Kabali MOvie Review - From Sanfrancisco - Bay Area - Special Screening......
நேற்று அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள பே ஏரியாவில் கபாலி சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதில் ரஜினியும் அவர் மகளும் கலந்து கொண்டார்கள்.
இது எனது நண்பர் பார்த்து ரெவ்யூ செய்த விஷயத்தை நான் கூறுகிறேன்......அவரும் சினிமா ஆள் என்பதால் மாற்றூக்கருத்து இருக்காது என நம்புகிறேன்.
சிவாஜி படம் போல ஜெயில்ல இருந்து அரம்பிச்சி இருக்காங்க........... ரஜினியை ஒரு தலீத் தலைவராக உருவாக்கியதில் ஆச்சர்யம் இல்லை என் என்றால் இது ரஞ்சித்தின் திரைப்படம் என்பதால். ரஜினி சாதாரண மனிதரில் இருந்து விஞ்சானி வரை இந்தியாவில பல படங்கள் நடித்து விட்டதால் இந்த தடவை மலேஷியாவில் நடக்கும் கதையாக பிளாட் செய்திருக்கின்றனர். மலேஷியாவில் தமிழர்கள் படும் கொடுமைகள் என ஆரம்பித்து தலைவராகி இங்கிட்டு அங்கிட்டும் ரஜினியை நடக்க வைத்தே டையர்டாக்கிட்டாங்க பட டீம்.
என்னை மாதிரி அடிப்படை ரஜினி ரசிகர்களூக்கு இந்த படம் கண்டிப்பாய் பிடிக்கும் ஏன் என்றால் ரஜினியின் பல கெட்டப் பிம்பங்கள் வந்து செல்கின்றன. நிறைய மான்டேஜ்கள் நிறைய ஹை ஸ்பீட் ஷாட்கள் என படம் முழுதும் ரஜினி பிரான்டு தான். ரஜினியின் காமெடி ஃபார்முல மருந்துக்கு கூட இல்லை. பட் சீரியஸான படம். இனிமேல் ரஜினி அரசியலுக்கு வருவாரா நமக்கு ஏதாவது செய்வாரானு மலேஷய தமிழர்கள் என்னுவார்கள் என்பதில் மாற்றூ கருத்தில்லை.
நான் ரஜினி ரசிகர்களுக்கு நீங்கள் நொட்டை சொல்ல ஆயிரம் விஷயங்கள் உள்ளன. இரண்டாம் பாக தொய்வு மற்றூம் ரஜினி ரஜினி ரஜினி என திகட்ட வைக்கும் 52 ஸீன்களில் ரஜினியின் ஆதிக்கம். பல பேர் விமர்சனம் எழுதியே வச்சிருப்பீங்க அதை இன்னும் எடிட் செய்து மோசமாக்கி எழுதுவீங்கன்னு சத்யம் செய்து சொல்வேன்.
எனக்கு பில்லா 2 அஜித்தின் ஓவர் ஃபிளேவர் எப்படி படத்தை கவுத்ததோ அது போல தான் இதுவும்.
கபாலி - ஒரு வரி விமர்சனம்............ரஜினி ரசிகர்களுக்கு கபாலீஸ்வரன் போல ஒரு கடவுள்...........மற்ரவர்களுக்கு - கா(பா)லிடா!!!!!!!
No comments:
Post a Comment