Sunday, July 31, 2016

அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்

*வரும் 2-ந்தேதி (02/08/2016) அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்*
ஒரு பண்டிகை அல்லது ஒரு சிறப்புத்தினம் வந்தாலே, அன்றையதின வழிபாடு, பூஜை, பரிகாரம் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் போதும்... போதும் என்றாகிவிடும். தற்போதைய எந்திர உலகில் முக்கியதின பூஜைகளுக்கு நேரம் ஒதுக்குவது பலருக்கும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் 5 முக்கிய விழாக்கள் வந்தால் எப்படி இருக்கும். வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5 விழாக்கள் வர உள்ளது.
அன்றையதினம் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி செவ்வாய், குருபெயர்ச்சி, திருக்கழுக்குன்றம் சங்கு புஷ்கர-லட்ச தீப திருவிழா ஆகியவை அணிவகுத்து வருகின்றன. எனவே அன்று அதற்கு ஏற்ப நாம் ஆலய தரிசனம், பித்ரு தர்ப்பணம், வீட்டில் செய்ய வேண்டிய பூஜை, தானம் செய்ய வேண்டிய நேரம், பரிகார பூஜைகள் போன்றவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆடி அமாவாசை தினத்தன்று தாய், தந்தை உள்ளிட்ட மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்களை நினைத்து தான-தர்மங்கள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். 2-ந் தேதி காலை முதல் வழிபாடாக இந்த வழிபாட்டை செய்து முடித்துவிட வேண்டும். அன்றையதினம் அதிகாலையில் பித்ரு தர்ப்பணத்தை முடித்து விடுங்கள்.
இதையடுத்து குரு பெயர்ச்சிக்குரிய பரிகார வழிபாட்டை செய்வது நல்லது என்கிறார்கள். பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் உரிய முறைப்படி அவற்றை செய்தல் வேண்டும்.
முன்னோர்கள் ஆசியைப் பெற்றுவிட்டோம். குரு பெயர்ச்சியால் ஏற்படும் தோஷத்தை - பாதகத்தை பரிகாரம் செய்து தீர்த்து விட்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம் வாழ்வு வளமாக பெருகுவதற்கு உரிய பூஜைகள், வழிபாடுகளை செய்தல் வேண்டும்.
அதாவது மூன்றாவதாக ஆடிப்பெருக்குக்குரிய பூஜைகளை செய்ய வேண்டும். ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது காலம், காலமாக நடைமுறையில் உள்ளது.
ஆடிப்பெருக்கு தினமாகவும் 2-ந் தேதி வருவதால் அன்று நதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து வீடுகளில் தெளிக்கலாம். இதனால் வீட்டில் கெட்ட சக்திகள் விலகி வீடு மங்களகரமாக மாறும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் புத்துணர்ச்சியும் குதூகலமும் பொங்கும்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று இது தவிர வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்கலாம். இன்று எந்த பொருள் வாங்கினாலும் இரட்டிப்பாக பெருகும் என்பது ஐதீகமாகும். எனவே அதற்கு ஏற்ப, உங்கள் சக்திக்கு ஏற்ப பொருட்கள் வாங்கலாம்.
எதுவும் வாங்க முடியவில்லையா? பொருளாதார பிரச்சினையா? அதற்காக கவலைப்படாதீர்கள். ஒரே ஒரு உப்பு பாக்கெட் வாங்குங்கள். அதுபோதும். வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமிகரம் உங்கள் வீட்டில் தாண்டவமாடும்.
சரி... .... மூன்று முக்கிய நிகழ்வுகளை முடித்து விட்டீர்கள். 2-ந் தேதி மாலை ஆடி செவ்வாய்க்கிழமைக்குரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம். வட மாவட்ட மக்கள் திருக்கழுக்குன்றம் லட்ச தீப திருவிழாவில் பங்கேற்கலாம். ஆக 2-ந் தேதி ஒரே நாளில் 5 அருமையான விழாக்களை சந்தித்து. அவற்றுக்குரிய வழிபாடுகளை பெறும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த 5 விழாக்களுக்கும் உரிய நேரத்தை நீங்கள் திட்டமிட்டு அமைத்து கொண்டால் மிக அரிய பலன்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே மிகப்பெரிய புண்ணியமான செயலாகும். உங்களின் 21 முந்தைய தலைமுறையினருக்கு நீங்கள் பசியாற்றுகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் புண்ணிய பலன்கள் அளவிட முடியாதது.
அத்தகைய பலனை 2-ந் தேதி பெறும் நீங்கள் குரு பெயர்ச்சிக்கான பரிகாரத்தையும் செய்து ஆடிப்பெருக்குக்குரிய பலன்களையும் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. பல ஆண்டுகளுக்கு ஒருதடவை தான் இத்தகைய வாய்ப்புகள் வரும்.
அந்த வாய்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (2-ந் தேதி) உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே அன்று அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வும் லட்ச தீபம் போல பிரகாசமாக ஜொலிக்கும்.!

அது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.

சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான்.
நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான்.
அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு ‪#‎பாதுகைகள்‬ இருந்தன.
வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள்.
அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது.
எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப ‪#‎காலணிகளையா‬ தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான்.
அதனை கவனித்துவிட்ட ராமபிரான்,
அவனை அருகே அழைத்தார்.
உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து.
ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்டபோது,
தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்! என்று கேட்டு அனுமதி வாங்கினார்.
கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கினார்,
விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன! என்றார்.
உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர், அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.
கடவுளுக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
நீங்கள் உங்களால் முடிந்ததை மனப்பூர்வமான பக்தியுடன் அன்புடன் அவரது திருவடிகளில் சமர்ப்பியுங்கள்.
அது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும். இறைவனுக்குப் பிரியமானதாகவும் இருக்கும்.
"ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் "

பிச்சைக்கார அதிகாரிகள்...

மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் பிச்சைக்கார அதிகாரிகள்...
துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்ப பட்டு துயரபட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல் வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்த திருச்சியை சேர்ந்த நம் சகோதரிடம் ,
நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காழில்விழாத குறையா 2000 அல்லது 3000வரை தருவதாக போரடிப்பார்த்தார் ,
விட்டானா அந்த வெளிநாட்டு துயரை அறியாத அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டுவிட்டு ஓடு என்றான்.
இவரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயே
உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து எரிந்துவிட்டு வந்துவிட்டார்.
இதை நாம் சும்மா விடுவதா அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள் நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள் ,
இதே போல் இனியும் நடக்காமல் இருக்க பகிருங்கள் நண்பர்களே.
இடம் மதுரை ஏர்போர்ட் 

திருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது பற்றிய புதிய தகவல்கள் வந்துள்ளது.


“வெள்ளிக் கிழமை மதியம் சுமார் 1.45 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்தது. சசிகலா புஷ்பாவை, காவலர்கள், செக்கின் ஸ்கேனிங்கில் வரிசையில் நிற்கவைத்தனர். அதேநேரம் திருச்சி சிவாவை, உள்ளே அனுப்பிவிட்டனர்.
இதைப்பார்த்த சசிகலா புஷ்பா, “நானும் எம்.பிதானே.. என்னை மட்டும் வரிசையில் நிற்கவைத்து அவமானப்படுத்துகிறீர்களே..” என்று கேட்டிருக்கிறார்.
அப்போது திருச்சி சிவா, “தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சலாம் போடுவீங்கன்னு நினைக்கிறாங்க போல” என்று காவலர்களிடம் சொல்லியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமான சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவின் சட்டையைப் பிடித்து அவரது கன்னத்தில் அறைந்திருக்கிறார். விநாடி நேரம் ஸ்தம்பித்த சிவா, உடனடியாக சுதாரித்துக்கொண்டு, பதிலுக்கு சசிகலா புஷ்பாவை அறைந்ததோடு, தள்ளிவிட்டிருக்கிறார். அதற்குள் விமான நிலைய காவலர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அனைத்தும் விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது சம்பவம் நடந்தபோது சசிகலா புஷ்பா மீது மது வாடை வீசியது” என்று டில்லி விமான நிலைய வட்டாரத்தில் விசாரித்தபேது தகவல்கள் கிடைத்தன.
“ ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, “திருச்சி சிவா, முதல்வரையும் தமிழக அரசையும் காவல்துறையையும் மோசமாக பேசினார்” என்றெல்லாம் சொல்கிறார்” என்று ஒரு கருத்து நிலவுகிறது.
அதே நேரம், “சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் உலாவந்தன. பிறகு இவை மார்பிங் படங்கள் என்பது தெரியவந்தது. சசிகலா புஷ்பாவின் உட்கட்சி எதிரிகளே இப்படியோர் படத்தை சித்தரித்து வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இது போன்ற படங்கள் வெளியானதில் சிவாவுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.
ஆனால் நேற்று நிதானத்தில் இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு இந்த படங்கள் நினைவுக்கு வந்திருக்கலாம். எதிரே திருச்சி சிவாவை பார்த்தவுடன், சட்டையைப் பிடித்து இழுத்து அடித்திருக்கலாம்.” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
ஏற்கெனவே தனது ஆண் நண்பருடன் மது குடித்தது பற்றியும் அதிமுக அரசை விமர்சித்தும் சசிகலா புஷ்பா பேசியதாக வாட்ஸ்அப்பில் ஒரு உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல இவரது கல்வி சான்றிதழ்கள் குறித்த சர்ச்சையும் ஏற்பட்டது. இப்போது எம்.பியை அடித்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் சசிகலா புஷ்பா.
மொத்தத்தில் தமிழகத்தின் “பெருமை” டில்லியில் மேலும் ஓங்கியிருக்கிறது.

'ரூட்ஸ்’

நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' - இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’.
சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால் ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக்கும் ரூட் தெரியலை.
அந்த நொடிதான் சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம். ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு. அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
86 95 95 95 95 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம். அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

இதுதான் உலகமா?

அது ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல்.
ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை.
பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.
ஆடுகளை கேட்கிறான்.”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.
‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரிக்கிறது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது,
வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது. கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது.
சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.
உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.
அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.
வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை)எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை.

மனமும் அப்படிப்பட்டதுதான்..

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்

"அம்மா".......



தாமு வேலையில்லா பட்டதாரி. அவனது அண்ணன்கள் இருவரும் நல்ல வேளையில் இருந்தார்கள்.
ரேஷன், கரன்ட்பில், பால் வாங்க... என வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தாமு தான் செய்வான்.
அன்று கரன்ட் பில் கட்டிவிட்டு வீடு திரும்பும் போது மழை பெய்ய ஆரம்பித்தது. நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
தாமுவை பார்த்த முதல் அண்ணன் திட்டினான் "டேய் முட்டாள் மழை நின்ன பின்னாடி வர வேண்டியது தான" என்று.
இரண்டாவது அண்ணன் "எருமைமாடு போகும் போது குடை எடுத்துட்டு போனா என்ன" என்று.
அப்பா "தண்டச்சோறு பில்ல நனைச்சுட்ட, ஒரு வேலையை சொன்னா கரெக்டா செய்யுறியா"? என்று திட்டினார்.
தாமு ஒண்ணும் பேசாமல் தன் ரூமுக்கு சென்றான். அங்கு அவன் அம்மா கையில் டவலோடு நின்று கொண்டு இருந்தாள்.
"இந்த மழை என் பிள்ளை வெளிய போகும் போதுதான் பெய்யணுமா, கொஞ்ச நேரம் கழிச்சு பெஞ்சா என்ன" என்று சொல்லி கொண்டே தாமுக்கு சாப்பாடு ஊட்டினாள்.
உலகமே நம்மை திட்டினாலும் நமக்காக உலகத்தை எதிர்க்கும்
ஒரு காவல் தெய்வம்.
நமக்கு எந்த கெடுதலும் நினைக்காத ஓர் உயிர் "அம்மா".......

ஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்

ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு.
நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று.
ஆடி 18 இல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள்.
சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினார்.
தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள்.
ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள்.
இந்த நிகழ்வே, ‘ஆடிப்பெருக்கு’ விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.
இந்த விழாவை 18ம் தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன.
18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும்.
இந்நாளில் தீர்த்தமாடுவதன் மூலம், ஆன்மிக இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம்.
இந்த எண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது.
அதனால், இந்நாள் நகை முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது.
மாங்கல்யக் கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும்.
புதிய படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள்.
நியாயத்திற்காக போராடிய பாரதப்போர் 18 நாட்கள் நடந்ததையும், புராணங்கள் 18 என்பதையும், கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளதையும், சபரிமலை தர்மசாஸ்தாவை (ஐயப்பன்) தரிசிக்க 18 படிகள் ஏற வேண்டியதையும் கூட நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, புனிதமான இந்த எண்ணை ஆடிப்பெருக்குக்குரிய நாளாகத் தேர்வு செய்துள்ளனர் முன்னோர்.
சகோதர உறவுக்குரிய நன்னாளும் இதுவே.
சகோதரிகளுக்கு சகோதரர்கள் புத்தாடை வாங்கிக் கொடுத்து விருந்துக்கும் அழைக்கின்றனர்.
சமயபுரத்திலுள்ள ஆதிமாரியம்மன் கோவிலில், சகோதரர்களின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அர்ச்சனை செய்வதும் உண்டு.
அன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் (உற்சவ ரங்கநாதர்), தங்கப் பல்லக்கில் காவிரிக்கரையிலுள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவார்.
அங்கு சுவாமி சூடிக்களைந்த மாலை, கஸ்தூரி திருமண்காப்பு, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தாலிப்பொட்டு, வடை, அப்பம், தோசை ஆகியவற்றை யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து நதியில் விடுகின்றனர்.
உடல் சுத்தம் நதிகளின் நீராலும், மனச் சுத்தம் இறைநாமத்தைச் சொல்லியபடியே மூழ்குவதாலும் உண்டாகிறது என்கின்றனர் மகான்கள்.
ஆடிப்பெருக்கன்று காவிரியில் மூழ்கும் போது, ‘ஸ்ரீரங்கா கோவிந்தா கோபாலா…’
என பெருமாளின் நாமத்தையும், ‘தாயுமானவா தந்தையுமானவா சிவாயநம!’
என்று மலைக்கோட்டை சிவன் நாமத்தையும் உச்சரிப்பதன் மூலம், நம் உடலுடன் உள்ளமும் தூய்மையடையும்.

அன்பைக் கொடுப்போம்..



அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
கேட்டபோது சொன்னாள்
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்
“அன்பு என்றால் இதுதான்”.
ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அது போதும் !
எதையும் காயப்படுத்தாமல் இருப்போமே.
நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்..
ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...
ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...

Friday, July 29, 2016

ஒரு_மாணவிக்காக‬

‪#‎ஜப்பானில்‬ ஒரே ஒரு மாணவிக்காக காலையிலும், மாலையிலும் ரயில் ஒன்று இயங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் ஹொக்காய்டா மாவட்டத்தில் உள்ளது காம்கி மற்றும் சிராடாகி கிராமங்கள். இந்த இரண்டு கிராமங்களையும் இணைப்பதற்காக முன்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. ஆனால், போதிய பயணிகள் இதில் பயணம் செய்யவில்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை இழுத்து மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இந்த ரயில் மூலமாகவே மாணவி ஒருவர் கல்வி கற்க வேறு ஊருக்கு சென்று வருவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மாணவியின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது எனக் கருதிய ரயில்வே நிர்வாகம், அந்த ரயில்வே ஸ்டேஷனை மூடும் முடிவைக் கைவிட்டது. தற்போது அந்த ‪#‎ஒரு_மாணவிக்காக‬ மட்டுமே அந்த ரயில்வே ஸ்டேசன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சரியாக காலையில் 7 மணியளவில் வரும் ரயிலில் ஏறி அம்மாணவி பள்ளிக்கு செல்வார். பின் மீண்டும் மாலையில் 5 மணியளவில் அதே ரயில் மூலம் அவர் தன் கிராமத்திற்கு திரும்பி விடுவார். வரும் மார்ச் மாதத்துடன், அம்மாணவியின் படிப்பு முடிவடைய இருக்கிறது. அதன்பின், அந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் ‪#‎நாட்டில்‬ பல இடங்களில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஆற்றைக் கடந்து, மலையைக் கடந்து ‪#‎கல்வியைத்‬தேடி ‪#‎மாணவர்கள்‬ ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு மாணவிக்காக #ஜப்பானில் ரயில்வே நிர்வாகம் ரயில் ஒன்றை இயக்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

ெரும்பால் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.
3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றூம் பின்க்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதால் விபத்து ஏற்படுவது எளிது.
5. நாண்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.
7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்தவேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.
8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.
9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.
10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.

கேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் மகன்

🎯குஜராத்தின் சூரத் நகரத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஷிவ்ஜி, ஒரு வைர வியாபாரி. இவர் 71 நாடுகளில் வைர தொழில் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி. இவரது 21 வயது மகன் தார்வயா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
மிகவும் செல்வ செழிப்புடன் வளர்ந்த தன் மகன் தார்வயா, வாழ்வின் கஷ்டங்களையும், வறுமையும், வேலை கிடைப்பதன் சிரமத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒருமாதம் தனியாக வேலை தேடி, அதை வைத்து பிழைத்துக்கொள்ள வேண்டும் என்று கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மகனும் தந்தையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, கேரளாவிற்கு வந்து வேலை தேடியுள்ளார்.
ஆனால் 60-க்கு அதிகமான இடங்களில் நிராகரிக்கப்பட்ட பிறகு அவருக்கு பேக்கரி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. அவசர தேவைக்காக என் தந்தை கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் ஒரு மாதத்தை வெற்றிகரமாக கழித்து விட்டார்.
இந்த ஒருமாத காலத்தில் தான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம், ”மற்றவர்களிடம் கரிசணத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களிடம் நாம் கடினமாக நடந்து கொள்கிறோம்” என்று தார்வயா தெரிவித்துள்ளார்.

எல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்டுமே காணிக்கை



பல விதமான Test களுக்கு பின் டாக்டரை சந்திக்கச்சென்றேன்,
'இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லம்மா, இந்த வயசுல எல்லா பெண்களுக்கும் வர்ற பிரச்சனை தான், கர்பப்பை Remove பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும், ரெண்டு நாள் ஆஸ்பிட்டலில் இருந்தா போதும், யோசிச்சு சொல்லுங்க' என்று சொல்லிமுடிக்க எத்தனையோ யோசனைகளோடு வீடு வந்தேன். கணவரிடம் சொல்ல, பயப்படாதம்மா ஒண்ணும் ஆகாது, எல்லாரும் பண்ணிக்கிறது தானே என்று தைரியப்படுத்தினார்!
மகன்களிடமும் மகள்களிடமும் சொல்ல, இப்போ இருக்கிற Advance technology ல இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண operation ஆபரேஷன் மா, நகத்தை வெட்டி எடுக்கிற மாதிரி Easy யா பண்ணிடறாங்க, பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை, தைரியமா இரும்மா என்று சமாதானப்படுத்தினார்கள்!
எனக்கு மட்டும் தயக்கமாகவே இருந்தது!

ஆபரேசன் நாளன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட ஆஸ்பிடலுக்கு வந்துவிட்டார்கள்! என்னுடைய தயக்கம் மட்டும் போகவே இல்லை!
ஆபரேசன் முடிந்து சில மணிநேரத்தில் கண்விழித்தேன்! கணவர், குழந்தைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பார்க்க வந்துவிட்டார்கள்!
ஆனால் நான் பார்க்க விரும்பியது இவர்கள் யாரையும் இல்லை, ஆபரேசன் செய்து எடுக்கப்பட்ட என்னுடைய கர்ப்பப்பையை பார்க்கவேண்டும் என்று தோன்றியது!
ஏற்கனவே நான் சொல்லி வைத்ததால் ice box க்குள் எடுத்துவைத்திருப்பதாக சொன்னார்கள்!
கஷ்டப்பட்டு எழுந்தேன்,
கஷ்டப்பட்டு நடந்தேன், அடிவயிற்றின் வலி நடக்கமுடியாமல் தடுத்தது, ஆனாலும் நடந்தேன்!
Ice box ல் இருந்து வெளியே எடுத்தார்கள், பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு இருந்தது!
மெல்ல தடவியபடி தொட்டுப்பார்த்தேன்,
அழகான அந்த கருவறை அங்கங்கு வீங்கியும், முடிச்சுகளாகியும், சிறுசிறு கட்டிகளோடும் உருக்குலைந்து போயிருந்தது! மற்றவர்களை பொறுத்தவரை இது சாதாரண கர்ப்பப்பை,
என்னை பொறுத்தவரை இது என்னுடைய கடவுள்!
என் நான்கு குழந்தைகளின் பாரத்தை மட்டும் தான் நான் சுமந்திருக்கிறேன்! பாதுகாப்பாய் சுமந்தது இந்த கருவறைதான்!
ஒரு தாயாக இந்த உலகத்தில் பெருமையோடு வலம்வர காரணமே இந்த கருவறை தான்!
என் குழந்தைகளை கலைந்து போகாமல் காப்பாற்றியது இந்த கடவுள் தான்! எல்லோரும் எடுத்துவிடலாம் என கூறியபோது நான் தயங்கியதன் காரணம் உயிருக்கு பயந்து அல்ல,
என்னை தாயாக்கிய இந்த தாயை இழந்துவிடுவேனோ என்றுதான்!
நாலைந்து வருடங்களாய் குழந்தையின்றி நான் அலைந்த கோயில்களுக்கு தெரியும் என் வலி!
மலடி என்று சொல்லி என் மாமியார் வேறுபெண் பார்க்க தேடியபோது ஏற்ப்பட்ட ரணத்தை குணமாக்கியது இந்த கருவறை தான்!
முதல் குழந்தையை இழந்தது போன்ற இந்த வலியை முதன்முதலாக உணர்கிறேன்!
நான் உன்னை சரியாக பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேனோ என்கின்ற குற்றவுணர்ச்சி மேலோங்க,
எல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கிவிட்டு அங்கிருந்து திரும்புகிறேன்,
அந்த கடவுள் தந்த அத்தனை உறவுகளும் என்னைத்தாங்க ஓடிவருகிறது!
உடலளவில் கொஞ்சம் லேசாகிறேன்,
மனது மட்டுமே கனமாகிறது!

எறும்பிடமும் பாடம் கற்கலாம்


 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை
ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்
அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு
ருசிறிய ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது,
மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது.
செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம்
மேலும் தரையில் ஒருபிளவைப்பார்த்தவுடன் அது சாமர்த்யமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை
இழுத்துச் சென்றது மேலும் பலதடங்கல்கள்
அது தன் திசையைச் சற்றே மாற்றி
வெற்றிகரமாக முன்னேறியது.
ஒருமணிநேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம்செய்தது அவர் வியந்துபோனார்
ஒருசிறு எறும்பின் விடாமுயற்சி
சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம்
அவரை அசர வைத்தது கடவுளின் படைப்பின் விந்தையை நினைத்து அதிசயித்தார்.
ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில
குறைபாடுகளும் உள்ளன.
எறும்பு இறுதியில் தனது இருப்பிட.இலக்கை
அடைந்தது.அது எறும்புப்புற்று எனப்படும் ஒரு சிறிய ஆனால் ஆழமான குழி அருகே வந்தது
எறும்பால் அந்த இலையுடன் குழியினுள்
செல்ல.இயல வில்லை.அதுமட்டுமே செல்ல முடிந்தது.
தான் ஒருமணிநேரம் கஷ்டப்பட்டு
இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுத்தான் செல்ல வேண்டியதாயிற்று
இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!
மனித வாழ்க்கையும் இவ்வாறு தான்
மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக்கொள்கிறான்.
அடுக்கு மாடிவீடு சொகுசான கார்
ஆடம்பரமான வாழ்க்கை எனப்பலப்பல
இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில் அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத்தான்
செல்ல வேண்டும்.
எறும்பிடமும் பாடம் கற்கலாம்

வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம்.எதுவும் நம்மோடு வரப்போவதில்லை
புரிந்தால் மதி
புரிந்துகொள்ள மறுத்தால் விதி..

நல்லதையே கற்றுத் தருவோம்...


"என்ன கற்றுக் கொண்டோம்?...
என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.
ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.
ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.
அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.
அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.
ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.
ரயில் வருகிற நேரம்...
ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.
பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.
தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.
காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.
அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.
"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.
ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.
முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...
செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.
ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!
நல்லதையே கற்றுத் தருவோம்...👌
👌
ஜெயகாந்தனின் எழுத்தல்லவா!
இன்றய இளைய சமுதாயம் கட்டாயாமாக ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை படிக்கவேண்டும்....🌹🌹🌹

Thursday, July 28, 2016

‪பெண்களுக்கான_எச்சரிக்கை_பதிவு‬...

எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது. அவர்தன்னுடைய Cellphone ல் , மாதாமாதம் தவறாமல் Recharge செய்து Internet ல் எல்லா தளங்களுக்கும் செல்பவர்.. ( குறிப்பாக exbii)
ஒருநாள் , அத்தளத்தில் ‘ அழகான தமிழ்ப் பெண்கள் ‘ என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி…
ஆம்…!
அதில் அவரது ‘ தங்கையின் ‘ புகைப்படமும் இருந்தது. கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான comment களும்..
நன்றாக யோசித்துப் பாருங்கள்…
ஒரு சராசரி அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..! தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர் இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க , அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
( அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி.. அண்ணா.. இது நான் Facebook ல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture…
அப்போதுதான் அவருக்கு உறைத்தது.. Facebook ல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settings ல் கொடுத்தது..
அதன்பிறகு , உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settings களிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..


இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.. இதனை இங்கே ஏன் சொல்கிறேன்என்றால் , இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..
இது சரியா தவறா என்ற விவாதம் செய்யாமல் , இதுபோன்ற மோசமான நபர்களும் , தளங்களும் உலாவும் இணைய உலகில் நம்மைநாமே காத்துக்கொள்ளவேண்டும்…..
இதற்கு , நமது பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் ‘ நட்பிற்கான விடுகையைத் தரும்போது ‘ (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில் , உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..
அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால் , உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்.. இதுதான் மிகச்சிறந்தவழி.. இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்.. இது பெண்களுக்கு மட்டுமல்ல..
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்........
சகோதரிகளை Please profile la உங்களுடைய புகைப்படம் போடதிங்க.......!
அதர்க்கு பதில் Baby's photos போடுங்க

மிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளும்...

எண்ணெய்கள் நமக்கு செய்யும் பலன்களுக்கு முறையான அங்கீகாரத்தை நாம் வழங்குவதில்லை. எத்தனை எண்ணெய்கள் உள்ளும், புறமும் பலன் தரும், சமையலறையிலும், குளியலறையிலும் பலன் தரும், சாப்பிடும் சாலட்-டிலும், தலைமுடியிலும் பலன் தரும் என்று நமக்குத் முழுமையாக தெரியாமலிருப்பது தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறீர்களா? இதோ அவற்றைத் தெரிந்து கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு. எண்ணெய்கள் மாயாஜாலம் செய்யக் கூடியவையாகும். இவற்றின் பல்வேறு பயன்பாடுகள் உங்களுடைய மனதைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒவ்வொன்றும் மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்லும் வகையில் இந்த பலன்களும், பயன்பாடுகளும் இருக்கும். அழகுக்கு அழகு சேர்க்கும் சில ஏடாகூட அழகுக் குறிப்புகள்!!! உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன், சில எண்ணெய்களும் கூட உங்களுடன் வேலை செய்யவும் மற்றும் உங்களுடைய சருமத்தை மற்றவர்களுடையதைக் காட்டிலும் சிறப்பாக தோற்றமளிக்கச் செய்யவும் உதவும் சஞ்சீவியாக எண்ணெய்கள் உள்ளன. எனவே, இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தனித்தன்மையான உடலமைப்பையும், சரும வகையையும், தலைமுடி, சுவை மற்றும் பிற தேவைகளையும் நீங்கள் பெறலாம். இதோ நீங்கள் பயன்படுத்தி, பலன் பெற உதவும் டாப் எண்ணெய்களின் பட்டியல்.
சணல் எண்ணெய்
தோலுக்கு மிகவும் சிறந்த எண்ணெய் எது என்றால் சணல் எண்ணெய் என்று தான் நான் பதில் சொல்வேன். குறிப்பாக அரிப்பு இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற நிவாரணமாக சணல் எண்ணெய் உள்ளது. இது மேக்கப்பை நீக்குவதோடு மட்டுமல்லாமல், சருமத்தையும் ஆழமாக சுத்தம் செய்கிறது. கரும்பச்சை நிறத்திலான இந்த எண்ணெய், சிவப்பு புள்ளிகளை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு நீக்கும். இயற்கையான சணல் எண்ணெய் உங்களுடைய தோல்களிலுள்ள துளைகளை அடைத்துக் கொள்ளாமல் இருப்பதால், சருமத்தை சுத்தம் செய்யவும், மாய்ஸ்சுரைசராகவும் பயன்படுத்தலாம். சணல் எண்ணெயில் 57 சதவீதம் லினோலெய்க் அமிலம் இருப்பதால், சருமத்தையும், எண்ணெய் சுரப்பிகளையும் மிக மிருதுவாக வைத்திருக்கும். மிருதுவான சருமத்தின் துளைகள் அடைத்துக் கொள்வதில்லை. இந்த எண்ணெயை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க விரும்பினால் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். ஆகவே இதனை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் செல்லும் இடத்திலுள்ள ஹெல்த் ஃபுட் ஸ்டோரில் சணல் எண்ணெய் (ஹெம்ப் ஆயில்) கண்டிப்பாக கிடைக்கும்.
வேப்ப எண்ணெய்
இது மிகவும் ஆச்சரியமூட்டும் எண்ணெயாகும். அரிப்புகள், மருக்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் இரத்த காயங்களையும் கூட சிறப்பாக கவனிக்கும் திறன் கொண்ட எண்ணெயாக வேப்ப எண்ணெய் உள்ளது. எனக்கு கரும்புள்ளிகள் இருந்தால், இரவில் இந்த எண்ணெயை தடவிக் கொண்டு படுப்பேன். காலையில் விழித்தெழுந்து பார்த்தால் கரும்புள்ளியின் அளவு குறைந்திருக்கும். தோலில் ஏற்படும் எந்தவிதமான வெட்டுக் காயங்கள் மற்றும் உராய்வுகளையும் சமாளிக்கும் விதமாக இந்த எண்ணெயை வீட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த எண்ணெய் மிகவும் கடுமையான வாசம் வருமாதலால், இதனை வெளிப்புற பகுதிகளில் மட்டும் பயன்படுத்தவும்.
விளக்கெண்ணெய்
தலைசுற்றலில் இருந்து நிவாரணம் பெறவும், பிரசவ காலங்களிலும் பயன்படுத்த ஏற்ற எண்ணெயாக இது உள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முதன்மையான எண்ணெயாகவும் இது உள்ளது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சில துளிகள் விளக்கெண்ணெயை எடுத்து தலையிலும் மற்றும் கண்ணிமைகளிலும் தடவி வந்தால், முடிகள் மிக நீளமாக வளரவும், அவற்றிற்கு தேவையான அளவு ஈரப்பதத்தைக் கொடுக்கவும் முடியும். ஈரப்பதம் நன்றாக இருக்குமிடத்தில் முடியும் நன்றாக வளரும். உணவை சாப்பிட்டு முடித்த பின்னர் விளக்கெண்ணெயை வயிற்றில் சில மணிநேரங்களுக்கு தடவிக் கொள்வதன் மூலமாக, எளிதில் சிரமமின்றி உணவு செரிமானமாகும். இந்த எண்ணெயை அப்படியே நேரடியாக வயிற்றில் தடவிக் கொள்ளலாம். அதே சமயம், ஹெக்சேன் இல்லாத, உயர்தரமான விளக்கெண்ணெய் வாங்குவதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், இந்த எண்ணெய்க்கு மிகவும் ஆழமான ஈர்ப்பு குணம் உள்ளது.
தேங்காய் எண்ணெய்
சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் ஏற்ற எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது. ஒரு காட்டன் துணியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கண்களில் படிந்திருக்கும் மையை நீக்க முடியும் மற்றும் தலைமுடியில் தடவிக் கொள்வதன் மூலம் ஹேர்மாஸ்க் போட்டு முடியையும் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும். இந்த ஹேர்மாஸ்க்கை இரவில் போட்டு, காலையில் குளிர்ந்த நீரில் அலசி விடலாம். ஆயுர்வேத செயல்பாடுகளில் மிகவும் பயன்தரக் கூடிய எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இதிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்பொருட்கள் ஆயுர்வேத செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகின்றன. மேலும் கேன்டிடாவிலும் கூட தேங்காய் எண்ணெய் பலன் தரும். உடலுக்கான ஈரப்பதத்தை தக்க வைக்கவும் மற்றும் SPF அளவு 10 ஆக உள்ளதால், வெயிலில் செல்லும் முன்னர் தடவிக் கொள்ளக் கூடியதாகவும் தேங்காய் எண்ணெய் உள்ளது. தைராய்டு செயல்பாட்டுக்கு உதவுவதால், நேரடியாக தைராய்டு சுரப்பியின் வெளிப்பகுதியில் நாம் இதனை தடவும் போது, உடலின் இயக்கவும், சக்தியும் ஊக்கம் பெறுகின்றன.
மக்காடாமியா நட்ஸ் எண்ணெய்
இனிப்பான மணம் மற்றும் சுவையை கொண்டிருக்கும் மக்காடாமியா எண்ணெயை சமையலறையில் பயன்படுத்த முடியும். ஏனெனில், இதன் புகை வெளியிடும் திறன் மற்ற எண்ணெய்களை விடக் குறைவாகும். எனினும், இந்த எண்ணெயை தலைமுடியின் நுனிகளில் மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தினால் மிகச்சிறந்த பலன்களைப் பெற முடியும். குளிப்பதற்கு முன்னும், பின்னும் மக்காடாமியா எண்ணெயை தலைமுடியில் தடவிக் கொண்டால், ஈரப்பதத்தை பெருமளவு தக்க வைத்திட முடியும். மேலும் இந்த எண்ணெயை தடவிக் கொள்வதால், முடியில் பிசுபிசுப்பும் ஏற்படாது. இந்த எண்ணெயை பாடி மாய்ஸ்சுரைசராகவும், சேவிங் ஜெல்லாகவும் அல்லது ஆஃப்டர் சேவ் கிரீமாகவும் பயன்படுத்தலாம்.
அவகேடோ எண்ணெய்
சணல் எண்ணெயைப் போலவே, அவகேடோ எண்ணெயும் மிகச்சிறந்த வகையில் சிவப்பு வீக்கங்கள், கறைகள் மற்றும் வடுக்களை தோலில் இருந்து நீக்கும். இந்த எண்ணெயை சேவிங் ஜெல்லாகவும், உடல் மற்றும் தலைமுடிக்கான மாய்ஸ்சுரைசர்களாகவும் பயன்படுத்தலாம். சாலட்களில் சுவைமிக்க இடுபொருளாகவும், குறைந்த வெப்பநிலையில் சமைப்பதற்கு ஏற்றதாகவும் அவகேடோ எண்ணெய் உள்ளது.
ஜோஜோபா எண்ணெய்
சருமத்திற்கு மிகச்சிறந்த பலன்களைத் தரக்கூடிய இந்த எண்ணெயால், சமையலறையில் எந்தவித பலன்களும் இல்லை. சருமத்தை சுத்தம் செய்வதற்கும் மற்றும் இயற்கையான எண்ணெயான இது, மாஸ்சுரைசராக பயன்படுத்துவதற்கும் பெரிதும் விரும்பப்படும் எண்ணெயாக இது உள்ளது. பாக்டீரியா எதிர்பொருட்கள் உள்ள எண்ணெயாக இருப்பதால், அரிப்புகள் உள்ள தோல் வகைகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணெயாகவும் ஜோஜோபா எண்ணெய் உள்ளது. வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஆகியவை உள்ளதால் ஊட்டச்சத்து மிக்க எண்ணெயாகவும் உள்ளது. இந்த எண்ணெயை மேக்கப்பை நீக்குவதற்கும் மற்றும் தலைமுடி மாய்ஸ்சுரைசராகவும் பயன்படுத்தலாம். உதடுகளை பராமரிக்கவும் ஏற்ற எண்ணெயாக இது உள்ளது.
நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெயின் சுவை உங்களுக்குப் பிடிக்காத நேரங்களில், மாற்று எண்ணெயாகவும் மற்றும் சமைக்கவும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். அதிகளவு துத்தநாகம் உள்ள இந்த எண்ணெயை சருமத்தின் வெளிப்பகுதியில் தடவுவது நல்ல பலன் தரும் என்பதால் தயங்காமல் தடவிக் கொள்ளுங்கள். மிகவும் அதிக அளவு வைட்டமின் ஈ கொண்டுள்ள எண்ணெயாகவும் மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த எண்ணெய் உதவும்.
ஹாசில்நட் எண்ணெய்
ஹாசில்நட் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளதால், எல்லா வகையான சருமங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது எனலாம். இந்த எண்ணெய் சருமத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதையும் தவிர்ப்பதால், கறைகள் உருவாவது தவிர்க்கப்படுகிறது. இதில் கட்டுப்படுத்தும் குணங்களும், துளைகளை இறுக்கும் குணங்களும் உள்ளதால், இயற்கை எண்ணெய் அதிகளவில் உடலில் சேர்வதை ஹாசில்நட் எண்ணெய் தவிர்க்கிறது. இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...