Friday, September 2, 2016

உங்கள் விருப்பங்களைத் தகுதிகளாக எப்படி மாற்றுவது?

"உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகளைப் போலவே உங்கள் துயரங்கள் அனைத்தும் மறைந்து போகட்டும் " என்பது ஓர் இத்தாலியக் கூற்று.
எல்லோரும் ஆரோக்கியமாகவே இருக்க விரும்புகின்றனர்.
ஆனால்,
அவர்கள் அனைவரும் அதற்குத் தகுதியானவர்கள்தானா?
எல்லோரும் வெற்றிபெற விரும்புகிறார்கள்.
ஆனால்,
அவர்கள் அதைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள்தானா?
வாழ்வில் நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைப்பதில்லை.
நீங்கள் எதைப் பெறத் தகுதி வாய்ந்தவரோ அதை மட்டுமே பெறுகிறீர்கள்.
உங்கள் விருப்பங்களைத் தகுதிகளாக எப்படி மாற்றுவது?
ஆழமான விருப்பங்களுடன்,
சுயஊக்குவிப்புடன்கூடிய தொடர்முயற்சி
இணைந்து கொள்ளும்போது,
அவை தகுதி பெறுகின்றன.
முயற்சியற்ற நிலை முயற்சியின் வாயிலாகவே அடையப்படுகிறது.
"மேதமை என்பது 1% ஊக்கம். 99% சதவீத உழைப்பு." என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறினார்.
என் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் : "பிறரைப்போல் நான் புத்திசாலியாக இல்லையென்றால் அது குறித்து என்னால் எதுவும் செய்ய இயலாது.
உணர்ச்சிரீதியான பக்குவம் என்னிடம் இல்லையென்றால் அதை நான் எற்றுக்கொள்வேன்.
அது பெற்றோரிரைர் வளர்ப்பில் ஏற்பட்டத் தவறு,
ஆனால்,
பிறரைக் காட்டிலும் அதிக முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை என்றால்,
ஒருபோதும் என்னால் என்னை மன்னிக்க முடியாது.
ஏனெனில், அது என் தவறு ."
புதுவருடத் தீர்மானங்கள் குறித்து எடுக்கப்படும் முயற்சிகள்,
அந்த மாத இறுதிக்குள் மறைந்து போய்விடுகின்றன.
வெற்றிக்கான இரகசியங்களில் ஒன்று,
உடனடியான துவக்கமல்ல,
சுய துவக்கம்தான்.
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட இனிய காலைவணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...