திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறக்கும் போது என்ன நிகழும்?.
திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும் போது குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.
சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அது சமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்து விட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்று விடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.
சாதாரணமாக உப்பு நீரில் -கடலில்தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது தோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரில்தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலட்ச தீப திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02/08/16 குரு பெயர்ச்சி அன்று நடைபெற உள்ளது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்ச தீபத் திருவிழா கொண்டாடப் படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்கு தீர்த்த குளக்கரையிலும் லட்சக் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.
இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.
அம்மையும் இங்கு சுயம்புவானவள்.
ஓம் நமசிவாய. திருசிற்றம்பலம்.
No comments:
Post a Comment