Friday, September 2, 2016

பிளாஷ்பேக்: இளையராஜா நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது

இசை அமைப்பாளர் இளையராஜா ஒரு படத்தில் நடிக்க இருந்தார். இதற்கு அவர் ஒப்புக் கொண்டும் இருந்தார். கடைசி நேரத்தில் அந்தப் படம் கைவிடப்பட்டது.
ஒரு கொலையை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்து கொண்டிருந்த நேரம். அதைப்போன்ற ஒரு படத்தை தமிழில் தயாரிக்க நினைத்தார் பஞ்சு அருணாச்சலம். தமிழ்நாட்டில் நடந்த ஒரு பிரபலமான கொலை வழக்கை மையமாக வைத்து படம் எடுக்க தீர்மானித்தார். இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு இப்போதும் பிரபலம். இந்த வழக்கில் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைக்கு சென்று வந்தார்கள். இந்த வழக்கை படமாக எடுக்கலாம் என்று தீர்மானித்தார் பஞ்சு அருணாசச்சலம்.
ஆனால் அந்த வழக்கை அப்படியே சினிமாவாக எடுப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. இதனால் புதுமையாக ஒன்றை யோசித்தார் பஞ்சு அருணாசலம். அதாவது தற்போது பிரபலமாக உள்ள சினிமா பிரமுகர்கள் பற்றி ஒரு பத்திரிகையாளர் தவறாக எழுதிக் கொண்டிருக்கிறார். அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் அந்த பிரபலங்கள் தொடர்ந்து இப்படி எழுதினால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். மறுநாள் அந்த பத்திரிக்கையாளர் கொலை செய்யப்படுகிறார். பிரபலங்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த கொலைப்பழியில் இருந்து மீள்கிறார்கள் என்பது கதை.
இதில் அந்த கதையில் வரும் பிரபலங்களாக நிஜ பிரபலங்களையே நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இயக்குனர் மகேந்திரன், இசை அமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களே அந்த நிஜ பிரபலங்கள். மூவரும் அவரவர் கேரக்டர்களில் நடிக்க முடிவானது. இதற்கான போட்டோ ஷூட் நடத்தப்பட்டு விளம்பரமும் வெளியிடப்பட்டது. ஆனால் இசை அமைப்பில் இளையராஜா பிசியாகிவிட்டதால் அவரால் நடிக்க முடியவில்லை. அதோடு பலரும் இது ரொம்ப ரிஸ்க்கான வேலை என்றதால் அந்தப் படத்தை கைவிட்டார் பஞ்சு அருணாசலம். இந்த படம் தயாராகி இருந்தால் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாகி இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...