சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியை சந்தித்த சீன அதிகாரிகள் அம்மா உணவகம் பற்றி விசாரித்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட சீனப் பயணத்தின் போது, இருநாடுகளின் நகரங்களுக்கு இடையே நிர்வாக ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தப்படி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கடந்த ஆண்டு சீனாவின் சொங்கிங் மாநகராட்சிக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்டும் நிர்வாகப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து, சீனாவின் சொங்கிங் மாநகர மேயர் ஹூவாங் சிபான் தலைமையில் சீன அதிகாரிகள் 5 பேர் சென்னைக்கு வந்தனர். அவர்கள் சென்னை மாநகராட்சி மேயரைச் சந்தித்து பேசினார்கள். அப்போது, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பொதுசுகாதாரம் உள்ளிட்டவற்றில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மேயர் சைதை துரைசாமி விளக்கினார்.
சீன அதிகாரிகளிடம் அம்மா உணவகம் பற்றி கூறியபோது சீனா அதிகாரிகள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். மேலும், அம்மா உணவகம் திட்டம் பற்றிய விவரங்களை விளக்கமாக கேட்டறிந்தனர்.
பொதுவுடைமை நாடான சீனாவில் அம்மா உணவகம் போன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சைதை துரைசாமி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு சீன நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ய அழைப்பது, ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை சென்னையில் அமைக்க கோருவது, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இருநாடுகளிடையே மாணவர்களை ஏற்பது, சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் சீன அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டன.
சீன அதிகாரிகள் 5 பேருக்கும் ஆங்கிலம் தெரியாததால், அவர்கள் சீன மொழியிலேயே பேசினர். அவர்களுடன் வந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் சைதை துரைசாமி கூறியவற்றை சீன அதிகாரிகளுக்கு மொழிபெயர்த்துக் கூறினார்.

No comments:
Post a Comment