Sunday, July 17, 2016

பன்பு

அண்மையில் Florida வில் ஒரு 
சுவாரஸ்சியமான சம்பவம் நடந்திருக்கின்றது.
ஒரே வகுப்பில் படித்த இருவர்
நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் 
ஒருவர் நீதிபதியாக,மற்றவர் குற்றவாளியாக.
தீர்ப்பு வழங்குமுன் அங்கிருந்த
பெண் நீதிபதி நீங்கள் Nautilus Middle
என்ற கல்லூரியில் என்னோடு
ஒன்றாகப் படித்த நண்பர்தானே
என்று குற்றவாளியுடன் அறிமுகமாகின்றார்.
தனது பாடசாலை நண்பிதான் நீதிபதி
என்று அறிந்து கொள்ளும் குற்றவாளி
கண்ணீர்விட்டு அழுகிறார்.


பின்னர் அந்த பெண் நீதிபதி :
உங்களை இப்படி சந்திக்கக் கிடைத்ததை
எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
எமது கல்லூரியில் இருந்த சிறந்த
Foot Ball வீரர் இவர். கல்லூரிக் காலத்தில்
மிகத் திறமையான மாணவர் என்று
அந்த குற்றவாளி நண்பரை மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்தினார் நீதிபதி.
அதோடு உங்களது பாதையை மாற்றிக்
கொள்ளுங்கள் என்று கூறி தனது நண்பருக்கு
வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஒரு நல்ல நிலமைக்கு வந்ததும்
ஒன்றாக இருந்த நண்பர்களை கண்டும்
காணமல் இருப்பவர்களுக்கு மத்தியில்
ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு ஒரு
குற்றவாளியை தனது நெருங்கிய
நண்பர் என்று அறிமுகம் செய்த அந்த
பெண் நீதிபதியின் பன்பு அழகானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...