பெண்மைக்குள் குடியிருக்கும் உண்மைகளைi
பட்டியலிட்டு சிறந்ததை விளக்கினால் பரிசு உண்டு
உனக்கென்றார்கள் பட்டிமன்றப்போட்டியொன்றில்;
நினைவால்அடுக்கத் தொடங்கினேன் உடனே;
நான் அறிந்த உண்மைகளை;
பட்டியலிட்டு சிறந்ததை விளக்கினால் பரிசு உண்டு
உனக்கென்றார்கள் பட்டிமன்றப்போட்டியொன்றில்;
நினைவால்அடுக்கத் தொடங்கினேன் உடனே;
நான் அறிந்த உண்மைகளை;
அன்பின் அருஞ்சொற்பொருள் அகராதி;
பாசத்தின் மறுபக்கம்;
பசியரக்கனை பணியவைக்கும் பரதேவதை;
அனாதை நெஞ்சங்களின் சரணாலயம்;
பாசத்தின் மறுபக்கம்;
பசியரக்கனை பணியவைக்கும் பரதேவதை;
அனாதை நெஞ்சங்களின் சரணாலயம்;
பெருக்கெடுக்கும் சந்ததி ஆறுகளின் மூல நதி;
படைத்தவனும் தனை மறக்கும் அழகு;
கருவிழிக்குள் கடலை அடக்கும் அதிசயம்;
சதையாலான சிதையாத சிற்பம்;
படைத்தவனும் தனை மறக்கும் அழகு;
கருவிழிக்குள் கடலை அடக்கும் அதிசயம்;
சதையாலான சிதையாத சிற்பம்;
அவசரபுத்தியின் அன்யோன்யத் தோழி;
காதல் சாம்ராஜ்யத்தின் கருவூலம்;
சந்தேக உலகின் சக்ரவர்த்தினி;
மௌனத்தை மொழியாக்கும் வித்தகி;
காதல் சாம்ராஜ்யத்தின் கருவூலம்;
சந்தேக உலகின் சக்ரவர்த்தினி;
மௌனத்தை மொழியாக்கும் வித்தகி;
தன் கால் நகத்தினாலும் கயவர்களை;
கண்டறிந்து விலகும் வினோத சக்தி;
மனதில் தோன்றியதில் ஏதாவதொன்றை
சொல்லி வெல்லலாம் பரிசை என்றால்
இப்படியாக சொன்னதொன்றில் ஏதோ ஒன்றாகவோ
எல்லாமாகவோ நீ இல்லாமல்
மொத்தத்தில் புதிர்களின் குதிராக இருப்பதால்
கண்டறிந்து விலகும் வினோத சக்தி;
மனதில் தோன்றியதில் ஏதாவதொன்றை
சொல்லி வெல்லலாம் பரிசை என்றால்
இப்படியாக சொன்னதொன்றில் ஏதோ ஒன்றாகவோ
எல்லாமாகவோ நீ இல்லாமல்
மொத்தத்தில் புதிர்களின் குதிராக இருப்பதால்
விடை சொல்ல இயலாமல்
திகைத்து திரும்பிவிட்டேன்;;
பரிசாக நீயே போதுமென்று!!!
திகைத்து திரும்பிவிட்டேன்;;
பரிசாக நீயே போதுமென்று!!!
No comments:
Post a Comment