Tuesday, July 26, 2016

காலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்

சூரியன் உலகிற்கு கண்ணால் காணும் முதல் கடவுள், சூரிய நாராயணன் என்பர்.
வேறுபெயர்கள் ஆதவன், பாஸ்கரன், ஞாயிறு. லோகமித்ரன்
பன்னிரண்டு மாதத்திலும் ஒவ்வொரு வடிவில் தோன்றுவதால் காலநிலையும் மாறும்.
சித்திரை-தத்தா, ததா- உயிர்களுக்கு வெப்பத்தை தருபவன்-கத்ரி.
வைகாசி-ஆர்யமா- காற்று.
ஆனி-மித்ரன் -சந்திரனுக்கு ஒளி, சமுத்திரங்களை கட்டுப்படுத்துதல்.
ஆடி-வருணன்- காற்று, மழை.
ஆவணி-இந்திரன்- மழை, இடி.
புரட்டாசி- விவஸ்வான்- அக்னிக்கு ஆதாரம்.
ஐப்பசி-துவஷ்டா- மூலிகைகளும் தாவரங்களும் வளர ஒளி. கார்த்திகை- சூர்யநாராயணன்- சிவஞோதி, விஷ்ணு தீபப்பிகாசர்.
மார்கழி- அம்சுமான்- குளிர்ப்பனி, இதமான வெப்பம்.
தை-பகலவன்- உயிர் நிலைக்க வெம்மை.
மாசி- பூஷன்- விதை முளைக்க வெப்பம்.
பங்குனி-பர்ஜன்யன்- ஆறு, குளநீரை அள்ளி மேகமாய் பரவி தெளிப்பது.
உகந்த நாட்கள்- ஞாயிற்றுக்கிழமை. எந்நாளும் வழிபடலாம்(சூரிய உதயத்தின்போது)
உகந்த மலர்கள்- செந்தாமரை மற்றும் சிகப்பு நிற மலர்கள்
நிவேதனம்- சூடான நிவேதனம்- கோதுமையால் செய்த இனிப்பு அல்லது சர்க்கரைப் பொங்கல்
விழாதினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்- மகர சங்கராந்தி. உயிர்களின் உணவுக்கு தாவரங்கள் தானியங்கள் மிக மிக முக்கியம். தாவரங்களுத் தேவையான வெப்பத்தையும், நீரையும் சூரியன் மூலமாகவே பெறுகின்றன.
சூரியகதிர்கள் வெப்பம், ஒளி, மழை தருவன. சர்வேஸ்வரனின் பிரதிநிதியாகிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவே இந்நாளில் பொங்கலிட்டு படையல் சாத்துகின்றோம்.
சிறப்புகள் பொதுவான காயத்திரி மந்திரம் சூரியனின் ஆற்றலை நோக்கி கூறியதாகும். சிவனின் அட்டமூர்த்தங்களில் சூரியனும் ஒன்று. உயிருள்ள, உயிரற்ற பொருளகள் எல்லாவற்றின் ஆத்மா சூரியன் என ரிக் வேதம் சொல்கின்றது. எல்லாப் புராணங்களிலும் சூரியன் சிறப்பாக போற்றப்படுகின்றது. நம் வாழ்வின் ஓர் அங்கம். ஆரோக்கிய வாழ்வு தரும் நம் கண்களாலேயே காணப்படும் கண்கண்ட கடவுள். தினமும் காணும் ஓர் அற்புத சக்தி.
ஏற்ற திதி- ரத சப்தமி- சூரிய ஜெயந்தி, ரத சப்தமி- உத்ராயண தை அமாவாசைக்குப் பின் சுக்லபட்ச சப்தமி அன்று வரும். அன்றுதான் ரத சப்தமி எனப்படும். சூரியன் தன் தட்சிணாயனப் (தெற்கு நோக்கிய) பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிப் பயனப்படும் நாள். அன்று காலையில் வாசலில் தேர்க் கோலமிட்டு, ஏழு எருக்கு இலைகள், அருகம்புல், ஏகாமயம் (சாணம்) அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை தியானம் செய்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஸ்நானம் செய்யவும்."யத்யத் கர்மக்ருதம் பாபம் மயாஸப்தஸூ தன்மே ரோகம் சசோகம்சமா கரீ ஹந்து சப்தமீ" அதாவது ஏழு ஜென்மங்களில் என்ன பாபம் செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்த ரதசப்தமி ஸ்நானம் நீக்கட்டும் என்பதாகும். அதிகாலையில் எழுந்து குளித்து ஆதித்ய ஹிருதயம், சூரிய அஷ்டோத்திரம் படிப்பது நன்று. திரு அண்ணாமலை சேஷாத்திரி, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் அவதரித்த நாள். பீஷ்மர் மனம், வாக்கு, செயல் மூன்றாலும் பாவம் செய்யாமலிருந்தும் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் பாவச்செயலை கண்டித்து தடுக்கவில்லை என்பதனால் அவர் விரும்பும்போது உயிர்போகும் என்ற வரம் பெற்றிருந்தும் உத்ராயண காலம் வந்ததும் உயிர்போக விரும்பியும் போகமல் துன்பம் மேலிட வியாசரிடம் கேட்டபோதுபோது 2எருக்க இலைகளை கண்களின்மீதும் 3 எருக்க இலைகளை கழுத்திலும் வைத்து அதன் மீது சூரிய ஒளி படும்படிச் செய்து சூரியனை வேண்டச் சொல்லி கங்கை நீரால் நீராட்ட அவரது பாவங்கள் தீர்ந்தன. சூரியன் கதிர்கள் அவருக்கு முக்தி வழங்கிய நாள்.
வணங்கும் முறை- தினமும் காலை குளித்ததும் தூய உடம்புடன் சூரியனைப் பார்த்து வணங்கவும். நீர் நிலைகளில் குளித்தாலும் அங்கிருந்தபடியே சூரிய வணக்கம் செய்வது சிறந்தது. வீட்டில் சூரிய கிரணங்கள் உங்கள்மேல் விழும் இடத்தில் நின்று கொண்டு சூரிய வணக்கத்திற்குரிய சுலோகங்களைச் சொல்லி வணங்கவும். குருஜியின் நவகிரக துதிப்பாடல்கள் பகுதியிலிருந்து உங்கள் விருப்பினைப் பொறுத்து தேர்வு செய்து சொல்லவும். நிரந்தர பலன் கிடைக்கும். தினமும் ஆதித்தன் வழிபாடு அன்றைய நிகழ்வுகளுக்கு உதவி புரிவதாய் அமையும்.
சூரிய ஜெயந்தி காரண நிகழ்வு: காஷ்யப முனிவரின் மனைவி அதிதி. கணவனுக்கு உணவளித்துக் கொண்டிருந்த காரணத்தினால் வாசலில் யாசகம் கேட்ட அந்தணருக்கு மெதுவாக உணவளித்ததால் கோபமுற்ற அந்தணர், எந்தக் கர்பத்தைக் காக்க மெதுவாக வந்து யாசகமிட்டாயோ அந்தக் கர்ப்பம் கலைவது என சாபமிட்டான். முனிவரிடம் நடந்ததைக் கூற காஷ்யப முனிவர் சிவபெருமானைத் தியானித்து ஏழு எருக்க இலைகளை அவள் தலையிலும், தோள்களிலும் வைத்து சூரியன்முன் சிறிது நேரம் நிறுத்தி வணங்கி நீராடச் செய்தார். அமுதம்போல் அணைவரையும் வாழவைக்கும் மகன் பிறப்பான் என ஆசி கூறினார். அவ்வண்ணமே சூரிய பகவான் ரதசப்தமியன்று தோன்றினார்- அதனால் அன்று அவரது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
சூரியனின் ரதசாரதி கருடனின் சகோதரனான அருணன். சூரியனின் புதல்வர்களே யமன், சனி, சுக்ரீவன், கர்ணன். சூரியன் அருளால் அட்சய பாத்திரம் பெற்றனர் பாண்டவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...