Sunday, June 5, 2016

மோடியின் 2 ஆண்டுகள்விடுத்துள்ள கேள்விகள்

தொழில் மந்தத்திலிருந்து எந்தத் துறை மீண்டதோ இல்லையோ மீடியா தொழிலை காப்பாற்றியிருக்கிறார் மோடி என்று பொருளாதார நிபுணர்கள் சிரிக்கிறார்கள். அரசாங்க விளம்பரத் தொகை மட்டும் 20 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளதாம். அரசின் ஆண்டு விளம்பர பட்ஜெட் ரூ.120 கோடிகளைத் தொட்டுள்ளது.ர அரசு சொல்கிற 7.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் ‘கள யதார்த்தத்திற்கும், இவ்வளர்ச்சி சதவீதத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்று கூறியிருக்கிறார். இதைச்சொன்னால் சுப்ரமணியசாமி ‘ஆளைத் தூக்கு’ என்று கூறுவார். ஆனால் பிரதமரின் பொருளாதார ஆலோசகருக்கும் இதே கருத்து உள்ளதெனச் செய்திகள் வந்துள்ளன.ர மோடிக்கு ஆன்-லைனில் மார்க் போட்டதில் ‘மேக் இன் இந்தியா’ குறித்து நல்ல மார்க் கிடைத்துள்ளது என்பது செய்தி. 2014லிருந்து 2020க்குள்ளாக ஏற்றுமதியை 465 பில்லியன் டாலர்களிலிருந்து 900 பில்லியன் டாலர்களாக உயர்த்துவோமென்பது மோடியின் முழக்கம். ஆனால் கடந்த 17 மாதங்களாக ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 63 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும்.
ர ‘தூய்மை இந்தியா’ என்று மோடி அறிவித்தவுடன் துடைப்பத்தை கைகளில் பிடித்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்காத அமைச்சர்களோ, அதிகாரிகளோ கிடையாது. ‘கோவில்களை விட கழிப்பறைக்கே முன்னுரிமை’ என்றும் ‘தெய்வங்களை விட வளர்ச்சியே முக்கியம்’ என்றும் மோடி அறிவித்த போது எந்த மதத் தலைவரும், அமைப்புகளும் ஆட்சேபிக்கவில்லை. இது “சும்மா” என்பது தெரிந்திருக்கலாம். உலகின் அழுக்கான 20 நகரங்களில் 13 இந்தியாவில்தானாம். மோடி குடியிருக்கிற தலைநகர் தில்லியும் அதில் அடக்கம்.ர சில டாக்டர்களைக் கிண்டல் செய்வார்கள். “ராசிக்காரர்... அவர் நாடி பிடித்துப் பார்ப்பதற்காகவே சில உயிர்கள் காத்திருக்குமென்று”. அப்படி ராசி நம்ம பிரதமருக்கும் உண்டு. ஜவுளி/ தோல் பதனிடு/ தகவல் தொழில்நுட்பம்/ போக்குவரத்து/ கைத்தறி/விசைத்தறி/ நகை/ மோட்டார்/ உலோகம் என எங்கு எங்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகுமோ அங்கேயெல்லாம் பெரிய தேக்கம். வேலைவாய்ப்பு வளர்ச்சியில் 65 சதவீதம் சரிவு. 2012-2014க்கு இடைப்பட்ட காலத்தில் சராசரி வேலைவாய்ப்பு உருவாக்கம் 4 லட்சம் எனில் 2015ல் அது 1.3 லட்சமாகக் குறைந்துள்ளது.
ர தகவல் தொழில் நுட்பத்துறையே ‘கனவு உலகமாக’ இந்திய இளைஞர்களுக்கு இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு ‘பில்லியன் டாலர் உற்பத்தி (ரூ. 6 கோடி)க்கு 35,000 பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும். இப்போது அதே அளவு உற்பத்திக்கு கிடைக்கிற வேலைவாய்ப்புகள் 16,000 தான். பொறியியல் கல்வி முடித்து வெளியே வரும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மாற்று வழி?
ர முதலீடுகள் வராமல் தொழில் வளராது. 2013ல் 5.3 லட்சம் கோடி முதலீடுகள் உருவாக்கப்பட்டன. 2014ல் 4 லட்சம் கோடிகளாகக் குறைந்து விட்டன. 2015ல் 3.11 லட்சம் கோடிகளாக இன்னும் சுருங்கியது. 2016 முதல் காலாண்டில் 60,130 கோடிகள்தான் வந்துள்ளது. இதே ட்ரெண்ட் தொடர்ந்தால் இந்த ஆண்டும் சரிவுதான். இதையெல்லாம் எழுதாமல், காட்டாமல், எழுதினாலும் ஏதோ ஓரத்தில் என ஊடகங்களில் வாயை அடைப்பதற்குத்தான் விளம்பரங்களில் தாராளம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ர அண்மையில் மகாராஷ்டிரா வெங்காய விவசாயி தேவிதாஸ் பர்பேன் என்பவர் 1 டன் வெங்காயம் விற்றதில் ஒரே ஒரு ரூபாய்தான் இலாபம் கிடைத்தது என்று கணக்குப் போட்டுச் சொன்ன செய்தி பரபரப்பாய் மீடியாக்களில் விவாதிக்கப்பட்டது. ரூ.9000 கோடியை விழுங்கி விட்டு லண்டனுக்கு ஓடிப்போன விஜய் மல்லய்யாவுக்கு பிணை கொடுத்ததாக ஒரு சாதாரண விவசாயி கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. 2015ல் மட்டும் இந்தியாவில் 2997 விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. (3000 என தோராயமாக சொல்லாமல் மிகச்சரியான எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணம் அவையெல்லாம் உயிர்கள்). இவ்வளவு இருந்தும் ஊடகங்கள் பாஸ் மார்க்கே போடுவது ஏன் என்று தெரிகிறதா! கட்டுரையின் முதல் பத்தியைப் பாருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...