Tuesday, September 6, 2016

பெரும்பாலும் மக்கள் நல்ல மனசோட தான் இருந்தாங்க.

ஐய்யே துணிக்கு இப்படி சோப்பு போட கூடாது. இத்தனை தேய் தேய்ச்சா அலச லாரி தண்ணி வேணும். காலருக்கு எல்லாம் பிரஸ் போட்டு தேய்க்கனும் இதை எல்லாம் உங்க அம்மா சொல்லிக்கொடுக்கலையா? பக்கத்து வீட்டு அக்கா
எங்க அம்மா துணி துவைக்கும் போது எங்க நான் கிட்ட போனேன் அப்படினு மனசுக்குள்ள நினைச்சுட்டு நின்ன காலத்துல இந்த பக்கத்து வீட்டு அக்காங்கள் தான் நமக்கு எல்லாமே. இன்னைக்கு அம்மா கிட்ட கத்துக்கிட்ட சமையல் அப்படினு சொல்லிக்கிட்டாலும் நமக்கு மிகப்பெரிய டிரெயினர் இந்த அடுத்த வீட்டு அக்காங்கள் தான்.

வீட்டுல இருக்கும் போது பாதி நேரம் படிப்பு, விளையாட்டு, சுத்தமா செய்யலை, ஒழுங்க வெட்டலை நு சமையல் கட்டுக்கு தடா போட்டு வச்சு இருப்பாங்க. அதுவும் இல்லாம அப்ப எல்லாம் படிக்கும் போதோ படிச்சு முடிச்ச கையோடவோ கல்யாணத்தை பண்ணி துரத்துடுவாங்க மேக்சிமம் அடுத்தவங்க தான் நமக்கு கத்து கொடுப்பாங்க. ஆனா பேரை அம்மாவின் கைப்பக்குவம் தட்டிட்டு போயிடும்.
இப்போ தொட்டது தொன்னுறுக்கும் ஆலோசனை மையங்கள் இருக்கு ஆனா அப்போ எதுவா இருந்தாலும் அது புடவையா இருந்தாலும் சரி பையனுக்கு பொண்ணு பாக்க போறதா இருந்தாலும் பக்கத்துவீட்டு மனுசிக்கு ஒரு முக்கிய இடம் இருந்துச்சு... பல வீடுகள்ல கல்யாணத்தையே நடத்தி வைக்கும் முக்கிய துருப்பு சீட்டு இவங்க கொடுக்கும் கேரக்ட்ட்ர் சர்ட்டிபிகேட் தான்.
ரிவீட் அடிக்கவும் வாய்ப்பு உண்டு ஆனாலும் அப்போ பெரும்பாலும் மக்கள் நல்ல மனசோட தான் இருந்தாங்க.
இப்படி எல்லாமுமா இருக்கும் அக்காக்கள் அப்போ அப்போ மாறிட்டே இருப்பாங்க நாம இடம் மாறும் போது எல்லாம். முன்ன குடியிருந்த வீட்டு பக்கத்து அக்காவா மாறிடுவாங்க... அதுல எந்தவித சங்கடங்களும் இருக்காது பழைய வீட்டு அக்காக்கு புதுசா ஒரு டிரெயினி கிடைச்சுடுவாங்க. அப்படி ஒரு அருமையான உறவு இந்த காலத்து மனுசங்களுக்கு கிடைக்காது என்பதில் வருத்தம் இருக்கும் அதே நேரத்தில் பெருமையாவும் இருக்கு நாம தான் அந்த கடைசி ஜெனரேஷன் என்று.
இன்னைக்கு யூ டியூப் ல பால் காய்ச்சுவது எப்படிங்கிறதுல இருந்து எல்லாமே வீடியோவா இருந்தாலும் கூட நின்னு சொல்லிக்கொடுத்தவங்க இன்னமும் மனசுல நிக்கறாங்க. கடந்து வந்த பாதையில் தொலைந்து போன உறவுகளில் இவர்கள் முக்கியமானவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...