Saturday, June 4, 2016

மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது

100 யூனிட்வரை இலவச 
மின்சாரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை 
மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும். தற்போது 
2 மாதத்துக்கும் சேர்த்து 
100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழகத்தில் 
79 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ.60 வீதம் 
2 மாதத்துக்கும் சேர்த்து 
ரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் அதை செலுத்த வேண் டியதில்லை.
ஆனால் 
100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்து
பவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம் 
பழைய முறைப்படி வசூலிக்கப் படும். 
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு 
நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.
ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 
15 வாட்ஸ்
கொண்ட 
2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் 
உபயோகித்தால் மாதம் 
4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.
அதுபோல 
40 வாட்ஸ் திறன் கொண்ட 
2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும். 
.
750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 
12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 
.
2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 
1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் 
உப யோகப்
படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.
.
அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால் 
மாதம் 30 யூனிட் செலவாகும்.
75 வாட்ஸ் திறனுள்ள 
2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், 
மாதம் 36 யூனிட் செலவாகும். 
.
400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் 
ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் 
மாதம் 12 யூனிட் செலவாகும். 
100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 
.
500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 
300 வாட்ஸ் 
வெட் கிரைண்டர் தினமும் 
ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.
200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 
740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், 
மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.
.
7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் 
மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும். இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக 
உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...