Sunday, July 17, 2016

"தாயுமானவன்"

நம்முடைய எல்லோர் அப்பாவும் இப்படித்தான்:
1) எனக்கு ஐந்து வயது இருக்கும் போது அடிக்கடி தூக்கத்தில் அழுவேன்,சினுங்குவேன்,தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக்கொடுத்தார்...
2)பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக்கொடுத்து,அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தினார்...
3) பதினெட்டு வயது இருக்கும் போது இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் படிப்பிற்காக இழந்தார்...
4) இருபத்திரண்டு வயது இருக்கும் போது தன் மரியாதையை விட்டுக்கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக்கதவைத் தட்டினார்...
5)இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்திற்காக அவரின் அனைத்து சொத்துக்கள் அனைத்தையும் எனக்காக எழுதி கொடுத்தார்...
6) எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடை கொடுத்து அவர் மட்டும் " ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம்" கடையில் ஆடை எடுத்தார்...
7) எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளை கூட குறைத்துக்கொண்டார்,தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அக்கறை காட்டினார்..
"இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்க்கும் பின்,
எண்ணிலடங்கா அவரின் இழப்பு இருக்கிறது"

ன்னை சிலையாக்க
தன்னை உளியாக்கி
தியாகம் செய்த "தாயுமானவன்" என் தந்தை|
■●■ எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும்,நம் தந்தையைப் போல் யார் இருக்க முடியும்????????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...