பல இடங்களில் யாகங்கள் நடைபெறுகின்றன.அதற்கு அதிகம் பணம் செலவழிகிறது.இப்பணத்தை ஏழைகளுக்கு கொடுத்திருந்தால் நன்மை அடைவார்கள் என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது சரியா ?
யாகத்திற்கு நாம் செலவழிப்பது , ஜனங்கள் லௌகீக பொருள்களுக்கு செலவழிப்பதில் ஒரு சிறு பகுதி கூட ஆகாது. யாகத்தின் மூலம் இறைவன் திருப்தியுற்று அவர் கிருபையால் நாம் செலவிட்ட பொருள்களைக்காட்டிலும் அதிக பலன் கிடைக்கும். உதாரணமாக ,இறைவன் யாகத்தினால் திருப்தியடைந்து தக்க காலங்களில் சரியான அளவு மழையை தருகிறான்.ஆதலால் யாகங்களை வீண் செலவு என்று கூற முடியாது. விதைகளை நாம் நிலத்தில் இட்டால் பின் நல்ல விளைச்சல் கிடைக்கும். இதை விடுத்து விதைகளை வீணாக போடுகிறோமே , அப்படியே சாப்பிடலாமே என்று கூறுவது பொருத்தமா? விதைகளை வயலில் இட்டால் தான் தானியங்கள் கிடைக்கும். அதேபோல் யாகத்திற்காக சிறிது நாம் கஷ்டப்பட்டாலும் உத்தமமான பலன் கிடைக்கும். சாஸ்திரங்களும் எந்த அளவிற்கு ஒருவனுக்கு சாமர்த்தியம் உண்டோ , அவ்வளவிற்கு ஒருவன் யாகத்தை செய்ய வேண்டும் என்று கூறுவதிலிருந்து மிகவும் செலவாகும் ஒரு யாகத்தை ஏழை செய்யுமாறு சாஸ்திரம் கூறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆதலால் நாம் யாகத்தில் செலவழிப்பது நம் நன்மைக்காகத்தான். அதை வீண் செலவாக கருதுதல் தவறு.

No comments:
Post a Comment