Monday, July 25, 2016

கருணாநிதியை எப்படி அழைப்பது...?

இனிமேல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யமாட்டோம் என்று ஸ்டாலின் அறிவித்து 2 நாட்கள் கூட ஆகவில்லை.
ஆனால், இன்று சட்டமன்ற நடவடிக்கைகளின்போது, ஒரு அதிமுக எம்.எல்.ஏ. கருணாநிதியை, மாண்புமிகு கருணாநிதி என்று அழைத்ததற்கு, சபையில் கலாட்டா செய்து கூப்பாடு போட்டு திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
மாண்புமிகு கருணாநிதி என்று அழைப்பது கூட தவறு; கருணாநிதி என்ற பெயரையே சொல்லக்கூடாது என்றால், என்றால் கருணாநிதியை பெயர் சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது..?
ஸ்டாலின் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கருணாநிதியை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கிவிட்டால் கருணாநிதியை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைப்பார்கள். ஆனால் ஸ்டாலின் அதற்கு ஒப்புக் கொள்ளப்போவதில்லை.
பேசாமல் 'உலக மகா ஊழல் மன்னன்' என்று அழையுங்கள்; அல்லது 'தமிழினத் துரோகி' என்று அழையுங்கள். ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ. க்களும் உண்மையைச் சொன்னதால் சந்தோஷப்படுவார்கள்; மக்களும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.
ஆகவே இனிமேல் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது, எதற்காவது கருணாநிதியைப் பற்றி குறிப்பிட வேண்டியிருந்தால், கருணாநிதியின் பெயரைச் சொல்லாது 'உலக மகா ஊழல் மன்னன்' அல்லது ' தமிழினத் துரோகி' என்றே அழைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். கோடானு கோடி தமிழக மக்களும் கருணாநிதியை இப்படி அழைப்பதையே விரும்புவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...