Sunday, July 17, 2016

யாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே


இறைவனால் படைக்கப்பட்ட
யாவரும் ஒவ்வொறு
விதங்களில் உயர்ந்தவரே
ஒரு சமயம்
நம் கைகளில்
உள்ள விரல்கள்
ஒவ்வொன்றும்
நாம் தான் பெரியவன்
என்ற எண்ணம்
மேலோங்கியது
விளைவு
முதலில் கட்டைவிரல்
சொன்னது நான்
இல்லாமல் உங்கள்
நால்வராலும்
எந்த ஒரு வேலையையும்
ஒழுங்காக
செய்ய முடியாது
என்றதாம்,
இரண்டாவதாக
சுட்டு விரல்
நீ நல்லவன்,
நீ குற்றவாளி ,
நீ குற்றமற்றவன்
என சுட்டி காட்டுவது
நானே எனவே
நானே உயர்ந்தவன்
என்றதாம்
, மூன்றாவதாக
நடுவிரல் சொல்லியது
அனைவரும்
நிமிர்ந்து நில்லுங்கள்
யார் உயரம்
என இப்போது
பாருங்கள் என்றதாம்,
அடுத்த நான்காவதாக
மோதிர விரல்
கூறியது
என் பெயரே
Ring finger
விலை உயர்ந்த
முத்து, வைரம்,
மரகதம்
போன்நவற்றை
தங்கத்தோடு
இணைத்து
என் விரலில்
தான் மாட்டி அழகு
பார்ப்பார்கள்,
எனவே நானே
உயர்ந்தவன் என்றதாம்
ஐந்தாம் விரலோ
சுண்டு விரல் அது
அமைதியாக ஒன்றும்
பேசாமல் இருந்ததை
கண்ட மற்ற நான்கு
விரல்களும்
அதை கேலி செய்ய
துவங்கியது
ஏ சுண்டு விரலே
நீ தான் உயர்ந்தவன்
என்று ஏதாவது
சொல்லேன் என்று
மற்றவிரல்கள் நச்சரித்தது
இதுவரை 
பொறுமை காத்து 
அமைதியாக இருந்த
சுண்டு விரல்
பேச துவங்கியது 
பெரியோர்களையும்,
இறைவனையும்
வணங்கும் போது
நானே முன்னிருக்கிறேன்
நீங்கள் அனைவரும்
என் பின்னே தான்
ஆகவே நானே
உயர்ந்தவன் என்று
சொல்லி தெரிவதில்லை
என அடக்கமாக
பதிலுரைத்து
அமைதியாக
இருந்ததாம்
இப்படி இறைவனின்
படைப்பில் அனைவரும்
உயர்ந்தவரே என்று
சொல்லி தெரிவதில்லை
என்பதும்உண்மைதானே ............

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...