந்த் ஏரி –
உத்தர்கண்ட் உள்ளூர்வாசிகளால் மர்ம ஏரி என அழைக்கப்படும் ரூப்குந்த் உறைபனி ஏரி உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ளது. யாருமே வசிக்காத இந்த பகுதி,இமயமலையின் மீது 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.மீட்டர் ஆழத்தை கொண்டுள்ள இந்த ஏரியின் முனையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளை காணலாம். ஆன்மீக ரீதியாகவும்அறிவியல் ரீதியாகவும் இதனைப் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. அதன் படி, 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை இங்கு கிடக்கிறது. இந்த எலும்புகளின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் ஆராய்ந்த போது அது 850 ஆம் வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை
ஓம் பன்னா
ஓம் பன்னா என்பது ஜோத்பூரில் உள்ள பாளி மாநகராட்சியில் உள்ள மோட்டார் பைக் கோவிலாகும். பாதுகாப்பான பயணத்திற்கு இங்குள்ள 350 சிசி ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை தான் கடவுளாக அனைவரும் வழிபடுகின்றனர். 1988 ஆம் ஆண்டில் ஓம் பன்னா தன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு மரத்தில் மோதி அங்கேயே இறந்துள்ளார். மறுநாள் காலை அந்த பைக்கை காவலர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் மறுநாள் அந்த பைக் விபத்து நடந்த பகுதியில் இருந்துள்ளது. அதனை மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த காவலாளிகள் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து விட்டுஅதனை சங்கிலியால் கட்டி போட்டு வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அது மாயமாகிவிபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளது. இது பல தடவை நடந்திருக்கிறது. அதிசயமாக பார்க்கப்பட்ட இச்சம்பவத்தால் அனைவரும் அந்த பைக்கை வணங்க தொடங்கினர். அன்றாடம் அந்த பாதையை கடப்பவர்கள் அந்த பைக்கையும் ஓம் பன்னாவையும் வணங்கி விட்டு தான் செல்கின்றனர். சில ஓட்டுனர்கள் மதுபானத்தையும் அதற்கு படைக்கின்றனர்.
ஸ்டோன்மேன்
யாரென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு தொடர்ச்சி கொலைகாரனுக்கு அளிக்கப்பட பெயரே ஸ்டோன்மேன். இவன் கொல்கத்தாவில் 1989 ஆம் வருடம் வீடு இல்லாத 13 நபர்களை கொன்றுள்ளான். மாதத்தில் 13 பேர்களை கொன்றதாக கூறப்படும் அவன்இதை தனியாக செய்தானா அல்லது கூட்டாக செய்தானா என்பது தெரியவில்லை. இன்று வரை இந்த குற்றத்திற்காக யாருமே கைது செய்யப்படவில்லை. இதனை யார் செய்தது என கொல்கத்தா காவலர்களால் கடைசி வரியா கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போலான தொடர்ச்சி கொலைகள் மும்பையிலும் குவாஹத்தியிலும் நடந்துள்ளது.
சாந்தி தேவி
1930-களில்டெல்லியை சேர்ந்த வயதான சாந்தி தேவி என்ற குழந்தைதான் இதற்கு முன் மதுராவில் வாழ்ந்ததாக தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளது. தான் குழந்தைகளுக்கு தாய் என்பதையும் ஒரு பிரசவத்தின் போது இறந்து விட்டதாகவும் கூறியுள்ளது. இதற்கு முன் தன் பெயர் லுட்கி எனவும் கூறியுள்ளது. இதனை கேட்ட அவளின் பெற்றோர்கள் விசாரணையில் இறங்கிய போதுமதுராவில் லுட்கி என்ற பெண் சமீபத்தில் இறந்தது தெரிய வந்தது. சாந்தி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்ற போதுஅவள் உள்ளூர் மொழியில் சரளமாக பேச தொடங்கினால். தன் பூர்வ ஜென்ம கணவன் மற்றும் குழந்தைகளை அடையாளம் கண்டால். இதனை கேள்விப்பட்ட மகாத்மா காந்திஇதனை விசாரிக்கும் படி ஒரு குழு ஒன்றை நியமித்தார். அதன் படி 1936 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அப்பெண் லுட்கியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து 24 சரியான தகவல்களை அளித்துள்ளார்.
ப்ரஹ்லாத் ஜானி
மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத் ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளது. 2010-ல் நடந்த அந்த இரண்டாம் ஆய்வில்,தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அவர் 24 மணிநேர வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்கு அவரின் ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர் தண்ணீர் மற்றும் உணவருந்தியதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள் முடியும் வரை அவருடைய உடலில் பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல் இப்படி மாறியிருக்கலாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இரண்டு வாரம் உண்ணாமல் இருந்த பிறகு அவர் 40 வயது மனிதனை விட ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Thursday, April 28, 2016

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில்
உள்ள டாக்ஸின்கள் எனப்படும் ஒருவித‌ வேதிப்பொருளை வெளியேற்று வதோடு, தேவையற்ற கெட்ட கொழுப்புக்களையும் கரைத்துவிடும் தன்மை இந்த இவற்ற‍றிற்கு உண்டு. 
இவற்றை சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் விரைவி லேயே பசி எடுப்ப‍து மட்டுப்படும். இதன்மூலம் உண வு கட்டுப்பாடு தானாகவே வந்துவிடும். மேலும் உட லுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் இந்த காராம ணியின் கொடிக்கிடக்கின்றது.
டிக்கடி சத்துமிக்க‍ இந்த‌ காராமணியை சமைத்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.  இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம் சத்தும் இதில் நிறையவே  உண்டு. எலும்புகளி ன் ஆரோக்கியம் காக்க கால்சியம், மெக்னீசி யம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் இதில் உண்டு…’’
மேலும் பல மருத்துவ பண்புகளை இங்கு காண்போம்
*இதிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப்படுத்தி, இதய நோய்க ள் வராமலும் காக்கிறது.
* வயிறு, கணையம் மற்றும்  மண்ணீரல் தொட ர்பான பிரச்னைகளை குணப்படுத்தும் தன்மை இதில் இருக்கிறது. சீரான குடல்  இயக்கத்துக்கு உதவுகிறது. சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.

*உலரவைத்த காராமணியை எடைக்குறைப்பு முயற்சியி ல் இருப்பவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதில் எடையையும்  குறைத்து, புரதக் குறைபாடு பிரச் னை வராமலும் காத்துக் கொள்ளலாம்.
* காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயச் செயலிழப்பு நோய்கள் வராமல் காக்கிறது.
* வேறு எக்காயிலும் இல்லாத ஒரு மகத்தா ன தன்மை காராமணிக்கு உண்டு. இதில் உள்ள லிக்னின் சிலவகையான புற்றுநோய் ,  பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய் களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
*சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உண்டு. இவை 2ம் சரும செல் கள்  பழுதடைவதைத் தடுத்து, வயோதிகத் தோ ற்றம், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் இளமையாக இருக்க உதவுகின்றன.
*தொடர்ந்து கூந்தல் உதிர்வு பிரச்னையால் அவ திப்படுவோர், காராமணியை பச்சையாகவோ, உலர வைத்ததையோ அடிக்கடி  சாப்பிடலாம். கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமுள்ள காரணத்தால் காராமணி சாப்பிடுப வர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும்  அடர்த்தியாகவும் வளர்வதைப் பார்க் கலாம்.

திமுக தேர்தல் அறிக்கை- வாக்குறுதிக்குப் பால் ஊற்றும் வல்லவர்கள்



திமுக தற்போதைய தேர்தல் அறிக்கையில், பாலுக்கு லிட்டருக்கு ஏழு ரூபாய் நுகர்வோருக்கு குறைக்கப் போவதாக ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. 2 கோடி குடும்பங்கள் ஒரு நாளைக்கு 1 லிட்டர் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு நாளைக்கு 14 கோடி ரூபாய். மாதம் 420 கோடி ரூபாய். ஒரு வருடத்திற்கு 5040 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டி வரும். நிறைவேற்றுவார்களா? முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள். ஆவின் பாலுக்கு மட்டும் என்று வைத்துக்கொண்டால் கூட, 30 லட்சம் லிட்டர்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. 30 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் 7 ரூபாய் குறைவு என்ற சலுகை கிடைக்கும். தனியார் கம்பெனி பாக்கெட் பால் வாங்கக்கூடியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.

ஆவின் மட்டும் என்று எடுத்துக் கொண்டால் கூட 30X7= 210 லட்சம். ஒரு நாளைக்கு! ஒரு மாதத்திற்கு 210X30= 6300 லட்சம். வருடத்திற்கு 63X12= 756கோடி ரூபாய். நிச்சயமாக இதை செய்ய மாட்டார்கள். ஐந்து வருடங்களுக்குள் செய்வோம் என்றோ அல்லது சென்னை மாநகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் என்றோ மாற்றி பேச அதிகம் வாய்ப்பிருக்கிறது. கடைசியாக இந்த வாக்குறுதிக்கு பால் ஊற்றுவதுதான் நடக்கும்.
ஏற்கனவே பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். அவர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தினால் கூட ஒரு நாளைக்கு 60 லட்சம் ரூபாய் அரசு மானியத்தை கூட்ட வேண்டும். செய்வார்களா? இல்லை கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டை நாமம் சாத்தப் போகிறார்களா? மக்கள் இந்த முறை ஏமாறமாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை `ஹீரோ அல்ல ஜீரோ என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.
------------------
இத்தகைய ஊழல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி எத்தனை காலம் ஏமாறப் போகிறீர்கள்?

அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

ஒரு நாய்க்கு ஒரு எலும்பு கிடைத்தது.
அந்த நாய் எலும்பு துண்டை கடித்து பார்த்தது.
எலும்பு பழசு என்பதால் கல்லு மாதிரி இருந்தது.

அதுல இருந்து எதுவும் வரவில்லை.
இருந்தும் அந்த நாய் அத விடாம கடித்துக் கொண்டே இருந்தது.
அதனால் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது.
அந்த நாய்க்கு அது தன்னோட ரத்தம் தான் என்று தெரியவில்லை.
ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே, நம்ம ரொம்ப சிரமப்பட்டு கடித்ததினால் தான் இதுல இருந்து ரத்தம் வருவதாக நினைத்தது...
அதை மேலும் மேலும் கடித்துக் கொண்டே இருந்தது.
அதனால் வாயில் காயம் பெரிதாகி ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது.
நாயோ ஆஹா எவ்வளவு ரத்தம் எவ்வளவு சுவை என்று பெருமைபட்டுக் கொண்டது.
தன்னுடைய ரத்தம் தான் என்று தெரியாமால் மீண்டும் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தது...
இப்படியே நிறைய ரத்தம் வெளியேறியதால் ஒருநாள் நாய் செத்து போச்சு...
நாமும் இப்படிதான் இலவசங்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே நம்ம ரத்தத்தை நாமே சுவைத்துக் கொண்டு இருக்கிறோம்...
அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய
Professional Tax,
Sales Tax,
Central Sales Tax,
Custom Duty,
Income Tax,
Service Tax,
Dividend Distribution Tax,
Excise Duty ,
Municipal & Fire Tax,
Staff Professional Tax,
Cash Handling Tax,
Food & Entertainment Tax,
Gift Tax,
Wealth Tax,
Stamp Duty & Registration Fee,
Interest & Penalty,
Road Tax,
Toll Tax ,
Vat & etc
போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.
'Nothing of value is free. Even the breath of life is purchased at birth only through gasping effort and pain' - Heinlein
யாரும் இலவசமாய் எதையும் தருவதில்லை என்பதை உணருங்கள்..

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...