Monday, July 25, 2016

*குரு*

*ஆடி மாதப் பௌர்ணமியை ஆஷாட பௌர்ணமி, ஆஷாட பூர்ணிமா, ஆஷாட பூர்ணிமா, வியாச பௌர்ணமி, குரு பூர்ணிமா என்று பல பெயர்களில் போற்றுவர்*.
இது குரு வழிபாட்டுக்கு உகந்த நாள். குரு என்றால் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி நினைவுக்கு வருவார். அதுபோல தேவகுருவான வியாழனும், அசுரகுருவான சுக்கிரனும் நினைவுக்கு வருவர். புராண இதிகாசங்களை இயற்றிய வியாசரை அனைவருமே குருவாகக் கொள்வர். மேலும்...
(1) சாத்திரங்களின் பொருளை மாணவர்களுக்கு போதிப்பவர் *போத குரு* ஆவார்.
(2) தத்துவார்த்தங்களை விளங்கக் கூறுபவர் *வேத குரு.*
(3) தங்கத்தைப் புடம் போடப் போட அதன் உண்மைத்தன்மை தெரியும்; சுடர் விட்டுப் பிரகாசிக்கும். அதுபோல மாணவர்களுக்கு பல பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய அறிவை பொன்னாகச் சுடரச் செய்பவர் *தாதுவாதி குரு.*
(4) சந்தன மரமானது, தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணம் பரப்பி ரம்மியமான சூழ்நிலையை ஏற்படுத்துவதுபோல, தன்னிடமுள்ள ஆற்றலைத் தன் மாணவர்களுக்கு அளித்து மணம் வீசச் செய்பவர் *சந்தன குரு*.
(5) மாணவர்களிடமுள்ள ஆற்றலையும், சிந்தனையையும் தூண்டிவிட்டு, அவர்களை இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுவித்து பரப்பிரும்மத்தை நோக்கி அழைத்துச் செல்பவர் *விசார குரு*.
(6) தன் மாணவர்கள் முழுமையாக சிறந்து விளங்க அருள் புரிந்து நல்வழிப்படுத்துபவர் *அனுக்கிரக குரு*.
(7) தனது செயல்திறனையும் அனுபவத்தையும் மாணவர்களின் மனதில் பதியவைத்து, அவர்களை உயர்த்திக் கொள்ளச் செய்பவர் *பராசர குரு*.
(8) ஆமையானது மணலில் புதைத்து வைத்திருக்கும் தன் முட்டைகளை நினைவினாலேயே பொரித்துவிடும் திறன் கொண்டது. அதுபோல் மேன்மையடையச் செய்பவர் *கச்சப குரு*.
(9) முழு நிலவின் ஒளியில் சந்திரகாந்தக்கல் இளகும். அதுபோல் தன் ஒளி வீச்சால் மாணவர்களை தீட்சண்யம் பெறவைப்பவர் *சந்திர குரு*.
(10) மந்திரக் கலைகளை ஆராய்ந்து, அவற்றுள் கூறப்பட்டுள்ள கிரியைகளை அனுஷ்டிப்பதால் வரும் விஷயானந்தத்தைத் தானும் அனுபவித்து, மாணவனுக்கும் அந்த அனுபவத்தைத் தருபவர் *கிரியா குரு*.
(11) மந்திர தந்திர கலைகளைவிட்டு, மகாவாக்கிய உபதேசக்கலையை ஆராய்ந்து, அவற்றுள் உள்ள ஞானானந்தத்தைத் தானும் பெற்று, தன்னை அடைந்த மாணவனுக்கும் அருள்பவர் *ஞான குரு*.
(12) சொல்லாமல் சொல்வதுபோல் தீட்சண்ய பார்வையால் புரிய வைப்பவர் *மௌன குரு*.
13.சூரிய ஒளியை ஒரு ஆடியின் மூலம் (லென்ஸ்) ஓரிடத்தில் குவிக்கும்போது, அதன் ஒளி பன்மடங்கு பெருகி அங்குள்ள பொருளை அரியச் செய்யும். அதுபோல தன் மாணவர்கள் திடீரென்று அருள்பெறும் சக்தியை அளிப்பவர் *சூரியகாந்த குரு*.
14. தர்ப்பணம் என்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி என்ற பொருளும் உண்டு. உள்ளதை உள்ளபடியே பிரதிபலிப்பது கண்ணாடி. அதுபோல மாணவர்களின் மனநிலையை உள்ளபடி அறிந்து, அவர்களுடைய அறியாமையைப் போக்குபவர் *தர்ப்பண குரு*.
15. ஒரு குறிப்பிட்ட பறவையின் நிழல் பூமியில் படும்போது அங்குள்ள பொருட்கள் பொன்னாக மாறும் என்பர். அதுபோல் தச்ன் நிழல்பட்ட மாத்திரத்திலேயே அறியாமையை நீங்கச் செய்பவர் *சாயாநிதி குரு*.
16. ஒருவகையான சப்தஸ்வரக் கல்லிலிருந்து வெளிப்படும் ஒலி சுற்றுச்சூழலை இனிமையாக்கும் தன்மை கொண்டது. அதுபோல் தன் சொல்லால் மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உயர்த்தி விடுபவர் *நாதநிதி குரு*.
17. வசியம் முதலிய வித்தைகளை போதிப்பவர் *நிஷத்த குரு*.
18. இம்மை-மறுமை இன்பத்தை விளக்குபவர் *காமிய குரு*.
19. நித்தியம்-அநித்தியம் என்னும் விவேகத்தை போதிப்பவர் *சூசக குரு*.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...