7 இரவுகள் தொடர்ச்சியாக மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . .
7 இரவுகள் தொடர்ச்சியாக மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . .
முதலில் எல்லாம் கூட்டுக்குடும்பங்கள் அதிகமாக இருந்தன• அந்த குடும் பங்களில் உள்ள பாட்டி, குழந்தைகளுக்கு அல்லது வேறு
யாருக்காவது சிறு நோய் பாதித்தாலும் உடனடியாக கை வைத்தியத்தை சொல்வார்கள். ஆனால் இன்றோ தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்டது. இதனால், சிறு நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் சென் று சம்பாதிக்கும் பண த்தில் பெரும்பங்கினை அழுதுவிட்டு வருகிறோம். சரி அதை விடுங்க• 7 இரவுகள் தொடர்ச்சியாக மிளகு பால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் என்ன மாதிரியாக நோய்களை விரட்டும் என்பதையும் அந்த மிளகு பாலை எப்படி தயாரிப்பது என்பதையும் இங்கு காண்போம்.
வேண்டிய அளவு மிளகு எடுத்து அதனை நன்றாக தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக பால் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒருசிட்டிகை மிளகுதூளை போட்டுகலக்குங்கள். அதன்பிறகு மஞ்சள் தூள் ஒரு சிட்டிகையும், கொஞ்சம் பனங்கற்கண்டையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய பிறகு அந்த பாலை சளி இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத் து குடிக்கச்சொல்லுங்கள். இதேபோல் 7 இரவுகள் தொடர்ச் சியாக மிளகுபாலை குடித்து வந்தால் அவர்களை பாதிப்படைச் செய்த சளியும் இருமலும் வந்தசுவடு தெரியாமல் ஓடி மறையு ம். இது உண்மையே இன்றும் கிராமங்கள் கை வைத்தி யமாக பலர் கடைபிடிக்கின்றனர். இந்த மிளகின் காரமு ம், மஞ்சளின் நோய்எதிர்ப்பு சக்தியும் பனங்கற்கண்டின் வீரியமும் உடலில் ஒன்று சேரும்போது, எப்பேற்பட்ட இருமலும், சளியும் மட்டுமல்ல தொண்டைவலியும் கூட பறந்தோடி விடும்.
No comments:
Post a Comment