Tuesday, July 12, 2016

‪#‎தேங்காய்_கதை_தெரியுமா‬?

சிவதரிசனம் முடிந்து அனைவரும் திரும்பிக் காெண்டிருந்தார்கள். ஒரு தேங்காய் மட்டும் ஆணவத்தாேடு சிவபெ ருமனை நெருங்கி பேசத் தாெடங்கியது.
சிவபெருமானுக்குதேங்காய்க்கும் நடந்த உரையாடல்.....

" நான் தே வர்களையே காய் (காேபிப்) ப்பவன் அதனால்தான்எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது தெரியுமா?" எனக்கேட்டு தானும் சிவபெருமானும் ஒன்று என வாய்ப்பந்தல் பாேட்டது.அதன் நாேக்கம் அறிந்த சிவபெருமானும், "அப்படியா? நான் கெ ட் டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே" என்றார்.தேங்காய் விடவில்லை. நானும்கூடதான் மேலே கெ ட் டியானஓடு வைத்திருக்கிறேன்.
தேங்காய் ஓடு என்பார்களே கேள்விப்பட்டதில்லையா?" என்றது இறுமாப்பாேடு.சிவபெருமான் தாெடர்ந்தார்."யானை,புலி பாேன்றவற்றை உரித்திருக்கிறேனே" என்று சாெல்ல, தேங்காய் , "நான்கூடதான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்" என்றது இறுமாப்பாக.
சிவபெருமான் மேலும் பாெறுமையாக, "சரி...சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளைவெளேரென்று விளங்குகிறேனே" என்றார்.தேங்காயாே மேலும் ஆண வத்தாே டு, " எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கை யா க வே நான் வெள்ளையாக த்தான் இருக்கிறேன்" என்றது.
"நான் கங்கையைத் தாங்குகிறேன்" என்றார் சிவன்."நான் இளநீரைத் தாங்குகிறேன்" என்றது தேங்காய்."எனக்கு மூன்று கண்கள்" என்று சிவபெருமான் சாெல்லத் தாெடங்கியதுமே இடைமறித்த தேங்காய், "அட..... எனக்கும்கூடதான்மூன்று கண்கள் உள்ளன" என்றது.
"நான் மறைகளி ன் முடியி்ல் இருக்கிறேன்" என்றார் சிவன்."நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்" என்றது தேங்காய்."எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே" என்றார் சிவபெருமான்."எனக்கும்தான் குடுமி இருக்கிறது" என்றது தேங்காய்.
ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான், "தேங்காயே... பணிவு என்பதே காெஞ்சமும் இல்லாத அகம்பாவம் பிடித்த நீ சிதறும்படியாக எல்லாரும் உன்னை உடைக்கட்டும்" என்றார்.
அடக்கம் இல்லாமல் ஆணவமாகப் பேசினால் சிதறுகாயாக நம்வாழ்க்கை சிதறிப்பாேகும் என்று உணர்த்துகிறது இந்தக்கதை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...