Tuesday, July 19, 2016

இந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்



உலகில் அமர்ந்த நிலையில் உள்ள சிவன் சிலைகளில் உயரமான சிலைகள் இந்தியாவில் ஏராளம் இருக்கின்றன.
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தாலும், சிவபெருமான் 27 அவதாரங்கள் எடுத்துள்ளதாக கூர்மபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சிவனின் அவதாரங்களை போன்றே பல்வேறு உருவங்களில், வெவ்வேறுபட்ட உயரங்களில் சிவனின் பிரம்மாண்ட சிலைகள் இந்தியாவில் நிறைய இடங்களில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார் சிவபெருமான்.
ஒரு இடத்தில் கண்கள் மூடிய நிலையிலும், இன்னொரு இடத்தில் பக்தர்களுக்கு அருள்புரியும் வகையிலும் என்று பல்வேறு வடிவங்களில் சிவன் சிலைகள் காணப்படுகின்றன.
மேலும் இந்தியா கோயில்களின் நாடு என்பதால் இங்கு எண்ணற்ற சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.
அதாவது 12 ஜோதிர்லிங்கமாகட்டும், தானாய் தோன்றிய சுயம்பு லிங்கங்கள் ஆகட்டும் சிவனுக்கு என்று இந்தியாவில் எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு.
அந்த வகையில் உலகில் அமர்ந்த நிலையில் உள்ள சிவன் சிலைகளில் உயரமான சிலைகள் இந்தியாவில் ஏராளம் இருக்கின்றன.
அந்த சிலைகள் எங்கெங்கு அமைந்திருக்கின்றன, அச்சிலைகளின் உயரமென்ன என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
பெங்களூர், கர்நாடகா :
பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது.
இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது.
இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.
அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த சிவன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர்.
ரிஷிகேஷ், உத்தரகண்ட் :
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள சிவன் சிலை, கங்கை நதியின் கரையில் கண்கள் மூடிய நிலையில் தியானம் செய்வது போன்று காட்சியளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பார்மாத் நிகேதன் ஆஸ்ரமத்தில் இருப்பதால் சிலையின் கம்பீரமும், ஆஸ்ரமத்தின் அமைதியும் நம்மை வேறொரு லோகத்துக்கு கொண்டுசென்றுவிடும்.
14 அடி உயர இந்த சிலையை கொண்ட பார்மாத் நிகேதன் ஆஸ்ரமதில் பக்தர்கள் தங்குவதற்காக 1000 அறைகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
முருதேஸ்வர், கர்நாடகா :
அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.
123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது.
மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜபல்பூர், மத்தியப்பிரதேசம் :
மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்தில் உள்ள கச்னார் எனும் இடத்தில் சிவன் சிலை அமைந்திருக்கிறது.
இந்த சிலை 76 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருப்பதுடன், கண்கள் மூடிய நிலையில் சாந்தசொரூபராக சிவபெருமான் காட்சி தருவது நம் கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்யும்.
மேலும் இச்சிலை அமைந்திருக்கும் கச்னார் பகுதி சில மாதிரி ஜோதிர் லிங்கங்களுக்காகவும் பிரபலம்.
பீஜாப்பூர், கர்நாடகா :
உலகின் உயரமான சிவன் சிலைகளில் ஒன்றாக அறியப்படும் சிவன் சிலை பீஜாப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது.
இந்த சிவன் சிலை 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது.
இதன் காரணமாக இவ்வளவு பெரிய சிவன் சிலையை செய்வதற்கு 13 மாதங்கள் பிடித்திருக்கிறது.
நம்ச்சி, சிக்கிம் :
நம்ச்சி என்றால் 'வானுயரம்' என்று அர்த்தமாம்.
அதேபோல அந்த நகரத்திலுள்ள சித்தேஷ்வர்தாம் எனும் இடத்தில் வானை முட்டும் உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக 103 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த சிவன் சிலை.
மேலும் இந்த சிலை அமையப்பெற்றிருக்கும் சித்தேஷ்வர்தாம் பகுதியில் 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்கள் உள்ளன.
அதோடு கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தை இந்த இடத்திலிருந்து பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...