காவிரிப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தக்க சமயத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் காரணமாக 'ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு தர முடியாது' என்று கூறி வந்த கர்நாடக அரசு இப்போது வினாடிக்கு 11000 கன அடி நீரை கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடத் துவங்கியிருக்கிறது.
அது முல்லைப் பெரியாறு விஷயமானாலும், காவிரிப் பிரச்னையானாலும் தமிழகத்தின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் சிறிது கூட விட்டுக் கொடுக்காமல் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு முதல்வர் அவர்கள் வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிறுவாணி நீர்ப் பிரச்னையிலும் முதல்வர் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் நலன்களைப் பாதுகாப்பார் என்று உறுதியாக நம்பலாம்.
கருணாநிதியும் ஸ்டாலினும் அண்டை மாநிலங்களோடு நதி நீர்ப் பிரச்னைகளில் தாவா ஏற்படும்போதெல்லாம் பிரச்னைக்கு காரணமான கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதோ குறை கூறுவதோ இல்லை. எடுத்தவுடன் தமிழக அரசை குறை கூறுவதில்தான் முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள்.
சிறுவாணி பிரச்னை தொடர்பாக கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின் சிறுவாணியில் அணை கட்ட முயற்சி செய்யும் கேரள இடதுசாரி அரசை கண்டிப்பதை விட பிரச்னைக்கு காரணம் தமிழக அரசுதான் என்பது போல முழுக்க முழுக்க தமிழக அரசை குறை கூறியிருக்கிறார்
இப்படிப்பட்டவர் எல்லாம் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பது வெட்கக்கேடு.
திமுக ,தமிழக அரசியலிலிருந்து அகற்றப்படும்போதுதான் தமிழகத்திற்கு விடிவுகாலம் கிட்டும்.

No comments:
Post a Comment