நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' - இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’.
சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால் ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக்கும் ரூட் தெரியலை.
அந்த நொடிதான் சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம். ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு. அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
86 95 95 95 95 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம். அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
No comments:
Post a Comment