Monday, July 18, 2016

அம்மா தியேட்டர்

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியில் சென்னை நகரில் 2 இடங்களில் அம்மா தியேட்டர்கள் வரவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
அம்மா திட்டங்கள் வரிசையில் முதலில் வந்தது அம்மா உணவகம். இது ஹிட் ஆனதைத் தொடர்ந்து அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் என ஏகப்பட்ட திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் அடுத்து அம்மா தியேட்டர் வரவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இரண்டு இடங்களில் அம்மா தியேட்டர் வரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி முடுக்க விட்டுள்ளது.
ஷெனாய் நகரில் ஒரு தியேட்டரும், தி.நகரில் இன்னொரு தியேட்டரும் திறக்கப்படவுள்ளது.
இதில் ஷெனாய் நகரில் வரும் அரங்கம் 3000 பேர் அமரக் கூடிய அளவுக்கு பிரமாண்டமானது. முழுமையாக ஏசி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தி நகரில் உள்ள பிரபலமான பிட்டி தியாகராயர் அரங்கமும் முழுமையாக ஏசி செய்யப்பட்டது. இந்த இரண்டு அரங்கங்களையும் முழு அளவில் தியேட்டராக மாற்ற தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நலிவடைந்த பிரிவினரை இலக்காக கொண்டு இந்த அம்மா தியேட்டர் அமைவதால் இங்கு டிக்கெட் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது குறைந்தது ரூ. 10 என்றும் அதிகபட்சம் ரூ. 30 என்றும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...