திருஷ்டி கழிய என்ன செய்ய வேண்டும்?
நாம் நேரமும்,காலமும் சரியாக இருந்தால் கூட மற்றவரின் திருஷ்டி(கண்ணுரு) பார்வை நம்மை வீழ்த்தகூடும்.திருஷ்டி கழிய எளிய பரிகாரம் என்னவென்றால்..,

எலுமிச்சையை நான்காக கீறிக்கொள்ளுங்கள், உள்ளே குங்குமம் வைத்து குடும்பத்தினர் தலையை இடமிருந்து வலமாக மூன்றுதடவை,வலமிருந்து இடமாக மூன்று தடவை சுற்றி தரையில் சாறு பிழிந்து விட வேண்டும். பின்பு நான்கு துண்டுகளையும் நான்கு மூலைக்கு ஒன்றாக வீசி விட வேண்டும்.
இரவு நேரத்தில் திருஷ்டி கழிக்க தாம்பல தட்டில் சூடம் ஏற்றி குடும்பத்தினர் தலையை இடமிருந்து வலமாக மூன்றுதடவை,வலமிருந்து இடமாக மூன்று தடவை சுற்றி வாசலில் போட வேண்டும்.
மேற்கண்டவாறு செய்தால் கண்டிப்பாக நம் மீது இருக்கும் திருஷ்டி குறையும்.
No comments:
Post a Comment